Monday, 30 March 2020

8 வடிவ நடைப்பயிற்சி

உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும் உடற்பயிற்சிகளில் மிகவும் சிறப்பான பயிற்சி வாக்கிங். ஒருவர் வாக்கிங் மேற்கொள்ளும் போது எவ்வித இடையூறுமின்றி, நல்ல ரிலாக்ஸான மனநிலையில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தற்போதைய மார்டன் உலகில் அதிகாலை வாக்கிங் மேற்கொள்வது ஃபேஷனாகிவிட்டது. ஆனால் ஏராளமானோர் நண்பர்களுடன் பேசிக் கொண்டே வாக்கிங் பயிற்சியை மேற்கொள்கிறார்கள்.



Benefits Of  
ஆனால் வாக்கிங் பயிற்சியிலேயே 8 வடிவ வாக்கிங் பயிற்சி மிகவும் சிறப்பானது. இந்த பயிற்சியால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இது சித்தர்கள் மற்றும் யோகிகள் பரிந்துரைக்கும் ஓர் நடைப்பயிற்சி முறை. இதனை ஒருவர் தினமும் 15-30 நிமிடம் மேற்கொள்ள வேண்டும். பொதுவாக நாம் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் 8 போடுவோம். ஆனால் வாகனம் ஏதுமின்றி, ஒருவர் 8 வடிவ கோட்டில் நடந்தால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இக்கட்டுரையில் 8 வடிவ நடைப்பயிற்சியை எப்படி மேற்கொள்வதென்றும், அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து நீங்களும் தினமும் முயற்சி செய்து நன்மைப் பெறுங்கள்.


"8" வடிவ நடைப்பயிற்சி செயல்முறை!
#1

"8" வடிவ நடைப்பயிற்சியை காலையில் வெறும் வயிற்றில் அல்லது மாலையில் செய்வது நல்லது. அதிலும் திறந்த வெளியில் அல்லது ஒரு பெரிய அறையினுள் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்த நடைப்பயிற்சியை வடக்கு-தெற்கு திசைகளில் தான் மேற்கொள்ள வேண்டும். வடக்கு திசையில் கிழக்கில் இருந்து மேற்கு அல்லது மேற்கில் இருந்து கிழக்காக ஓர் இணைக் கோடு வரையவும் மற்றும் 10 அடி இடைவெளி விட்டு 8 வடிவத்தை வரைய வேண்டும்.


#2
"8" வடிவ நடைப்பயிற்சியை ஆரம்பிக்கும் போது, முதலில் வடக்கில் இருந்து தெற்காகவும், பின் தெற்கில் இருந்து வடக்காகவும் நடக்க வேண்டும். ஒவ்வொரு திசையையும் 15 நிமிடம் என மொத்தம் 30 நிமிடம் நடக்க வேண்டும்.



#3
தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இருந்தால், முதலில் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்ட பின், எந்த ஒரு உடற்பயிற்சியிலும் ஈடுபடுங்கள். முக்கியமாக இந்த நடைப்பயிற்சி 8 வடிவத்தில் இருப்பதால், யாருடனும் பேச வேண்டிய அவசியம் இருக்காது. சொல்லப்போனால் மொபைலைக் கூட பார்க்க முடியாது. இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது சரியாக சுவாசிக்கலாம்.


#4
இந்த 8 வடிவ நடைப்பயிற்சியின் போது, கால்களில் காலணிகள் எதுவும் அணியக்கூடாது. வெறும் காலில் நடப்பதால் பாதத்தின் மையப்பகுதியில் அழுத்தம் சரியாக கொடுக்கப்படுவதால், உள்ளுறுப்புக்கள் நன்கு செயல்பட்டு குறிப்பிட்ட நோய்களின் தாக்குதல்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.


"8" வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள்!
#1

8 வடிவ நடைப்பயிற்சியின் போது இடுப்பு, அடிவயிறு போன்ற உடலின் அனைத்து பகுதிகளும் திரிக்கப்படுவதால், ஒட்டுமொத்த உள்ளுறுப்புக்களும் சரியாக செயல்பட ஆரம்பிக்கும்.



#2
8 வடிவ நடைப்பயிற்சியை முடித்த பின்பு, இதுவரை மூக்கடைப்பால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த உங்களால் தங்குதடையின்றி எளிதில் சுவாசிக்கக்கூடும். அதாவது மூக்கடைப்பு பிரச்சனை முற்றிலும் நீங்கும்.


#3
8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்ட பின் இருமல் வரக்கூடும். ஏனெனில் நுரையீரலில் இருந்த சளி இளகி வெளியேற ஆரம்பிப்பதால், இருமல் வர ஆரம்பிக்கும். மேலும் இந்த பயிற்சியின் போது 5 கிலோ கிராம் ஆக்ஸிஜன் சுவாசிக்கப்படுவதால், நுரையீரலில் இருந்து சளி வெளியேற ஆரம்பித்து, ஒட்டுமொத்த உடலும் ஆற்றலுடன் இருப்பது போல் உணரக்கூடும்.



#4
தலைவலி, செரிமான பிரச்சனைகள், தைராய்டு, உடல் பருமன், முழங்கால் வலி, ருமடாய்டு ஆர்த்ரிடிஸ், மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகள் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்ட பின் மாயமாய் மறையும்.



#5
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலை மற்றும் மாலையில் இந்த நடைப்பயிற்சியை மேற்கொண்டால், ஒரே வருடத்தில் சர்க்கரை நோய் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


#6
8 வடிவ நடைப்பயிற்சி பார்வை சக்தியை மேம்படுத்தும். இதற்கு 8 வடிவ நடைப்பயிற்சியை நடக்கும் போது, அந்த கோடுகளை கூர்ந்து கவனித்து செல்வதால், கருவிழி அங்கும் இங்கும் அசைந்து, கண்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து பார்வை பிரச்சனை நீங்கும்.


#7
இரத்த அழுத்தம் குறையும், கேட்கும் திறன் மேம்படும். அனைத்து வகையான உடல் வலி மற்றும் முழங்கால் வலி, பாத வெடிப்புகள் போன்றவை சரியாகும். முக்கியமாக இந்த பயிற்சியை தினமும் தவறாமல் செய்து வந்தால் இளமையைத் தக்க வைக்கலாம்.


#8
தோள்பட்டை வலி, கழுத்து வலி, முதுகு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, கருப்பை பிரச்சனை, மன இறுக்கம், டிஸ்க் பிரச்சனைகள், ஒற்றைத் தலைவலி, எப்லிப்ஸி, சர்க்கரை நோய், இரத்த அழுத்த பிரச்சனை, தைராய்டு பிரச்சனை, சிறுநீரக கற்கள், பித்தக்கற்கள், ஆஸ்துமா, சைனஸ், பைல்ஸ், தூக்கமின்மை, இதய நோய், நரம்பு கோளாறுகள், சிறுநீரக பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து 8 வடிவ நடைப்பயிற்சி விடுவிக்கும்.


8 வடிவ நடைப்பயிற்சியின் போது தவிர்க்க வேண்டியவை மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டியவை!
#1

8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது வயிறு முழுமையாக நிறைந்திருக்கும் போது அல்லது உணவு உட்கொண்ட உடனேயே மேற்கொள்ளக்கூடாது. வேண்டுமானால் உணவு உட்கொண்ட 2 மணிநேரத்திற்கு பின் இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.


#2
முக்கியமான அறுவை சிகிச்சை செய்தவர்கள் 6 மாதம் ஆகாமல் இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளக்கூடாது. அறுவை சிகிச்சை செய்து 6 மாதம் ஆகியிருந்தால், மருவரை அணுகி, அவரது அனுமதியுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.


#3
கர்ப்பிணிப் பெண்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது. ஆனால் இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் செய்யக்கூடாது.


#4
உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சனைகள், சர்க்கரை நோய், நரம்பு பிரச்சனைகள், பக்கவாதம், சிறுநீரக பிரச்சனைகள், உயர் கொலஸ்ட்ரால் போன்றவற்றிற்கு மருந்து மாத்திரைகளை எடுப்பவர்கள், இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.


#5
8 வடிவ நடைப்பயிற்சியை வெறும் வயிற்றில் காலையில் எழுந்ததும் மேற்கொள்வதே மிகவும் நல்லது. அதிலும் இந்த நடைப்பயிற்சியை அதிகாலையில் 5 - 8 மணிக்குள் மேற்கொள்வது மிகவும் சிறப்பானது.


#6
8 வடிவ நடைப்பயிற்சியை 18 வயதிற்கு மேலானவர்கள் மேற்கொள்ளலாம். 18 வயதிற்குட்பட்டவர்கள் இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளக்கூடாது.



No comments:

Post a Comment