Monday, 30 March 2020

சுண்டைகாயின் மருத்துவ பயன்கள்:

காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றுகூட சொல்லலாம். உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் கரைப்பதுவரை பெரிய வேலைகளைச் செய்யக்கூடிய மாபெரும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது, பார்வைக்கு மிகவும் சிறிதான இந்த சுண்டைக்காய். தேவையற்ற செல் பாதிப்புகள் நம் உடலில் ஏகப்பட்ட வியாதிகளை வரவழைத்து விடும். நீரிழிவு, இதய நோய் எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல் பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின் ஏ,சி,இ போன்ற சத்துக்களை எக்கச்சக்கமாக உள்ளடக்கியது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின் சி-யை அதிகமாகக் கொண்டது. ஆரஞ்ச் , கொய்யா, பப்பாளிக்கு நிகரான விட்டமின்-சி, இந்த சுண்டைக்காயில் உண்டு.

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:
1. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
2. இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும்.
3. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.
4. தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது.
5. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.
6. சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.
7. பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் முக்கியமானதாக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.
8.தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது  நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிடவேண்டும். நோய் கட்டுப்படும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையது. மூலத்தில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிற்று கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாகின்றது. 
 
சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் காயில் 22.5 மி.கி. இரும்பு சத்தும், 390 மி.கி.  கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் உள்ளது.
 
குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க சுண்டைக்காய் உதவும். குழந்தையாக இருக்கும்போதே  அவர்களுக்கு சுண்டைக்காயை உணவில் சேர்த்து, சாப்பிட பழக்கவேண்டும். சுண்டைக்காயை மாதம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும். 
 
மூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும். மூல நோயால் உண்டாகும் ரத்தக் கசிவும் நீங்கிவிடும். புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்.
 
சுண்டைவற்றல் சூரணத்தை தினம் ஒரு தேக்கரண்டி மோரில் கலந்து ஒரு மாதம் காலை, மாலை சாப்பிட்டுவந்தால் தொல்லை  தரும் வயிற்று நோய்களில் இருந்து விடுபடலாம். சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. கல்லீரல், மண்ணீரல்  நோய்களையும் நீக்க உதவுகின்றது. 
 
சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்.வயிற்று பூச்சிகள்

நமது வயிறு என்பது நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்து நமக்கு சத்து அளிக்க உதவும் ஒரு உறுப்பாகும். நுண்ணுயிரிகள் நிறைந்த உணவுகளை சிலர் அதிலும் குறிப்பாக குழந்தைகள் சாப்பிடுவதால் அவர்களின் வயிற்றில் பூச்சி தொல்லை ஏற்படுகிறது. சுண்டக்காய் பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகளை அழித்து குடல், வயிறு சுத்தமாகும்.

பசியுணர்வு

ஒரு நாளில் மொன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்பாக வயிற்றில் பசி உணர்வு ஏற்படுவதே உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சிறந்த அறிகுறியாகும். சிலருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் பசி உணர்வு குறைந்து விடும். சுண்டைக்காய்களை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு பசி உணர்வு அதிகமாகி உடல் ஆரோக்கியம் மேம்படுத்தும்.

- Advertisement -

வயிற்று போக்கு

பலருக்கும் ஏதேனும் ஒரு காரணத்தால் சமயங்களில் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் இவற்றை சம எடையாக எடுத்து, நன்கு காயவைத்து, வறுத்து, இடித்துத் தூள் செய்துக் கொள்ள வேண்டும். இதனை, 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோருடன் கலந்து காலை, மாலை வேளைகளில், இரண்டு நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு, சீதபேதி நிற்கும்.

அஜீரணம்

கண்ட கண்ட நேரங்களில் அதிகம் உண்பது, எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை இரவில் அதிகம் உண்பது போன்ற காரணங்களால் சிலருக்கு அஜீரணம் ஏற்படுகிறது. சுண்டைக்காய் வற்றல் தூள், 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடித்து வந்தால் அஜீரண பிரச்சனை விரைவில் தீரும்.

மூலம்

கடுமையான மலச்சிக்கலே மூலம் நோய்க்கு பிரதான காரணமாக இருக்கிறது. அத்துடன் அதீத உடல் உஷ்ணம் மற்றும் கார உணவுகள் அதிகம் சாப்பிடுவதாலும் மூலம் உருவாகிறது. பச்சையான இளம் சுண்டைக்காய்களை மிதமான காரம் பயன்படுத்தி குழம்பு செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் மூலம் பிரச்சனை விரைவில் நீங்கும்.

சளித்தொல்லை

சுண்டக்காய் சற்று உஷ்ண தன்மை கொண்ட ஒரு காய் வகையாகும். ஜலதோஷம் அல்லது சளி பாதிப்புகள் ஏற்பட்டவர்கள் பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சுண்டைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் சாப்பிட்டு வந்தால் தொண்டை, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.

ரத்தம் சுத்திகரிப்பு

தினமும் நாம் சாப்பிடுவது, குடிப்பது,அருந்துவது என அனைத்து பொருள்களிலும் மாசு நிறைந்துள்ளன. இந்த மாசு அல்லது நச்சுகள் அனைத்தும் நமது ரத்தத்தில் சேர்ந்து கொண்டு எதிர்காலங்களில் நமது உடல்நலத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சுண்டக்காய் குழம்பு, வதக்கல் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் பெறும்.

எலும்புகள்

நமது உடலில் எலும்புகள் பலமாக இருக்க வேண்டியது அவசியம். அனைவருக்கும் வயதாகும் காலத்தில் எலும்புகளின் உறுதி தன்மை குறைந்து கொண்டே வரும். சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. சுண்டைக்காய்க் குழம்பு வைத்து சாப்பிடுவதால் நமது எலும்புகள் உறுதியடையும்.

சுவை திறன்

உடல்நலம் குன்றியிருக்கும் காலத்தில் பலருக்கும் நாக்கில் உணவின் சுவை அறியும் திறன் சற்று குறைந்து விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்கள் தினமும் சிறிதளவு சுண்டக்காய் பக்குவப்படுத்தி சாப்பிடுவதால் நாக்கில் சுவை அறியும் திறன் மீண்டும் அதிகரிக்கும். உணவை செரிக்க எச்சிலை நன்கு சுரக்க செய்யும்.

குரல்வளம்

நாம் பிறருடன் தொடர்பு கொள்ள நமக்கு உதவுவது நமது குரல் தான். ஜலதோஷம் பீடித்த காலத்தில் சிலருக்கு குரல் கட்டிக்கொண்டு சரி வர பேச முடியாமல் போகிறது. சிலருக்கு வேறு பல காரணங்களால் குரல் வளம் குறைகிறது. சுண்டைக்காய்களை அடிக்கடி பக்குவப்படுத்தி சாப்பிட்டு வந்தால் குரல் வளம் சிறக்கும்.

No comments:

Post a Comment