Wednesday, 8 April 2020

பெண்ணின் ஜாதகத்தில் ராசியும் லக்கினமும்


    பெண்ணின் ஜாதகத்தில் ராசியும் லக்கினமும் இரட்டைபடை ராசிகளாக அமைந்தால்அந்த பெண்செளந்தர்யவதியாக திகழ்வாள். இவ்விரண்டு இடங்களையும் சுபர்கள் நோக்க அந்த பெண் அதிரூப சுந்தரியாக மிளிர்வாள்.
      ராசியும் லக்கினமும் ஒற்றைபடையில் அமைந்தால் அந்த பெண் பெண்மைகுரிய தன்மை குறைந்து ஆண்தன்மையுடன் காணப்படுவாள். ராசியையும் லக்கினத்தையும் சுபர்கள் நோக்க நல்லகுலத்தில் பிறந்த மங்கையாகவும் செல்வ வசதிபடைத்தவளாகவும் இருப்பாள். 
     லக்கினத்திலும் ராநியிலும் பாவர்கள் கூடியிருக்க பிறந்த ஜாதகி தீய சிந்தனைகளும் செயல்களும் பொருந்தியவளாக வாழ்வாள். 
     ரிஷபம், கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம் இரட்டைபடை ராசிகளாகும்.
 மேஷம் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் ஆகியவை ஒற்றைபடை ராசிகளாகும்.

No comments:

Post a Comment