Wednesday, 8 April 2020

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவும் அருமருந்து

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவும் அருமருந்து :

உடலில் அதிகப்படியான கொழுப்பு நேர்ந்துவிட்டதே என்று கவலைப்படுபவரா நீங்கள்? இதோ கொழுப்பைக் கரைக்க உதவும் அருமருந்து. 

தண்டுக் கீரை  மிளகு கசாயம்
தேவையான பொருட்கள் :

தண்டுக் கீரை.         -    ஒரு கைப்பிடி

மிளகு.                          -   10

மஞ்சள் தூள்.            -  சிறிதளவு

செய்முறை :
முதலில் தண்டுக் கீரையை சுத்தப் படுத்தி ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும். மிளகைத் தட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஐந்து டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் தண்டுக் கீரை, மிளகு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். கீரையுடன் நன்கு கொதிக்க வைத்து அதனை பாதியளவாகச் சுண்டவைத்து இறக்கி வடிகட்டிக்  குடிக்கவும்.

பயன்கள் :
உடலில்  உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவும் அருமருந்தாக செயல்படும் தண்டுக் கீரை மிளகு கசாயம்.  இதனை தினமும் காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம். 

இரவு படுக்கப்போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு :
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்

No comments:

Post a Comment