Friday, 7 July 2017

1* மாலைச் சூரியனையோ ,மதியச் சூரியனையோ, நமஸ்கரிக்கக் கூடாது.காலைச் சூரியனை அதுவும் காலை 8.00மணிக்குள்ளேயே கும்பிட வேண்டும்.அதுவும் எப்படி?குளித்து முடித்து ஈர உடம்போடு கும்பிட வேண்டும்.
2* பில்லி,சூனியம்,திருஷ்டி,ஏவல் போன்றவற்றால்,ஏற்படும் துன்பங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள,மகிழம்பூ மாலையை ஸ்ரீ நரசிம்மருக்கு,சாற்றி சுதர்சனத் துதிகள் ஓதி வழிபட்டிடுக.
3* அறிமுகம் இல்லாதவர்கள் வீட்டிலோ,எதிரிகள் வீட்டிலோ,விருந்து சாப்பிடும் போது இதைத் தவிர்ப்பது நல்லது.இறைச்சியும்,உளுந்தும் வசியத்துக்கு ஏற்றவை.குறிப்பாக கோழிக் குழம்பு,உளுந்த வடை ஆகியவைகளுக்கு இந்த சக்தி அதிகம் உண்டு.
4* விளக்கு எரியத் தொடங்கியவுடன் அந்த தீபத்துக்குரிய தேவதை ஆவாஹனமாகி விடுவதால் எரியும் விளக்குத் திரியின் கசடைத் தட்டுவதோ,திரியை நிமிண்டுவதோ கூடாது.இதனால் வீண் சாபங்களும்,தோஷங்களும் ஏற்படுகின்றன.பதிலாக திரியை பெரிதாக்கி ஒளியைக் கூட்டலாம்.
5* அக்னியை வாயினால் ஊதி அனைப்பது முக்கியமான மரணச் சடங்குகளில் ஒன்றாகும்.பலர் தற்காலத்தில் பிறந்த நாளன்று மெழுகுவர்த்தி ஏற்றி வாயினால் ஊதி அனைக்கின்றனர்.மனநிறைவுடன் கொண்டாட வேண்டிய பிறந்த நாளில் மரணச் சடங்கையா செய்வது?இது சரியல்ல.
6* பகலில் போகம் செய்யக் கூடாது.இதனால் சூரிய பகவானின் சீற்றத்திற்கு ஆளாக நேரிடும்.பகல் உறவு மூலம் பாபத்தைத் தேடிக் கொண்டவர்கள்.அக்னி நட்சத்திர காலத்தில் சூரிய பகவானை எண்ணி ஏழைகளுக்கு செருப்பும்,குடையும் தானம் செய்தால் பாபம் நீங்கும்.

No comments:

Post a Comment