Sunday, 19 April 2020

அதிக சத்துள்ள விலை மலிவான 5 நட்ஸ்

அதிக சத்துள்ள விலை மலிவான 5 நட்ஸ்

வேர்க்கடலைஇது பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்’ என்று நிலக்கடலையைக் குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது என ஆய்வுகள் உணர்த்துகின்றன. நாகரிக வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் பலவற்றை நாம் மறந்து வருகிறோம். அந்தவரிசையில் நிலக்கடலையையும் நாம் மறந்துவிட்டோம்.

மறந்துபோன நம் பாரம்பர்ய உணவுகளை மீட்டெடுக்கும் முயற்சி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில், நிலக்கடலை குறித்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலக்கடலையை வேகவைத்தோ, வறுத்தோ உண்ணும் வழக்கம் உள்ளது. கடலை எண்ணெய் என்ற பெயரில் சமையல் எண்ணெயாகவும் பயன்படுத்துகிறோம். நிலக்கடலையுடன் வெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் சிறந்த ஹெல்த்தி ஸ்நாக்ஸ்-ம் கூட. இதன் மகிமை தெரிந்தால்தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக பயன்படுத்தும் உணவுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஆனால், அதிகமாக உற்பத்தியாகும் இந்தியாவில், மலிவான விலையில் கிடைக்கும் இதன் மகிமை தெரியாமல் அலட்சியப்படுத்தி வருகிறோம்.

கொண்டைக்கடலை

சுண்டல் என்றாலே, பொதுவாகக் கறுப்புக் கொண்டைக்கடலை சுண்டல்தான். உறுதியாகவும் இனிப்பு சுவை இல்லாமலும் இருப்பதால் உப்பு சேர்த்தோ, வேக வைத்தோ, வறுக்கப்பட்டோ சாப்பிடப்படுகிறது. பொரிகடலை கடைகளில் விற்கப்படும் உப்புக்கடலை, மிகவும் பிரபலமான ஒரு நொறுவை. உடைச்ச கடலை எனப்படும் பொட்டுக்கடலையும் அதற்கு இணையாகப் பிரபலமானதுதான்.

புட்டு, ஆப்பத்துக்குச் சிறப்பு சுவை சேர்க்கும் கேரளக் கடலைக்கறி, கறுப்புக் கொண்டைக்கடலை குழம்புதான். இது முளை கட்டப்பட்டுச் சாலட்களில் சேர்க்கப்படுகிறது. கெட்டி குழம்பு, சூப்புகளில் இடம்பிடிக்கிறது. தெற்காசியாவில் பல்வேறு சுவையான உணவு வகைகளில், கறுப்புக் கொண்டைக்கடலை பயன்படுத்தப்படுகிறது. இதை வறுத்துப் பொடி செய்து, நீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் காப்பியைப் போலப் பயன்படுத்தலாம்.

சோயா பீன்ஸ்

ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாளைக்கு ஒவ்வொரு கிலோ கிராம் எடைக்கும் ஒரு கிராம் என்ற விகிதத்தில் புரதம் தேவை என்கிறது உலக சுகாதார நிறுவனம்.ஆனால், நம் எல்லோருக்கும் அந்தளவு புரதம் கிடைக்கிறதா என்றால் சந்தேகம்தான்.நல்ல புரதம் என்று பார்த்தால், எப்போதும் விலங்குகளிடம் இருந்து பெறப்படுகிற புரதம்தான் சிறந்தது.

தாவர உணவுகளில் அதற்கு இணையான அதிக புரதம் கொண்ட ஒரே பொருள் சோயா. எனவே, சைவ உணவுக்காரர்கள் அதிக புரதம் பெற சோயாவையே நம்ப வேண்டியிருக்கிறது சோயாவில் புரதம் 40 சதவிகிதம். அது மட்டுமா..? கால்சியம், பி 12, நல்ல கொலஸ்ட்ரால் எல்லாமும் சோயாவில் அதிகம். சோயா என்றதும் பலருக்கும் தெரிந்தது சின்னச் சின்ன உருண்டைகளாக மளிகைக் கடைகளில் கிடைப்பதுதான்.உண்மையில் சோயா என்பது ஒரு வகையான பயறு. அதை பயறாக உட்கொள்வது தான் சிறந்தது.

உலர் திராட்ச்சை

உலர் திராட்சையில் பல்வேறு பயன்கள் அடங்கியுள்ளன. நொறுக்கு தீனிகளை தவிர்த்து உலர் திராட்சை எடுத்து கொண்டால் ஆரோக்கியம் மேம்படும்.உருவத்தில் சிறிய உலர்திராட்சைகள் சக்தியில் மிக பெரியதாக பார்க்கப்படுகிறது. முதுமையற்ற இளமை தோற்றம் வேண்டுவோர் உலர்திராட்சையை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.நார்ச்சத்துக்கள் விட்டமின்ஸ் மற்றும் அதிக கலோரிகள் அடங்கியது உலர்திராட்சை.

அளவோடு சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும் , அசிடிட்டி குறையும் , ரத்த சோகை நீங்கும் , புற்று நோய்க்கு அருமருந்து , தாம்பத்ய பலவீனம் நீங்கும் அதிகமாக பயன் பெற முடியும்.

பேரிச்சை

பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.
தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம்.

பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும் ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது.நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்படுபவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிடால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டல் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

1 comment:

  1. அய்யா..வெ.சாமி அவர்களுக்கு....
    ஜான்ஸி கண்ணனின் "மே தின நல்வாழ்த்துகள்."

    ReplyDelete