Monday 6 April 2020

எத்திசையில் தலைவைத்து தூங்கலாம்

எத்திசையில் தலைவைத்து தூங்கலாம்
==================================

அறிவியலின்படி பூமியின் சுழற்சி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி இருக்கிறது. அதேசமயம் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்த நிலையில் பூமியின் சுழற்சி அமைந்திருக்கிறது. அதாவது வடக்கு பகுதி சற்று பலமாகவும் தெற்கு பகுதி சற்று மேடாகவும் அமைந்திருக்கிறது. 

நீங்கள் உறங்கும் பொழுது வடக்கு பக்கம் தலையை வைத்து உறங்கினால், உங்களது தலைப்பகுதி பள்ளத்தில் இருப்பது போலவும், பாதம் மேட்டில் இருப்பது போலவும் அமையும். அதனால் ரத்த ஓட்டமானது அதிகமாக உங்கள் தலை பகுதிக்குச் செல்லும். ரத்த ஓட்டம் அதிகம் செல்லும் பகுதி சூடாகும். அதனால் உங்களுக்கு உறக்கம் சரியாக வராது. இதன் காரணமாகவே வடக்கு பக்கம் தலை வைத்து படுக்கக்கூடாது என்கிறார்கள். 

மாறாக தெற்கு பக்கம் தலை வைத்து வடக்கு பக்கம் இருப்பது போல் படுத்தால், நன்கு உறக்கம் வரும். இதற்கான காரணம் உங்களது தலைப்பகுதி மேட்டில் இருக்கும் அப்பொழுது ரத்த ஓட்டமானது தலைப்பகுதிக்கு குறைவாகவே செல்லும் அதனால் உங்களுக்கு சற்று களைப்பாக இருப்பது போல் தோன்றி நன்கு உறக்கம் வரும். இதன் காரணமாகவே, நமது முன்னோர்கள் தலையை உயர்த்தி வைக்க, தலையணை உபயோகிக்கும் பழக்கத்தை உருவாக்கினார்கள்.

No comments:

Post a Comment