Sunday 2 July 2017

தியானம்

தியானம்
அமையான தனியிடத்தில் அமர்வதற்கு முன்பு , ஒரு விளக்கை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
சிறிது நேரம் அந்த விளக்கினை உற்று நோக்கியபடி அப்படியே உட்கார்ந்திருக்க வேண்டும்,
பிறகு கண்ணிமைகளை மூடி, நமது நெற்றியில் இரண்டு புருவங்களுக்கும் இடையில் இருக்கும் மையப் புள்ளியை உற்று நோக்க வேண்டும். அதாவது, அகமுகமாக!
எண்ண ஓட்டங்கள் அப்போது அலை பாய்ந்து உங்கள் மனத்தைச் சிதறடித்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல் கண்களை மூடி உங்கள் புருவமத்தி மையத்தின் நினைவாகவே உட்கார்ந்திருக்க வேண்டும் .
ஆரம்ப காலத்தில் இப்படி உங்களால் சில நிமிட நேரம் தான் உட்கார்ந்திருக்கவியலும். ஆனால் பயிற்சி தொடர , தொடர சில மணி நேரங்கள் இப்படித் தொடர்ந்து உட்கார்ந்திருக்க உங்களால் இயலும்.
தியானம் செய்வதனால் உங்கள் மனதில் எண்ண ஓட்டங்கள் அலை பாய்வது ஒழிக்கப்பட்டு உடற்கூறுகள் சிறந்த முறையில் செயல் புரிய ஆரம்பிக்கும்.

1 comment: