Tuesday, 15 August 2017

*வேப்பிலையின் பலன்கள்*

*வேப்பிலையின் பலன்கள்*
அழகை அதிகரிக்கும் வேப்பிலை
*குறிப்பு 1*
1.வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைக்கவும்.
2. அதிலிருந்து நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.
*குறிப்பு 2*
1. சருமத்தை சீர்செய்யவும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும்.
2. அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.
*குறிப்பு 3*
1. வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைக்கவும்
2. பின்பு, அதை அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும்.
இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது.
*வேப்பிலையின் பலன்கள்*
1. மஞ்சளையும், வேப்ப இலைகளையும் ஒன்றாக சேர்க்கக் கூடாது. தனித்தனியாக அரைத்து உருண்டைகளாக விழுங்கி நீர் அருந்த வேண்டும்.
2. நம் ஒவ்வொருவர் வயிற்றிலும் எப்போதும் வயிறு தொடர்பான தொற்று நோய் இருந்துகொண்டே இருக்கும். இது நோயாக வெளிப்படாவிட்டாலும் உடலில் சக்தியை, தெம்பை குறைத்துக்கொண்டே வரும். தொற்றுநோய் வயிற்றில் இருக்கிறதென்றால், அதற்குக் காரணமான பாக்டீரியா கிருமிகளும் வயிற்றில் இருக்கும். இந்த கிருமிகளே உடலில் உள்ள சக்தியை இழுத்துக்கொண்டுவிடுகின்றன. விடியற்காலையில் சாப்பிடப்படும் வேப்பங்கொழுந்து உருண்டையும், மஞ்சள் உருண்டையும் இந்த கிருமிகளை அழித்துவிடுகின்றன.
3. சிலருக்கு உடலில் பலவித அலர்ஜிகள் ஏற்படும். அவை தோல் வியாதி, புழுதிக்கு அலர்ஜி என பல வடிவங்களில் உள்ளன. இதை அனைத்திற்கும் எளிய நிவாரணம், வேப்ப இலையை நன்கு அரைத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் ஊறி குளிக்க வேண்டும். அதோடு காலையில் வேப்பங்கொழுந்தை அரைத்து, உருண்டை செய்து, தேனில் நனைத்து விழுங்க வேண்டும். இதனால் உடலில் ஏற்படும் எந்தவித அலர்ஜியும் இல்லாமல் போய்விடும். இதை ஒவ்வொருவரும் அன்றாடம் வாழ்நாள் முழுவதும் செய்யலாம்.
4. கொழுந்து இலைகளில்தான் கசப்புத்தன்மை குறைவாக இருக்கும். அதற்கும் மீறி கசந்தால் தேனில் நனைத்து நாவில் படாமல் நேரடியாக தொண்டையில் போட்டு விழுங்கிவிடுங்கள். இதன் நன்மை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு கிடைக்கும் அதிக சக்தி, புத்துணர்ச்சி மூலம் உங்களுக்குப் புரிந்துவிடும்! வேப்ப இலையின் மருத்துவ குணங்களைக் கண்டு மேல்நாடுகள் வியக்கின்றன. உலகில் எந்த ஒரு தாவரத்துக்கும் இத்தனை மருத்துவ குணங்கள் இல்லை. வேப்ப இலைகளின் மருத்துவக் குணம் இப்போது உங்களுக்கும் புரிந்துவிட்டது இல்லையா? இனி தயக்கமென்ன? தினமும் காலையில் வேப்பங்கொழுந்தினை அரைத்துச் சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக, ஆனந்தமாக வாழ்வோம்!

1 comment: