Friday, 17 April 2020

வேம்பு கற்பம்



வேம்பு கற்பம்

வேப்ப எண்ணை உஷ்ணவீரியம் உள்ளது. வாதம் போன்ற நோய்களில் பயன்படும்.  வேம்பினுடைய மேல் புரணி நீக்கிய பட்டை மருத்துவ குணம் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு மேல் வயதான மரத்தில் இருந்து தான் பட்டை வெட்ட வேண்டும். இதனை உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும்.இது நல்ல மருந்தாகும்
போகர்700 மருத்துவ நூல் அதில் இந்த முறையைச் சொல்லி உள்ளார். 
பாடல்

தீர்ந்துபோஞ் சருவ நோயெல்லாந் தீரச்
செப்புகிறேன் நூறான்டு சென்ற வேம்பு
ஆய்ந்து நன்கு அடி மரத்தின் பட்டை வாங்கி
வாய்த் தந்தி சந்தி வெறுகடித்தூளாக
மன்டலங்கொள் பத்தியந்தான். நோய்தானேது
தேர்ந்து தானப்படியே கொண்டால் நன்று
நேராட்டால் சீனி சமன் சேர்த்துண்ணே

உண்ணவே வாதமெங்கே பித்த மெங்கே
ஒடுங்காத சூலையெஙகே கபங்களெங்கே.

முற்றிய நூறாண்டுவேம்பின் சதைப்பட்டையை உலர்த்தி தினம் இரு வேளை அரை ஸ்பூனளவு அப்படியே சாப்பிடலாம் அல்லது சர்கரை கலந்து சாப்பிடலாம்.
வாதம் பித்தம் கபம் சூலை நோய்கள் குணமாகும். 

சட்ட முனிவர் பாடல்.

ஆமப்பா இதுகடந்து நூறாண்டின் வேம்பை
அப்பனே பட்டையைத்தான் வெட்டிவந்து
ஓமப்பா மேற்பரனை சீவிப்போட்டு
உத்தமனே நிழலுலர்த்தாய் உலர்ந்த பின்பு
‌நாமப்பா இடித்து நன்றாய் சூரணமே செய்து
சாதகமாய் கருங்குன்றிச் சாறு வார்த்து
தேமப்பா ஏழுதிறம் பாவனையே செய்து
திறமாக நிழலுலர்த்தாய் உலர்த்திடாயே

உலர்ந்த பின்பு எட்டிலொன்று கற்கண்டு கூட்டி
உத்தமனே இரு கழஞ்சி இரு நேரங் கொள்ளு.
மலர்ந்து நின்றலையாமல் மண்டலந்தான் கொள்ளு
மைந்தனே வயிரம் போலிருக்குந் தேகம்
கலைந்து நின்ற நாடியெல்லாம் இறுகும் ஏறி
‌கண்துலக்கமுண்டாகி அழுந்தும் தேகம்
‌நலந்திகழும் நரை திரைகள் பிலமும் கெட்டு
‌நமனனுக்கு நமனாவான் நன்றாய் பாரே
‌நூறாண்டு வேம்பின் பட்டை சூரணம் செய்து அதில்  கரும் குன்றிமணிச் சாற்றை ஊற்றி கிளறி நிழலில் உலர்த்த வேண்டும் ஏழுமுறை
குன்றி மணியில் பல நிறங்கள் உண்டு
சுத்த வெண்மையாக கோழி முட்டை போல் இருக்கும் நரம்பு தளர்ச்சியை போக்கும்.முழு கருப்பு நிற குண்டுமணி உண்டு அதன் சாறை ஊற்றச் சொல்லுகிறார் இந்த செடியை நாம் விதை போட்டு பயிர் செய்ய வேண்டியது தான். 

10 கிராம் அளவு காலை மால மண்டலம் சாப்பிட வைரம் போல் உடல் வலுவடையும். நாடி நரம்புகள் இறுகும்
கண் பார்வை தெளிவாகும் நரை திரை பலஹீனம் எல்லாம் போய்விடும்
இவனுக்கு சாவு இல்லை. எமன் இறந்து விடுவான் இந்த கற்பத்தை நன்றாக கவனித்துப் பார்.

நூல் கருவூரார் வாத காவியம்

தானவனாம் வேம்பினுட கற்பந்தன்னை
தாரனியில் சித்தர்களே சாற்றக் கேளு
மானதொரு கார்த்திகையாம் மாதந்தன்னில்
வாழ் மிருகசீரிடமும் பூசந் தன்னில்
ஏனமுதல் ஜலமிக்க கொழுந்தைக்கிள்ளி
இன்பமுடன் தின்றுவா இருபத்தேழ் நாள்
ஆனதொரு சர்பங்கள் தீன்டினாலும்
அது பட்டுப்போகுமப்பா அறிந்து கொள்ளே

கொள்ளப்பா மாதமொன்று கொண்டாயாகில்
குஷ்டமென்ற பதினெட்டு வகையும் தீரும்
துள்ளுகின்ற பூதமொடு பசாசு தானும்
துடி துடித்துக் கண்டவுடன் ஓடப் போகும்
விள்ளுகிறேன் பொடி செய்து கொழுந்து தன்னை
வெறுகடியாய் தேனில் அரை மண்டலங் கொண்டால்
வள்ளலே நரையோடு திரையுமாறும்
வாலிபமும் நூறுவயது இருப்பான் தானே.

கார்த்திகைமாதம் மிருகசீரிடம் பூசம் வரக்கூடிய நாளில் ஆரம்பிக்கவேண்டும்27 நாள் கொழுந்தை தின்றுவர  பாம்பு கடித்தால் விஷமேறாது. ஒருமாதம் சாப்பிட பதினெட்டுவகை குஷ்ட நோய் போகும் . மன நோய்கள் போகும்
கொழுந்தை உலர்த்தி பொடி செய்து தேனில் ஆறுமாதம் சாப்பிட நரை திரை மாறி வாலிபனாகி நூறான்டுகள் வாழலாம்.
எனக்குத் தெரிந்து 90 வயதான வியாபாரி இருந்தார் அவர் வேலைக்கார பெண்ணிடம் வேப்பிலை கொழுந்து கிள்ளி வரச் சொல்லி சாப்பிடுவார். ஆள்திடமாய் இருப்பார். அந்த பெண்ணுக்கு மாதம் 3 ரூபாய் சம்பளம் கொடுப்பார். மற்ற வேலைகளுக்கு தனி சம்பளம். யாரையும் ஓசியில் வேலை வாங்கக் கூடாது என்று சொல்வார்
கல்பம் எவ்வளவு எளிமையானதாக உள்ளது.

No comments:

Post a Comment