Thursday, 23 April 2020

ஏப்ரலில் பிறந்தவர்கள் இப்படி பட்டவர்களா? இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமோ!!

பிறந்த மாதத்தை கொண்டு பொதுவான பலன்களை கூற முடியும். ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களும் ஒவ்வொரு குணாதிசயத்தை கொண்டிருப்பார்கள். இதில் ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப் பட்டவர்களாக இருப்பார்கள்? அவர்களிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? அவர்களின் நல்ல குணம் மற்றும் கெட்ட குணங்கள் என்னென்ன.? அவர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இப்பதிவில் காணலாம்.
இவர்கள் எப்போதும் தங்களின் இதயத்தை கேட்டு செயல்படுபவர்களாக இருப்பார்கள். எனினும் புத்திசாலித்தனத்துடனும் இருப்பார்கள். இவர்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் காணப்படுவார்கள். இவர்களை பார்ப்பவர்களுக்கும் இவர்களைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கும்.
பிறருக்கு அறிவுரை கூறுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். எந்த செயலையும் விவேகத்துடன் செயலாற்றுவார்கள். ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தைரியமானவர்களாக இருப்பார்கள். எதை கண்டும் அஞ்ச மாட்டார்கள். பின்னால் வருவதை பற்றி கவலைப்படமாட்டார்கள். அவர்களுடைய பணியை சிறந்ததாக செய்து முடிப்பதில் கவனமாக இருப்பார்கள்.
தோல்வியை கண்டு சிறிதும் கலக்கம் கொள்ள மாட்டார்கள். அதிலிருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பதை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். வெற்றியை நோக்கி செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் மன தைரியம் பல நல்ல வாய்ப்புகளை இவர்களுக்கு பெற்று தரும். இவர்கள் எடுக்கும் முடிவுகள் தீர்க்கமாக இருக்கும்.
ஆளுமை திறன் அதிகமாக காணப்படும். எனினும் இவர்களிடம் தலைகணம் இருக்காது. வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து சாதனை புரிபவர்களாக திகழ்வார்கள். பிரச்சனைகளை எதிர் கொள்வதற்கு எப்போதும் இவர்கள் பயப்படுவதில்லை.
எந்த வேலை செய்தாலும் அதை மிகவும் ரசித்து ரசித்து செய்வார்கள். ரசனை மிக்கவர்களாக இருப்பார்கள். பணம் சம்பாதிப்பதும், சாதனைகள் புரிவதும் இவர்களின் குறிக்கோளாக இருக்கும். அதற்காக விடா முயற்சிகளை மேற்கொள்வார்கள். சலித்துப் போகமாட்டார்கள்.
இவர்கள் மற்றவர்களுக்கு உண்மையானவர்களாக இருப்பார்கள். அவர்களைப் போலவே அவர்களிடம் பழகுபவர்களும் உண்மையாக இருப்பதில் ஆர்வம் கொள்வார்கள். அப்படி இவர்களிடம் உண்மையில்லாத நபர்களை அடையாளம் காண்பதில் மிகுந்த சிரமம் மேற்கொள்வார்கள்.
பணத்தைவிட அன்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒருவர் மேல் அன்பு வைத்து விட்டால் அது முழுமையான அன்பாக இருக்கும். எளிதில் அனைவரையும் கவர்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். அனைவரின் மனதிலும் சிறப்பான இடத்தை பிடித்து விடுவார்கள். மிகவும் கலகலப்பானவர்கள்.
இவர்களின் காதல் உண்மையானதாக இருக்கும். எளிதில் அனைவரையும் நம்பி விடுவார்கள். மிகவும் ரொமான்டிக் ஃபர்சனாக இருப்பார்கள். இவர்களின் அன்பும், கவர்ச்சியும் எளிதில் ஈர்க்கக் கூடியதாக இருக்கும். இவர்களின் காதல் தோற்கும் பட்சத்தில் துறவரம் மேற்கொள்ளும் அளவிற்கு இவர்களின் அன்பு உன்னதமானதாக இருக்கும். இவர்களுடன் இருக்கும் போது மகிழ்ச்சிகரமானதாகவும், ரசிக்கும் படியும் இருக்கும்.
இவர்களிடம் இருக்கும் மைனஸ் பாயிண்ட் என்னவென்றால் சிறிதும் பொறுமையின்றி இருப்பார்கள். பொறுமையின்மை இவர்களின் பலவீனமாக இருக்கும். பதில்களுக்கும், முடிவுகளுக்கும் காத்திருக்க மாட்டார்கள். மற்றவர்களை எடை போடுவதில் கோட்டை விட்டு விடுவார்கள்.
பெரிய பெரிய விஷயங்களில் எல்லாம் பொறுமையாக இருந்து விட்டு, சிறிய விஷயங்களுக்காக சண்டை போடுவார்கள். சிறு சிறு விஷயங்களில் இன்பத்தை தேடுபவர்கள் இவர்கள். இதனால் சிலரின் வெறுப்புகளுக்கு ஆளாகவும் நேரிடும் என்பதை புரிந்து கொள்ளாதவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் குறுகிய மனப்பான்மை இருக்கும். இதனால் இவர்களை சமாளிப்பது சற்று கடினமாக இருக்கும். மற்றவர்களின் கண்களுக்கு சுயநலக்காரர்களாக தெரிவார்கள். எந்த விஷயத்திற்கு பரவசப்பட வேண்டும்? எந்த விஷயத்திற்கு அடக்கி வாசிக்க வேண்டும்? என்பதை உணர முடியாதவர்களாக இருப்பார்கள். அதுவும் இவர்களின் பலவீனமாக இருக்கும். எதிலும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் மும்முரமாக இருப்பதனால் சிலரின் அதிருப்திக்கு ஆளாவார்கள்.
கோபத்தை குறைத்து அடுத்தவர்களின் இடத்தில் நின்று சிந்தித்து செயல்பட்டால் இவர்களுக்கு வெற்றி நிச்சயம். பலவீனத்தை பலமாக மாற்றினால் அனைத்தும் வசப்படும். வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment