!!"தீபம் ஏற்றும் முறை"!!
வீட்டின் முன்கதவைத் திறந்து, பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேற்ற வேண்டும்.
அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும்,
மாலை ஆறரை மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலனும் நிச்சயம்.
விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது.
பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.
இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
விளக்கேற்றும் நேரம்
சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில்
(காலை4.30- 6 மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம்உண்டாகும்.
முன்வினைப் பாவம் விலகும்.
மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும்
மிகவும் உகந்தவை.இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை,
கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில்விளக்கேற்றினாலும்,
கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும்.
இது அனைவருக்கும்பொதுவான நேரம்.
விளக்கேற்றும் பலன்
ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் – சகலநன்மையும் உண்டாகும்
விளக்கேற்றும் திசை
கிழக்கு – துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு – கடன், தோஷம் நீங்கும்
வடக்கு – திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.
முதல் விளக்கு திருவிழா
திருவிளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
முன்பே தமிழ்மக்கள் இறைவனைஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர்.
சங்ககால இலக்கியங்கள் இவ்வழிபாட்டை “கார்த்திகை விளக்கீடு’ என்றுகுறிப்பிடுகின்றன.
பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை போன்ற
எட்டுத்தொகை நூல்களில்இடம்பெற்றுள்ளன.
சங்க இலக்கிய ஆய்வாளர்கள் சிலர், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக்
கொண்டு தமிழ்ப் புத்தாண்டுகொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர். கார்த்திகை
மாத கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவதைப் பற்றிசம்பந்தர்
பாடியிருக்கிறார். மயிலாப்பூரில் தனக்கு நிச்சயம் செய்த பூம்பாவை என்ற பெண்
திடீரென மரணமடையவே, அவர்
“விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்” என்று பாடுவதில் இருந்து
இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.
திருவிளக்கின் சிறப்பு
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர்.
தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது.இதன் அடிப்பாகத்தில்
பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும்
இடத்தில் சிவபெருமானும் வாசம்செய்கின்றனர்.
எண்ணெயின் பலன்கள்
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய் – செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய் – ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய் – வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய் – சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய் – புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய் – அம்மன் அருள்
கடலெண்ணெயில் விளக்கேற்றக் கூடாது.
திருவிளக்கில் எத்தனை பொட்டு வைக்க வேண்டும் ?
திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு
இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல்குங்குமமும் வைக்க வேண்டும்.
பொட்டு வைக்கும் போது ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி,
தனலட்சுமி, தான்யலட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி
ஆகியோரை தியானிக்க வேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.
எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர்,
காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்துபூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய
கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த
பொட்டுகள்குறிக்கின்றன.
எந்த தெய்வத்துக்கு என்ன எண்ணெய் ?
விநாயகர் – தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி – பசுநெய்
குலதெய்வம் – வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் – நல்லெண்ணெய்
அம்மன் – விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த
5 கூட்டு எண்ணெய் – பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் – நல்லெண்ணெய்
விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்
ஞாயிறு – கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
திங்கள் – மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
வியாழன் – குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
சனி – வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருட்கள் கிடைத்தல்
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMon. 02, Jan. 2022 at 4.02 am.
ReplyDeleteசைவ சித்தாந்தம்....!
* கன்மம் என்பது....
*உயிர்கள் செய்த நல்வினை, தீவினை.*
* நல்வினையின் வேறு பெயர்....
*புண்ணியம்.*
* தீவினையின் வேறு பெயர்....
*பாவம்.*
* புண்ணியத்தால் விளையும் பயன்....
*இன்பம்.*
* பாவத்தால் விளையும் பயன்....
*துன்பம்.*
* கன்மத்தின் இரு வகைகள்.....
*காரண கன்மம், காரிய கன்மம்.*
* காரண கன்மம் என்பது....
*கேவல நிலையில் முதன் முதலாக விளைந்த மூலகன்மம்.*
* காரண கன்மத்தின் வேறு பெயர்....
*மூலகன்மம்.*
* காரிய கன்மம் என்பது....
*காரண கன்மத்தால் விளைந்த கன்மம்.*
* காரிய கன்மத்தின் இருவகைகள்....
*நல்வினை, தீவினை.*
* நல்வினை என்பது....
*ஒரு உயிர் மற்ற உயிர்க்கு மனம், வாக்கு காயங்களால் செய்த நன்மை.*
* தீவினை என்பது....
*ஒரு உயிர் மற்ற உயிர்க்கு மனம், வாக்கு காயங்களால் செய்த தீமை.*
* வினையின் மூவகைகள்....
*ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம்.*
* ஆகாமிய வினையின் தமிழ்ப் பெயர்....
*வருவினை.*
* சஞ்சித வினையின் தமிழ்ப் பெயர்....
*தொல்வினை.*
* பிராரத்த வினையின் தமிழ்ப் பெயர்...
*ஊழ்வினை.*
* ஆகாமிய வினை என்பது....
*முன்வினைப் பயனை நுகரும் போது விளைந்து பின்பு வர விருக்கும் வினை.*
* சஞ்சித வினை என்பது....
*நுகரப்படாத ஆகாமிய வினைகளின் குவியல்.*
* பிராரத்த வினை என்பது ....
*சஞ்சித வினைக் குவியலிலிருந்து எடுத்து ஒரு பகுதியாய் நிகழ் பிறவியில் ஊட்டப்படும் வினை.*
* உயிருக்கு வினைப் பயனை ஊட்டுவது..... *இறைவன்.*
* ஊட்டப்படும் மூவகை வினைப் பயன்....
*ஆதி தைவிகம் , ஆதி பெளதிகம் , ஆதி ஆன்மீகம்.*
* ஆதி தைவிகம் என்பது....
*தெய்வத்தால் வரும் வினைப் பயன்.*
* ஆதி பெளதிகம் என்பது....
*பஞ்ச பூதங்களால் வரும் வினைப்பயன்.*
*ஆதி ஆன்மிகம் என்பது....
*உயிர்களால் வரும் வினைப்பயன்.*
மீண்டும் சந்திக்கலாம்...!
Jansikannan60@gmail.com.
அய்யா..வெ. சாமி அவர்களுக்கு நமஸ்காரம்.
ReplyDeleteSat. 18, Mar. 2023 at 7.12 pm.
ReplyDeleteமைலாப்பூர்...!
திருமயிலை, மயிலை, மயிலாப்பூர் என்று அழைப்பதுண்டு.
உமையம்மை மயிலுரு கொண்டு பூசித்ததால்... இப்பெயர் பெற்றது.
மயிலுடன் தொடர்புடைய இடங்கள் நம் தமிழகத்தில் நான்கு.
மயில் பூசித்து புகழ் பெற்றத் தலங்கள் இரண்டு.
ஒன்று... அன்னை கற்பகாம்பிகை மயிலுருவாய் இருந்து *கபாலீச்சுரனைத்* தொழுத மயிலாப்பூர்.
மற்றொன்று....அசுர குலத் தலைவனான *சூரபன்மன்* மயில் உருவில் குன்றாக மாறி, முருகனின் அருள் வேண்டி தவம் இருந்த மயிலம்.
அடுத்து....
மயில் எம்பெருமான் கந்தவேளை நினைத்து மகிழ்ந்தாடிய இடங்கள் ஒன்று *திருமயிலாடி.*
மற்றொன்று... *மயிலாடுதுறை.*
இச்செய்தியை... இக்கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் உள்ள மயிலம்மை பூசிக்கும் இலிங்கமூர்த்தி விளக்கும்.
இராமபிரான் பூசித்துப் பேறு பெற்றமை பற்றி... ஐப்பசி ஓணத்தில் திருவிழா நடந்ததாகப் புராணத்தில் கூறப்பட்டுள்
ளது.
வாயிலார் நாயனார் அவதாரத் தலம்.
இவர் சந்நிதி தெற்குப் பிரகாரத்தில் வட முகமாய் உள்ளது.
சிவநேசர் என்ற வணிகர் குல அடியாரின் தன் மகளாய்த் தோன்றிய...
*பூம்பாவை* எனும் பெண், அரவு தீண்டி இறக்க, அடியாரும் அப்பூம்பாவை, திருஞானசம்பந்தப் பெருமானுக்கே உரியவர் என்று எண்ணி இருந்தமை யால், மகளைத் தகனம் செய்து... எலும்பினையும், சாம்பலையும், ஒரு பானையில் சேகரித்து வைத்திருந்தார்.
சம்பந்தப் பெருமான் இப்பதிக்கு எழுந்தருளியபோது, அவர்பால் சிவநேசர் தம் மகள் பற்றியச் செய்தியைக் கூறினார்.
உடன் பெருமானும்......
மட்டிட்ட புன்னையங்கானல் எனும் திருப்பதிகம் பாடி.. அனைவரும் வியப்புறும்படி... மாண்ட பூம்பாவையை உயிருடன் வரச் செய்தார்.
( இப்பதிகத்தை அடியேன் தங்களுக்கு முழுமையாக அளிக்கிறேன்...!
கை மட நல்லார் மா மயிலை வண் மறுகில்
துளக்கு இல் கபாலீச்சுரத்தான் தொல் கார்த்திகை நாள்
தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ ? பூம்பாவாய் !
இதன் பொருள்....!
ReplyDeleteமட்டு − கள்
கானல் − கடற்கரைச் சோலை
மடமயிலைக் கட்டு − இளமயில்கள் ஆர்ப்புமிக்க ஊரில் உள்ள திருக்கோயில். (மயிலார்ப்பூர் என்பதன் மரூஉ மயிலாப்பூர்.)
இட்டம் − இஷ்டம் (திருவுள்ளத்தன்பு)
ஊர்... மயிலை, மயிலாப்பூர்.
கோயில்... கபாலீச்சரம்.
ஒட்டிட்ட பண்பு − இது அத்துவிதக் கலப்பு. அதாவது... "உணரப்படுவாரோடு ஒட்டிவாழ்தி" "ஒட்டியவனுளமாகில்லான்".
உருத்திர பல்கணத்தார் − மாகேசுரர். அடியவர்.
மதிசூடும் அண்ணலடியார்தமை அமுது செய்வித்தல்.
கண்ணினால் அவர் "நன்விழாப்பொலிவு கண்டார்தல்"
அட்டு என்றால்.... திருவமுது அமைத்து.
இட்டல் − இடுதல் (நட்டல் − நடுதல் போல)
இதிற்குறித்த திருவிழா. பூரட்டாதியில் நிகழ்வது.
ReplyDeleteஇது திங்கள் முதலாக ஒவ்வொன்றிலும் நிகழ்த்தும் திருவிழாச் சிறப்பு .
போதியோ − போவாயோ ? (வருவாய் என்றவாறு.)
இதன் கருத்து.....
தேன் நிறைந்த புன்னை மலர்ச் சோலை கள் நிறைந்த பதியே மயிலையம் பதியாம். அப்பதியினை விரும்பி கோயில் கொண்டு அமர்ந்தவனே.... சிவபெருமான்.
அவன் தன்னுடைய சிவகணத்தார்க்கு உணவளித்துப் பூரிக்கும் சிறப்பினைக் காணாது பூம்பாவையே நீ போவாயோ ? மாட்டாய். எழுந்து வருவாயாக...!
*ஞானசம்பந்தாரின் அற்புத நிகழ்ச்சி அல்லவா ?*
See it is Mayilai, a sacred place, full of palaces, surrounded by honey-filled caulophyllum, a coastal area of natural forests.
ReplyDeleteOur Lord Civan called here Kabaaleeswarar, desires to manifest Himself in the temple called Kabaaleech -charam.
In this city mainly round the temple young peacocks move about making sounds.
In this temple festivals take place in particular periods. Here very close devotees and sacred scholars gather to do their rituals, and worship.
The servitors happily serve food for those devotees who have gathered in the temple.
Oh ! Young girl Poombaavai ! Is it your fate (destiny) to leave this world without witnessing the above grand functions in the temple ? )
இன்றும் இந்நிகழ்ச்சி இத்திருக்கோயி லில் நிகழும் பிரமோற்சவத்தில் எட்டாம் திருநாளில் நிகழ்கின்றது.
மேற்கு வாயிலுக்குச் சற்றே வடபால் திருஞானசம்பந்தப் பெருமானின் திருவுருவம், குடத்தின் மேல் பூம்பாவை அமர்ந்துள்ள உருவத்தினையும் கண்டு மகிழலாம்.
தெற்குப் பிரகாரத்தில் சிங்கார வேலர் சந்நிதி அற்புதமாக உள்ளது.
இறைவி சந்நிதியும் அவ்வாறே ! இறைவன் காண்போர் பரவசம் அடையும்படி வீற்றுள்ளார். மேற்குப் பார்த்த சந்நிதி.
பங்குனி மாதத்தில் இக்கோயிலில் நிகழும் 63 நாயன்மார் உற்சவம் மிகச் சிறப்புடையது.
திருக்கோயிலுக்கு மேற்கே அழகிய குளம் உள்ளது. பிரதோஷம் மிகச் சிறப்பாக நடைபெறும்.
மற்றுமொரு பாடல் வரிகள்...
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்..
இதன் முழுப் பாடல்....
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச்சரத்தான் தொல் கார்த்திகை நாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.
வளைக்கை மட நல்லார் மா மயிலை வண் மறுகில்
ReplyDeleteதுளக்கு இல் கபாலீச்சுரத்தான் தொல் கார்த்திகை நாள்
தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ ? பூம்பாவாய் !
இதன் பொருள்....!
வளை − வளையல்
மறுகு − தெரு
வண்மை − தெருவினர் கொடைவளம்
துளக்கு − அசைவு, தளர்வு
இல் − இல்லாத (இறைவனை நோக்குங்கால் வருத்தமில்லாதவன்; இதே கபாலீச்சரத்தைக் குறித்தால்...அசைவில்லாத, தளர்வில்லாத )
தளத்து − சாந்தினை
கார்த்திகைத் திருவிளக்கீட்டு விழாவின் தொன்மையைப் பழந்தமிழ் நூல்களிலும், சிவாகம புராணங்களிலும் காணலாம்.
இப்பாடலின் கருத்து....!
வளையல் அணிந்த கற்புடைய பெண்டீர் வாழும் மயிலை கபாலீச்சரத்தில் சிவபெருமான் கோயில் கொண்டுள் ளான்.
அத்திருக்கோயிலில் கார்த்திகைத் திருநாள் அன்று சிறுமிகளும், மாதர்களும் விளக்குகளை வரிசையாக ஏந்தி நின்று வழிபாடு செய்வார்கள்.
அந்த விளக்கீடு விழாவை காணாமல் பூம்பாவையே நீ செல்வாயோ ? மாட்டாய்.
See ! It is Civan, our Lord in Thiru -my-laap-poor, a sacred place. In the city of
Thiru-my-laap-poor lovely young damsels
who wear bangles in their hands live in large numbers.
They live in streets of riches and stead fastness. Here our Lord Civan is manifest in the temple of Kabaleechcharam, which is a very happy place.
In the Tamil month of Kaarthikai there takes place a famous festival of lights.
During this festival many young girls, well breasted and decorated with sandal paste participate very joyfully.
They hold in their hands beautifully lighted lamps and go round the interior premises of he temple, singing on our Lord songs of praise.
Oh ! Young girl poombaavai !
Is it your destiny that you must leave this place without witnessing and participating in all these temple rituals and festivals ?
THIRU-CH-CHITRAM-BALAM
திருச்சிற்றம்பலம்
Jansikannan60@gmail.com.