Thursday 7 March 2019

சனியும் கடனும்.....

சனியும் கடனும்.....
காத்தாயி அம்மன் வால்முனீஸ்வர சாமி துணை
நண்பர்களுக்கு அன்பர்களுக்கு வணக்கம்.கடந்த தினம் ஒரு நண்பர் எம்மிடம் தனக்கு கடன்கள் தொடர்ந்து பெருகிக்கொண்டே வருகிறது இவைகளை தீர்க்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா என்று கேட்டு இருந்தார்.
கடன் என்ற நிலை நமக்கு உண்டாக நம்முடைய தேவைகளின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தை நாம் சரியாக யூகிக்க வில்லை என்று பொதுவாக குறிப்பிடுவது உண்டு.சிலர் சேமிப்பு இல்லாத சூழ்நிலையில் நமக்கு கடன்கள் உண்டாகிறது என்று சொல்வது உண்டு.இந்த பதிவில் நாம் கோள்களின் வழியாக கடன்கள் ஏற்படுவதை அறிந்து கொள்ள சில தகவல்களும் பரிகாரம்களும் பதிக்கப்பட்டு உள்ளது.
நம்முடைய பிறப்பே கடனால் தான் ஏற்படுகின்றது என்று நம்முடைய சித்தாந்த நூல்கள் சொல்கிறது.நல் வினைகளின் கடன் நமக்கு நன்மையாக உயர்ந்த குலத்தில் பிறக்கச்செய்வதும் மேன்மைபெற்ற வாழ்க்கையை பெற செய்கிறது தீய வினைகளின் கடன் நமக்கு தாழ்ந்த குலத்தில் பிறக்கச்செய்வதுடன் வாழ்வில் துன்பங்களை அனுபவிக்க செய்கிறது.திருச்சேறை என்ற ஸ்தலம் சாரபரமேஸ்வர சாமி உடனுறை ஞானவல்லி என்ற அம்பாளுடன் அருளபாவிக்கிறார் நம்முடைய கடன்களை அறுக்கவும் தீர்க்கவும் நாம் திங்கள் தோறும் அங்கே சென்று வழிபட நம்முடைய அணைத்து கடன்களும் தீர்ந்து போகும் என்று ஒரு சோதிடர் சொன்னதால் நாம் அங்கே சென்றோம்.
"ரிண விமோசன லிங்கேஸ்வரர்"என்ற நிலையில் பெருமான் கடன்களை நிவிர்த்தி செய்கிறார் என்று கோவில் தகவல்களில் அறிந்து கொண்டோம்.
உண்மையில் இக்கோவில் மூர்த்தி நம்முடைய பூர்வ ஜென்ம கடன்களை தனது அருட்பார்வையால் அழித்து அருள் செய்கிறார் என்று புரிந்து கொண்டோம்.பூலோகத்தில் நமக்கு ஏன் கடன்கள் ஏற்படுகின்றது என்ற தகவலுக்கு நாம் முன்ஜென்ம வர்ணனையில் சனிக்கோளை பற்றியும் இவருக்கு பகையான செவ்வாய் கோள்களை பற்றியும் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம்.
"சொல் வாக்கினால் ஏமாற்றிய நபர்களும் செல்வாக்கினால் வஞ்சனை செய்த நபர்களும் பணத்தின் மூலமோ அல்லது உலோகத்தின் மூலமோ கடன்காரனாக உண்டாகி வஞ்சிக்க பட்ட நபரின் மூலமாக துன்பத்தை அடைவார்கள்".இதனின் அடையாளத்தை சனி கோளின் மூலமாக அறிந்து கொள்ளமுடியும்.சனி தாக்கம் உள்ள காலம் மற்றும் சனி லக்கினாதிபதியாகி 2 6 12 போன்ற வீடுகளில் அமர்ந்து இருக்க பிறந்தவர் மற்றும் குரு ஆசிகள் இல்லாமல் பிறந்தவர்களுக்கு சனியின் குணத்தில் ஒன்றான கடன் பெறுவது போன்ற நிலைகள் உண்டாகும்.கடன்களை பலவாறாக பிரிக்கலாம்.நாம் கவனித்த வரையில் சிலர் சிறுவயதிலயே விளையாட்டாக கடன் பெற்று செலவு செய்து வளர்வது உண்டு சிலர் கடனால் மட்டுமே குடும்பத்தை நடத்துவது உண்டு.சிலர் தொழில் துவங்க கடன்பட்டு மீள முடியாமல் தவிப்பது உண்டு சிலர் மற்றவருக்கு உதவி செய்ய கடன் பெற்று மனஉளைச்சலில் தவிப்பது உண்டு சிலர் திருமணத்திற்கும் பிள்ளைகள் படிப்புக்கு என்று கடன் பெற்று தவிப்பது இப்படி கடன்களை பற்றிய காரணத்தை ஊடுருவினால் பல விவரம்களுக்கும் அதன் பின்னணியில் தேவைகளும் ஒளிந்து இருப்பதை நாம் அறிந்து கொள்ளமுடியும்.ஒரு மனிதனுக்கு சனிகோளினால் கடனும் அதனால் மனஉளைச்சலில் ஏற்படும் காலத்தில் கோபத்தின் குணமான செவ்வாய் வெளிப்பட்டு தன்னை அழித்து கொள்வது அல்லது பிறரை அழித்து விடுவது என்ற நிலைக்கு கொண்டு செல்வதை நாம் காண்கிறோம்.இதை தான் சோதிட நூல்கள் செவ்வாயும் சனியும் கடன்பெறுவதற்கும் அழிவிற்கும் காரத்துவம் என்றே சொல்கின்றன.(திருமண வாழ்வில் பிரச்சனைக்கும் இந்த சனிசெவ்வாய் கர்மத்தின் கடனே முன்னின்று செயல்படுகிறது)குருவின் ஆசிகள் இருந்தால் பணத்தால் சமுதாயத்தில் அவமானம் ஏற்படாமல் பாதுகாத்து அருள்செய்வார்.

1 comment: