Tuesday, 14 April 2020

தினமும் உணவிற்கு முன் உருளைக்கிழங்கு சாறு குடித்தால் இதெல்லாம் நடக்குமா???


தினமும் உணவிற்கு முன் உருளைக்கிழங்கு சாறு குடித்தால் இதெல்லாம் நடக்குமா???


potato juice
உருளைக்கிழங்கில் உடலுக்கு தேவையான சத்துக்கள் தரும் அற்புதமான நன்மைகள் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது வரை பல நன்மைகள் உருளைக்கிழங்கில் அடங்கி உள்ளது. ஆனால் ஊட்டச்சத்து நிறைந்த பச்சையான உருளைக்கிழங்கு சாற்றை குடிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா….

உருளைக்கிழங்கில் பைட்டோ கெமிக்கல்கள், வைட்டமின் C, வைட்டமின் B, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, சின்க், பாஸ்பரஸ், காப்பர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். பிற காய்கறி ஜூஸ் மற்றும் பழச்சாறு போல உருளைக்கிழங்கு சாறு சுவையாக இல்லாமல் போனாலும் இதனிடம் இருக்கும் சத்துக்களுக்கு குறையே இல்லை. இப்போது உருளைக்கிழங்கு சாறு குடிப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

1.செரிமானம்:

உருளைக்கிழங்கு சாறு செரிமானத்தை தூண்டி வயிறு சம்பந்தமான கோளாறுகளை போக்க உதவுகிறது. அரை கப் அளவிற்கு உருளைக்கிழங்கு சாற்றை சாப்பிடும் முன்பு ஒரு நாளைக்கு மூன்று முறை பருகுங்கள்.

2. நோய் எதிர்ப்பு சக்தி:

இன்ஃபெக்ஷன் மற்றும் சளியை எதிர்த்து போராடும் ஆன்டி ஆக்ஸிடன்டான வைட்டமின் C உருளைக்கிழங்கு சாற்றில் உள்ளது. மேலும் வைட்டமின் C யானது நோய் எதிர்ப்பு மண்ஞலத்தை வலுவடைய செய்கிறது.

3. நெஞ்செரிச்சல்:

வயிற்றில் உள்ள ஆசிட் உணவுக் குழாயில் நுழையும் போது தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. உருளைக்கிழங்கு சாற்றில் உள்ள ஒரு கலவை நெஞ்செரிச்சலால் ஏற்படும் வீக்கத்தை போக்குகிறது. மேலும் வயிற்றில் உள்ள ஆசிட்டை குறைக்கிறது. இதற்கு சாப்பிடும் முன்பு மூன்றில் இருந்து நான்கு தேக்கரண்டி உருளைக்கிழங்கு சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

4. கல்லீரல்:

உருளைக்கிழங்கு சாறு குடிப்பதினால் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றப்பட்டு அதன் ஆரோக்கியமானது மேம்படும். 

5. ரூமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ்:

கை மற்றும் கால்களில் ஏற்படும் உள் வீக்கம் தான் ரூமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ். வைட்டமின் C அதிகம் உள்ள உருளைக்கிழங்கு சாற்றை குடிப்பது இதற்கு நல்ல ஒரு தீர்வை தரும். உணவிற்கு முன்பு ஒன்றில் இருந்து இரண்டு தேக்கரண்டி உருளைக்கிழங்கு சாற்றை பருகுங்கள்.

6. புத்துணர்ச்சி:

உருளைக்கிழங்கு சாற்றில் இயற்கை சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளதால் இதனை பருகும் போது நமக்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மேலும் உருளைக்கிழங்கு சாற்றில் உள்ள வைட்டமின் B, உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டை குளுகோஸாக மாற்றி உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை தருகிறது.

7. கிட்னி:

பொட்டாசியம் அதிகம் உள்ள உருளைக்கிழங்கு சாறு கிட்னியின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. பொட்டாசியமானது எலக்ட்ரோலைட் போல அமைந்து உடலில் உள்ள திரவங்களை கட்டுப்படுத்த உதவுகிறது.

8. இதயம்:

உருளைக்கிழங்கு சாற்றில் காணப்படும் பொட்டாசியம் இதயத்தில் உள்ள அடைப்புகளை நீக்கி இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் இதய நோய் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது.

9. உடல் எடை குறைப்பு:

உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் உணவிற்கு பிறகு உருளைக்கிழங்கு சாறு எடுத்துக் கொள்ளும் போது பசியை கட்டுப்படுத்தி அதிகமாக உணவு உட்கொள்வதை தடுக்கிறது.

10. காயம் ஆற:

உருளைக்கிழங்கு சாற்றில் உள்ள சின்க் மற்றும் வைட்டமின் C, தசைகளில் உள்ள வீக்கத்தை குறைத்து காயங்கள் விரைவில் ஆற உதவி செய்கிறது. 

11. வயதான தோற்றத்தை குறைக்க:

வைட்டமின் B மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்த உருளைக்கிழங்கு சாறு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் தோலில் உள்ள அணுக்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து சுருக்கங்களை போக்கி வயதான தோற்றத்தில் இருந்து விடுதலை தருகிறது.

No comments:

Post a Comment