Saturday, 19 August 2017

நீங்கள் என்று அழைக்கப்பட வேண்டியவர். அவரை ஒருமையில் நீ என்று அழைத்தால் கொன்றதற்குச் சமம் , தற்புகழ்ச்சி என்பது தற்கொலைசமம்

!! **ஹரே கிருஷ்ணா**!!
பாரதப் போரில் கர்ணனை கொல்வேன் என்று சபதம் பூண்ட அர்ருச்சுனன் கர்ணனை கொல்லாமல் பாசறைக்குத் திரும்பினான்.
உண்மை அறிந்ததும் அருச்சுனனைக் கோபமாகத் திட்டினார் தருமர். இவனை நம்பி போரை இழுத்துக் கொண்டோமே என்று நொந்து அருச்சுனன் வில்லைப் பழித்துக் கேலி பேசினார்.
"தன்வில்லை யார்பழித்தாலும் கொல்லுவேன்"
என்று சபதம் செய்திருந்த அருச்சுனன் வில்லை எடுத்துக் கொண்டு தருமரைக் கொலை செய்யத் துணிந்தான். ஆனால் பாசம் தடுத்தது.
"கண்ணா என் சபதப்படி தரும்ரைக் கொல்ல வேண்டும். ஆனால் அண்ணனைக் கொல்ல மனம் வரவில்லையே கொல்லவும் வேண்டும், ஆனால் தருமர் சாகவும் கூடாது. என்ன செய்வது என்று அருச்சுனன் கவலையுற்றான்.
அதற்கு மாயக் கண்ணன் கொல்லாமல் கொல்லலாம். சாகமல் சாகலாம் தெரியுமா? என்றான்.
தருமர் உன்னைவிடப்பெரியவர். பன்மையில், நீங்கள் என்று அழைக்கப்பட வேண்டியவர். அவரை ஒருமையில் நீ என்று அழைத்தால் கொன்றதற்குச் சமம் , என்றான் கண்ணன்.
நீங்கள் என்று பன்மையில் அழைக்க வேண்டிய தருமரை நீ என்று ஒருமையில் அழைத்துக் கொல்லாமல் கொன்ற அருச்சுனன், பெரியோரை அவமதித்த நான் இனி எப்படி உயிர்வாழ முடியும். எனவே தற்கொலை செய்து கொள்வேன் என்று வாளை உருவித் தற்கொலை செய்து கொள்ளப் போனான். நில் என்று தடுத்த கண்ணன், எப்படிதருமரைக் கொல்லாமல் கொன்றாயோ அப்படி உன்னைச் சாகாமல் சாகடித்துக் கொள் என்று சிரித்தான். எப்படி என்றான் அருச்சுனன். தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது தற்கொலைக்குச் சமம். நீயே உன்னைப் புகழ்ந்து கொள்.
தற்புகழ்ச்சி தற்கொலையாகி விடும் என்றான்.
பெரியவர்களை அவமதிப்பது ஒருமையில் பேசுவது கொலை.
தற்புகழ்ச்சி என்பது தற்கொலை.

2 comments:

  1. Looking for your soul mate!! Nescomatrimony, the Best Naidu (naicker, Balija naidu matrimony, Tamilnadu kamma, Gavara Naidu Bridegroom, Balija Bridegrooms) brides and grooms. we are Tamil naidu matrimony Services offers thousands of naidu brides and bride groom profiles to find your perfect match. Register FREE!
    naidu grooms

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete