Monday, 6 April 2020

கொரோனா வைரஸ் -

கொரோனா வைரஸ் - திருவாதிரை நட்சத்திரம் சக்தி வாய்ந்த ராகுவின் நட்சத்திரம்

மார்ச் 22ஆம் தேதி முதல் ஜூலை 8ஆம் தேதி

வரை அதிக எச்சரிக்கை தேவை - ஜோதிடர்கள்.

காற்று ராசிகள் மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகளில் பாம்பு கிரகங்கள் சஞ்சரிக்கும் போது காற்று போல வியாதிகள் பரவும் என்பது ஜோதிட விதி. இப்போது திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் ராகு மற்றும் டிசம்பர் 25ஆம் தேதி ஆறு கிரக சேர்க்கை சூரியகிரணத்தின் போது சீனாவில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. மார்ச் 22ஆம் தேதி இந்த வைரஸ் தாக்கம் அதிகம் தீவிரமடையும் என்றும், வீரியமாக பரவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மிதுனத்தில் உள்ள ராகு பகவானை இப்போது தனுசு ராசியில் இருந்து செவ்வாய், குரு பார்க்கிறார்கள். மார்ச் 22ஆம் தேதி மகரம் ராசியில் செவ்வாய் உச்சமடையும் போது, மகரம் ராசியில் குரு அதிசாரமாக செவ்வாயோடு இணைகிறார். ஜூலை 8ஆம் தேதி குரு பகவான் மீண்டும் வக்ரமடைந்து தனுசு ராசிக்கு செல்லும் போது கொரோனா வைரஸ் தீவிரம் குறையும். இந்த கால கட்டத்தில் இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படும் என்பதும் ஜோதிடர்களின் கணிப்பாகும். குரு மகரம் ராசியில் இருக்கும் போது குருவின் பார்வை கிடைக்காமல் போகிறது. இதனால் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகிறது. ராகு மிருகஷீரிடம் நட்சத்திரத்திற்குள் நுழையும் போது வீரியம் குறையும். எனவே மக்கள் தங்களைத்தாங்களே தற்காத்துக்கொள்வதே நல்லது. மக்கள் கவனமாக இருப்பது அவசியம்.

கொரோனா வைரசினால் காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம், நெருப்பு ராசியான தனுசு, நில ராசியான மகரம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களும் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வீடுகளில் சாம்பிராணி தூபம் போடுங்க. விஷ்ணு சகஸ்ரா நாமம் படிங்க, புதன் காரகமான மீனாட்சி அம்மனை வணங்குங்க. மகா விஷ்ணுவை வணங்குங்க. இந்த வழிபாடுகளை வீடுகளில் இருந்தே செய்யலாம் துளசியை சாப்பிடலாம் தொண்டைக்கு இதமாக இருக்கும் நுரையீரல் பாதிப்பகள் வராது. சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்வதை தரிசனம் செய்தால் பாதிப்புகள் கட்டுப்படும். இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க சிவ ஆலயங்களில் ருத்ராபிஷேகம் செய்யலாம்.

விண்வெளியில் மிக சிவப்பு நிறமாக ஒளிரக்கூடிய, சூரியனை விட பல மடங்கு பெரிய, 600 ஒளியாண்டு தொலைவில் உள்ள 1 லட்சம் ஆண்டு பழமையான இந்த திருவாதிரை இப்போது வெடித்து எரிந்து அணைந்த நிலையில் படிப்படியாக ஒளி மங்கி வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எரிந்து அணைந்த நிலையில் இருந்த திருவாதிரை ஒளி மங்குவது சூப்பர்நோவா எனப்படும். நட்சத்திர வெடிப்புக்கு அறிகுறி என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நட்சத்திர வெடிப்பு நிகழும் போதெல்லாம் மிகப்பெரிய போர்களும் அதனால் கொத்துக்கொத்தான மரணங்களும் நிகழ்ந்திருக்கின்றன என எச்சரிக்கின்றனர் ஜோதிடர்கள். ராகுவின் நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தின் மீது சாமா என்கிற கிரகம் வந்து மோதிய போது மகாபாரத யுத்தம் நிகழ்ந்தது.

திருவாதிரை நட்சத்திரம் வெடித்தால் உலகத்தில் மிக முக்கிய தலைவர்களுக்கு பாதிப்பு வரலாம். போர்கள் ஏற்படலாம். வங்கிகள் திவாலாகும். உலக அளவில் பொருளாதார நிலையில் மாற்றங்கள் ஏற்படும் என்பதும் ஜோதிடர்களின் தெரிவித்த எச்சரிக்கையாகும். இப்போது கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை தாக்கி உலகத்தில் உள்ள பலரின் வாழ்க்கை பாதிக்க பட்டு வருகிறது. சீனாவில் ஆயிரக்கணக்கான மக்கள் மரணமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment