இப்படி செய்தால், அந்த குச்சியானது எரியும் போது, உங்களது குழந்தைக்கு இருக்கும் தோஷம், கண் திருஷ்டி அனைத்தும் குழந்தையை விட்டு சென்றுவிடும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்து வந்தது. இது பல பேருக்கு பலன் தந்த குறிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்ததாக இன்னொரு பரிகாரத்தையும் பார்த்துவிடலாம். மயிலிறகை உங்களது வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஒரே ஒரு மயிலிறகை வாங்கி வைத்துக் கொண்டால் போதும். முருகர் கோவிலுக்கு செல்லும்போது இந்த மயிலிறகு சுலபமாக கிடைக்கும். அதை வாங்கி எப்பவும் உங்களது பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களது குழந்தை சிறிய குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை. கொஞ்சம் பெரிய குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை.அவர்கள் எங்காவது சென்று விளையாடும் போது எதையாவது பார்த்து பயந்திருந்தால், சில பிரச்சனைகள் வரும். அதை நாம் சுலபமாக கண்டுபிடித்து விடலாம். சரியாக சாப்பிட மாட்டார்கள். சோர்வாக இருப்பார்கள். முகம் களை இழந்து இருக்கும். ஆனால் மருத்துவரிடம் கூட்டிச் சென்றால் எதுவுமே இல்லை என்று சொல்வார்கள்.இப்படிப்பட்ட பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு இந்த மயில் இறகை வைத்து சுலபமாக பயத்தைப் போக்கி விடலாம். முதலில் உங்களது வீட்டு பூஜை அறையில் இருக்கும் மயிலிறகை எடுத்து சாமி படத்திற்கு முன்பாக வைத்து, மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பின்பு உங்களது குழந்தையை கிழக்கு பக்கமாக நிற்க வைத்து உச்சி முதல் பாதம் வரை, அந்த மயிலிறகால் வருடி திருஷ்டி கழிக்க வேண்டும்.இப்படி திருஷ்டியை கழிக்கும்போது அந்த ஆண்டவனை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். (இந்தக் குழந்தைக்கு இருக்கும் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அது நீங்க வேண்டும் என்றவாறு வேண்டிக் கொள்ளுங்கள்.)7 முறை மேலிருந்து கீழ் பக்கமாக தடவி விட வேண்டும். அல்லது 11 முறை தடவை விடலாம். மயிலிறகு அந்தக் குழந்தையின் உடம்பில் படவேண்டும். திருஷ்டியை கழித்ததும் குழந்தையை அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு போக சொல்லிவிட்டு, அந்த தோகையை மூன்று முறை ஒதறி விடுங்கள். நீங்கள், உங்களது கை கால்களையும் கழுவிக்கொண்டு, அந்தத் தோகையை மறுபடியும் பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள். சிறிய குழந்தைகள் விடாமல் அழுது கொண்டே இருந்தாலும் இந்த முறையில் திருஷ்டி கழிப்பது மிகவும் சிறந்தது.இந்த காலகட்டத்தில் பட்சி தோஷம் எல்லாம் பார்ப்பது வழக்கத்தில் இல்லாமல் இருந்தாலும், சில சமயங்களில் எதற்காக தான் குழந்தை அழுகிறது என்று தெரியாமல் பல பேர் குழப்பத்தில், பல பிரச்சனைகளை சந்திக்க தான் செய்கிறார்கள். மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றாலும், சில பிரச்சனைகள் தீரவே தீராது. மருத்துவமனைக்கு கூட்டி செல்லக் கூடாது என்று சொல்லவில்லை. மருத்துவரை அணுகுவதோடு, நம் முன்னோர்கள் சொல்லியிருக்கும் இந்த வழிமுறைகளையும் பின்பற்றுவதில் தவறில்லை என்பதை தெரியப்படுத்துவதற்காக தான் இந்த பதிவு.
Thursday 23 April 2020
திருஷ்டி கழிப்பதற்கு இப்படியும் ஒரு வழி இருக்கிறதா! அது என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்க ஆசைப்பட்றீங்களா?
குழந்தைகளுக்கு திருஷ்டி கழிப்பதற்கு பலவகையான வழிமுறைகளை நாம் தெரிந்து வைத்திருந்தாலும், நம் முன்னோர்கள் சொன்ன வலுவான ஒரு சில முறைகளை நாம் தவற விட்டிருக்கின்றோம். காலப்போக்கில் அவை எல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்லி மறைந்தே போய்விட்டது. அதில் சிலவற்றை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த குறிப்புகள் சில பேருக்கு தெரிந்து இருந்தாலும், வீட்டில் இதை செய்ய மாட்டார்கள். வீட்டில் இந்த குறிப்புகளை பயன்படுத்தி எப்படி திருஷ்டி கழிக்கலாம், என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.இந்தப் ஒரு பொருளை நாம் எல்லோரும் மறந்து இருப்போமோ என்னமோ! தெரியவில்லை! அந்த காலங்களில் எல்லாம் வீடு கூட்டுவதற்கு பூந்துடைப்பத்தை தான் பயன்படுத்துவார்கள். இப்போது வீடு கூட்டும் துடைப்பமும் காலத்துக்கு ஏற்றவாறு மாறிவிட்டது. அந்த பூந்துடைப்ப குச்சியை வைத்து தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அந்த காலங்களில் பச்சிளம் குழந்தையும், குழந்தை பெற்ற தாய்மாறும் பட்சி தோஷம் தாக்கிவிடும் என்று மாலை 6 மணிக்கு மேல் வெளியில் வர மாட்டார்கள். அந்த குழந்தையின் துணி ஆறு மணிக்கு மேல் வெளியில் காய்ந்தால் கூட இந்த தோஷம் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி தோஷம் தாக்கிவிட்டால் பாடம் போடும் பழக்கம் அந்த காலங்களில் இருந்து வந்தது. அதாவது மந்திரித்து தாயத்து போடுவார்கள். இப்போது மந்திரிப்பவர்களையும் தாயத்து போடுபவர்களை தேடுவது கொஞ்சம் சிரமமாக உள்ளது.இந்த தோஷம் குழந்தைக்கு தாக்கினால், குழந்தை பச்சை நிறத்தில் மலம் கழிக்கும், சலசலவென்று அழுதுகொண்டே இருக்கும். இப்படி இருக்க அந்தக் குழந்தையை, தாயின் மடியில் படுக்க வைத்து இந்த பூந்துடைப்ப குச்சியில் 8 எடுத்து, அந்த குச்சியின் கீழ் முனையை கைகளால் பிடித்து கொள்ள வேண்டும். குழந்தையின் இடமிருந்து வலமாக மூன்று முறையும், வலமிருந்து இடமாக மூன்றுமுறையும் சுற்றி, பின் தலை முதல் கால் வரை மேலிருந்து கீழாக மூன்றுமுறை தடவி(மெதுவாக தடவ வேண்டும்), அந்த குச்சியை உங்களது வீட்டு தென்கிழக்கு மூலையில் வைத்து கொளுத்தி விட வேண்டும்.
No comments:
Post a Comment