Tuesday, 15 August 2017

**ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்**

**ஹரே கிருஷ்ணா**
**ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்**
கண்ணன் என்றவுடனேயே நமக்கு கோகுலமும் பிருந்தாவனமும் ஞாபகத்திற்கு வந்துவிடும் .தான் ,கண்ணன் பிறந்த இடம் ஒன்று ,வளர்ந்த இடம் ஒன்று ,பிருந்தாவனத்தில் கண்ணனை ராதையுடன் காணலாம் .
வடநாட்டில் ருக்மிணியைவிட ராதைக்குத்தான் அதிக செல்வாக்கு . தெருவில்
ரிக்க்ஷாகாரனும் வழிவிட மணி அடிப்பதில்லை வாய் நிறைய ' ராதே கிருஷணா'
என்று தான் சத்தமாக சொல்கிறான் . கோகுலத்தில் பலராமர் கோயில்
உள்ளது அங்குக்குழந்தைக்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு . பல குழந்தைகளை
அங்கு அமர வைத்து பிரசாதம் கொடுத்து ஆசீர்வதிக்கிறார்கள்.
பலராமர் போல் பலத்துடன் வீர்யத்துடன் குழந்தைகள் வளருவார்கள் என்ற நம்பிக்கையால் இதுபோல் செய்கின்றனர் .
கோகுலத்தில் கண்ணன் வெண்ணெய் திருடித்தின்ற இடங்களையும் நாம்
பார்க்க முடிகிறது இங்கே பசுக்களுக்குப் ப்ஞ்சமில்லை நாம் நிற்கும்போதே நம்மேல் உரசிய வண்ணம் போகிறது .ஆனால் முட்டுவதில்லை ,
நல்ல ருசியான பாலும் லஸ்ஸியும் {மோரும்} எப்போதும் கிடைக்கிறது .
பிருந்தாவனத்தில் கூட்டம் அலை மோதுகிறது பொறுமையாக கியூவில் நகர கண்ணன் அருகில் வந்தாலும் திருப்பதி போல் உடனேயே நகர்த்திவிடுகிறார்கள்.
ஒரு நிமிடம் தான் கண்ணனைப்பார்க்க அனுமதி . ஏன் என்றால் கண்ணன்
அழகில் பிரமித்து நிற்க திருஷ்டி விழுந்துவிடுமாம் .
கண்ணனை இங்கே 'பாங்கே பிஹாரி 'என்று மக்கள் அழைக்கின்றனர்
கண்ணன் கை புல்லாங்குழலை ராதையாகவே கருதுகிறார்கள்

4 comments: