Saturday, 16 May 2020

இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிப்பது எப்படி


இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிப்பது எப்படி?


மனிதன் உயிர் வாழ ஆக்ஸிஜன் மிகவும் இன்றியமையாதது. மனித உடலில் உள்ள செல்களுக்கு ஆக்ஸிஜனை வழங்குவது இரத்தம் தான். அத்தகைய இரத்தத்தில் போதிய அளவு ஆக்ஸிஜன் இருந்தால் தான், உடலால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவோ, நச்சுக்களை வெளியேற்றவோ மற்றும் இதர உடலின் செயல்பாடுகளை சரியாக செய்யவோ முடியும்.


ஆனால் இக்காலத்தில் நம்மைச் சுற்றி நச்சுமிக்க வாயுக்களின் அளவு அதிகம் உள்ளதால், சுவாச கோளாறால் ஏராளமானோர் கஷ்டப்படுகின்றனர். ஆக்ஸிஜன் அதிகம் வேண்டுமானால் மரங்கள் அதிகம் வேண்டும். ஆனால் பணத்தின் மீதுள்ள ஆசையால், மரங்களை வெட்டி கம்பெனிகளையும், வீடுகளையும் கட்டி, நமக்கு நாமே நாமம் போட்டுக் கொள்கிறோம்.

சரி, நமக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்க என்ன வழி என்று நீங்கள் கேட்கலாம். கீழே இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி ஆக்ஸிஜன் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.


டிப்ஸ் #1
நல்ல வேளை நாம் பூங்காக்களை விட்டு வைத்துள்ளோம். நல்ல சுத்தமான காற்று மட்டுமின்றி, ஆக்ஸிஜனும் பூங்காக்களில் கிடைக்கும். எனவே தினமும் அருகில் உள்ள பூங்காவிற்கு சென்று, சிறிது நேரம் தியானம் செய்யுங்கள். இதனால் மரங்கள் வெளியிடும் ஆக்ஸிஜனை சுவாசித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.


டிப்ஸ் #2
தினமும் மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இப்படி மூச்சுப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம், நம்மைச் சுற்றியுள்ள ஆக்ஸிஜனை நாம் சுவாசிக்க முடியும்.



டிப்ஸ் #3
எப்போதும் நல்ல மற்றும் நேரான நிலையில் அமர வேண்டும். இப்படி நல்ல நிலையில் ஒருவர் அமர்ந்து சுவாசிக்கும் போது நுரையீரலால் சீரான முறையில் செயல்பட்டு சுவாசிக்க முடியும்.



டிப்ஸ் #4
அன்றாடம் தவறாமல் 20 நிமிடம் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதிலும் கார்டியோ பயிற்சிகளை தினமும் சிறிது நேரம் மேற்கொள்வதன் மூலம், உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, ஆக்ஸிஜனின் அளவும் அதிகரிக்கும்.


டிப்ஸ் #5
புகைப்பிடிக்கும் பழக்கத்தை முதலில் கைவிடுங்கள் மற்றும் புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பதையும், மது அருந்துவதையும் தவிர்த்திடுங்கள். இந்த ஒரு விஷயத்தை மனதில் கொண்டு நடந்தாலே, ஆக்ஸிஜன் குறைபாட்டினால், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதில் இருந்து விடுபடலாம்.


டிப்ஸ் #6
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள். ஏனெனில் இரத்தத்திற்கு இரும்புச்சத்து மிகவும் நல்லது. இத்தகைய இரும்புச்சத்து கீரைகள், பச்சை இலைக் காய்கறிகளில் அதிகம் இருப்பதால், இவைகளை அன்றாட உணவில் முடிந்த வரை சிறிது சேர்த்து வாருங்கள்.


டிப்ஸ் #7
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ள உணவுகள், ஆக்ஸிஜனை இரத்தத்தில் சரியான அளவில் கலக்கச் செய்யும். அதிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை நிறைந்த உணவுகளான ப்ளூபெர்ரி, கிரான் பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளம்ஸ், ப்ளாக்பெர்ரி போன்றவை கிடைக்கும் போது தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

1 comment:

  1. அய்யா ... வெ. சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அய்யா.... காற்றில் 21% ஆக்ஸிஜன் கலந்துள்ளது.

    ReplyDelete