1).ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத் – பூஜா ப்ரகாச ஆரோக்கியத்தைக் கேள்
(சூரியன் மூலம் வைடமின் ‘டி’ கிடைக்கிறது. கண், ஒளி பெறுகிறது. இதை அறிந்த முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே இப்படிச் சொல்லிவைத்தனர்; ஒப்பிடுக: கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரமா?)
2).காய: கஸ்ய ந வல்லப: – பஞ்ச தந்திரம்
யாருக்குதான் உடல் மீது பற்று/ ஆசை இல்லை?
3).இதம் பஸ்மாந்தம் சரீரம் – ஈஸாவாஸ்ய உபநிஷத்
(ஒப்பிடுக: முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதும் கண்டு…………..பட்டினத்தார்)
4).நீரையும் சீராடு
நீரை முறையாகப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறலாம்.
5).உடம்பைக் கடம்பால் அடி
கடம்ப மரக் கட்டில் மிகவும் நல்லது
6).லங்கணம் பரம ஔஷதம்
பட்டினி கிடந்தால் பல நோய்கள் பறந்தோடிவிடும்
7).கிமிவ ஹி மதுராணாம் மண்டனம் நாக்ருதீனாம் –சாகுந்தலம்
அழகுக்கு எதுதான் அழகு சேர்க்காது?
8).தர்மார்த்த காம மோக்ஷாணாம் ஆரோக்யம் மூலம் உத்தமம் – சரக சம்ஹிதை
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பேறுகளையும் அடைய ஆரோக்கியமே சிறந்த சாத்னம்/கருவி.
9).சுட்ட எண்ணையைத் தொடாதே, வறுத்த பருப்பை விடாதே!
ஒரு முறை சூடாக்கிய எண்ணையையோ, நெய்யையோ மீண்டும் சூடாக்கினால், கெட்ட ‘’கொலஸ்ட்ரால்’’ அதிகரிப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது
10).திகஸ்து கலு மானுஷ்யம் – வால்மீகி ராமாயணம்
மனிதப் பிறவி வேண்டத் தக்கது ( பெறுதற்கரிய பேறு)
ந சரீரம் புனப் புன: — சாணக்ய நீதி தர்ப்பண:
அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
11).ஸ்யேம நு சூர்யமுச்சரந்தரம் – ருக் வேதம்
தலைக்கு மேல் சூரியனை எப்போதும் காண்போமாக (நூறாண்டுக் காலம் நல்லபடி வாழ்வோமாக)
12).பஸ்யேமஸ் சரதஸ்சதம், ஜீவேம சரதஸ்சதம் – யஜூர், அதர்வ வேதங்கள்
நூறாண்டுக் காலம் நாம் காண்போமாக; நூறாண்டுக் காலம் நாம் வாழ்வோமாக
(நூறாண்டுக் காலம் வாழ்க; நோய்நொடியிலாமல் வாழ்க)
13).பஹிஸ்ஸரதி நிஸ்வாஸே விஸ்வாச: க: ப்ரவர்ததே – மஹாபாரதம்
வெளியே போன மூச்சு திரும்பிவரும் என்று எப்படி நம்புவது?
(போன மூச்சு திரும்பிவரும் என்று உத்தரவாதம் கிடையாது)
போனால் போச்சு, பொழுது விடிந்தால் ஆச்சு!
தூங்குகையில் வாங்குகிற மூச்சு, அது சுழி மாறிப்போனாலும் போச்சு!
14).மரணம் ப்ரக்ருதி: சரீரிணாம் – ரகு வம்சம்
பிறந்தோரெல்லாம் இறப்பது இயற்கை
மரணம் ப்ரக்ருதி சரீரிணாம் விக்ருதி ஜீவிதம் உச்யதே புதை:
க்ஷணமப்யவதிஷ்டதே ஸ்வசன்யதி ஜந்துர்நனு லாபவானசௌ
(ரகுவம்சம் 8-87)
பொருள்: உடல் எடுத்த பிராணிகளுக்கு மரணமானது இயற்கையானது; பிழைத்திருப்பதுதான் எதிர்பாராதது என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். பிராணியானது ஒரு கணமேனும் ஜீவித்திருக்குமாயின் இப் பிராணிக்கு பெரிய லாபம்தான்!!
((ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யு: — பிறந்தவர் எல்லாம் இறப்பது இயல்பு; இறந்தவர் எல்லாம் பிறப்பது உறுதி –கீதை 2-27))
15).ரம்யாணாம் விக்ருதிரபி ஸ்ரியம் தனோதி – கிராதார்ஜுனீயம்
அழகுள்ளவரித்தில் செயற்கையான பொருள் இருந்தாலும் அது அழகே சேர்க்கும்
16).பூஷாபி: கிம் சுந்தரோ ய: ப்ரக்ருத்யா
அழகானவர்களுக்கு அலங்காரம் எதற்கு?
17).சரீரமாத்யம் கலு தர்மசாதனம் – குமாரசம்பவம்
அறப் பணிகள் செய்வதற்கு ஆதாரமானது இந்த உடல்தான்.
No comments:
Post a Comment