Tuesday, 15 August 2017

அரசமரத்தின் சிறப்பு.....

ஆன்மிகமும் அறிவியலே....
அரசமரத்தின் சிறப்பு.....
அரச மரத்தடி விநாயகர் மட்டுமல்ல அரசமரமே சக்தி வாய்ந்தது தான்.
பெரியவர்கள் பஞ்சாயத்து பேசுவதற்கும் சிறியவர்கள் பம்பரம் விளையாடுவதற்கு
மட்டுமே அரசமர நிழல் பயன்படுவதாக நினைப்பது தவறு. சித்திரை, வைகாசி போன்ற
மாதங்களில் மதிய நேரம் அந்த நிழலில் இளைப்பாறினாலே தோல் சம்பந்தப்பட்ட
நோய்கள் வராது. இருக்கும் நோய் கூட வீரியம் குறையும்.
மருத்துவக் குணங்கள்:
அரச மரத்தினுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவிற்கு மருத்துவ சக்தி பெற்றது. அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.
அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறது.
நம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள். அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்.
அதனால்தான், அரச, வேம்பு போன்றவைகளை பராமரிப்பது என்பது பரிகாரம் போன்றது என்று சொல்லியிருக்கிறார்கள். 4 அரச மரங்களை நட்டு அதற்கு கீழ் 4 பேர் உட்கார்ந்து மருத்துவ குணம் பெற்று உடல் நலம் தேறிச் செல்கிறார் என்றால், அந்தப் புண்ணியம் அந்த மரத்தை நட்டவரைப் போய்ச் சேரும்......
ராஜவிருட்சம்
அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன அதனாலேயே அரசமரம் ராஜ விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. ‘மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்’ என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறான். புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியா வில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் இந்தியாதான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.
போதிமரம்
அரசமரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் புனித மரமாகும். புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான். அரசுநீழலிருந்தோன் என சூடாமணி நிகண்டு கடவுட் பெயர் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.
விஞ்ஞான உண்மை
அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறுகிடைக்கும் என்பது என்பது ஒரு நம்பிக்கை. இதன் காரணமாகவே “அரசினை நம்பி புருசனை கைவிட்டாள்” என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளளது. அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது
சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே. அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.
கருப்பை கோளாறு
அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1 மண்டலம் ) அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
பிராணவாயு
நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர். இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் ஒன்றான அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.

1 comment: