Friday, 17 April 2020

நரம்பு தளர்ச்சிக்கு இது தான் சரியான மருந்து !

பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அவதிப்படும் பிரச்சனை தான் இந்த நரம்பு தளர்ச்சி.

மது அருந்துபவர்கள், புகைபிடிப்பவர்கள் அல்லாது, உடல் ஆரோக்கியம் குறைந்து பிறப்பிலேயே உடல் வாதம், நரம்பு தளர்ச்சி ஏற்படக்கூடும். அதற்க்கு நிரந்தர தீர்வு என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இதற்கு மூலிகை மருத்துவம் தான் சிறந்ததென்பது நாம் அறிந்த உண்மை. எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு குணப்படுத்த இயலும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

அந்தவகையில், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பலவீனத்தை போக்கும் மருத்துவம் என்னவென்றால் திருநீற்றுப்பச்சை, தூதுவளை, வல்லாரை ஆகும்.

இவை நரம்புகளை பலப்படுத்தும் மூலிகைகளாக விளங்குகின்றன. மேலும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை பொறுத்து உடலின் அனைத்து செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்தும்.

இவ்விதமான மூலிகைகள் ஞாபக சக்தி, ஜீரண சக்தி, தூக்கம் போன்றவற்றுக்கு தீர்வாய் உதவுகிறது. கை கால்களில் நடுக்கம், சோர்வு, மறதி, உள்ளங்கை கால்களில் வியர்வை போன்ற பிரச்னைகளுக்கு திருநீற்றுபச்சையை சிறந்த மருந்தாய் இருக்கும்.

10 திருநீற்று பச்சை இலைகளை சுத்தப்படுத்தி, இதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி சிறிது காய்ச்சிய பால் சேர்த்து, காலை வேளையில் குடித்துவர நரம்புகள் பலம் அடையும்.

உடல் சோர்வை போக்குவதோடு பல்வேறு நன்மைகளை தரக்கூடும். இவை நரம்புகளை பலப்படுத்தும் தன்மை உடையது. சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்தும்.

தூதுவளையை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தூதுவளை இலை, மஞ்சள் மற்றும் வெள்ளை கரிசாலை இலை ஒருபிடி அளவுக்கு எடுக்கவும்.

இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்துவர நரம்புகளுக்கு பலம் ஏற்படும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

இதுமட்டுமல்லாமல் தானியங்கள், காலி பிளவர், முளைகட்டிய பயிர்களும் நரம்பு தளர்ச்சிக்கு சிறந்த மருந்தாகும்.

No comments:

Post a Comment