Tuesday, 5 May 2020

பகலில் பிறந்தவர்களை விட இரவில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலிகளா? எந்த நேரத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிஞ்சிக்கணுமா?

ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து தான் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களை கணித்து கூறுகின்றனர் ஜோதிடர்கள். எனவே பிறந்த நேரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இதில் பகலில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்? இரவில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்? என்று இரு கூறுகளாக பிரிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை ரகசியங்களை துல்லியமாக கூற முடியும். நீங்கள் எந்த நேரத்தில் பிறந்தவர்கள் என்று தெரியுமா? எனில் உங்களின் ரகசியங்கள் சரியா? தவறா? என்று நீங்களே கூறி விடலாம்.
பொதுவாகவே பகலில் பிறந்தவர்கள் இரவில் பிறந்தவர்களை விட, பேச்சாற்றலில் வல்லமை மிக்கவர்களாக இருப்பார்கள். சுற்றி இருக்கும் நபர்களை விரைவில் நண்பர்களாக்கி கொள்வார்கள். மிகவும் பிரகாசமான தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் ரகசியம் என்பதே கிடையாதாம். ரகசியங்களை காப்பது இவர்களுக்கு கடினமான வேலையாக இருக்குமாம். எதையும் மனதிற்குள் வைத்துக் கொள்ளாமல் பட்டன பிடித்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் கலகலப்பான நபர்களாக இருப்பார்களாம்.
இரவு நேரம் என்பது அமைதியாகவும், தனிமையாகவும் இருப்பதால் பெரும்பாலும் இரவில் பிறந்தவர்கள் இதற்கு முற்றிலும் நேர்மாறானவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் தனிமையை விரும்புபவர்களாக இருப்பார்கள். அதிகம் பொறுமைசாலியாக இருப்பார்கள். எந்த விஷயத்திலும் நிதானமாக யோசித்து முடிவு எடுப்பார்கள். எதையும் விரைவில் புரிந்து கொள்வதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
வாழ்க்கையில் சிக்கலான நேரங்களில் எந்த மாதிரியான முடிவை எடுப்பதாக இருந்தாலும் அதற்கான நேரமாக இரவு நேரம் இருக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. எப்போதும் பகலில் சரியான முடிவுகளை எடுக்க முடிவதில்லை. அமைதியான இரவு நேரங்களில் தான் முக்கிய முடிவுகளை தீர்க்கமாக எடுக்க முடிகிறது. இவ்வகையில் இரவில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சுலபமாக கையாளும் திறமை மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் எடுக்கும் முடிவுகள் 90% மிகச் சரியாக இருக்கும் என்பதை பிறரால் நம்பப்படுவார்கள்.
பகலில் பிறந்தவர்களை விட, இரவு நேரத்தில் பிறந்தவர்கள் அதி புத்திசாலிகளாக இருப்பார்கள் என்பது அறிவியலினால் நிரூபிக்கப்பட்ட கூற்று. இதற்கான காரணங்கள் என்னவென்றால், பகலில் பிறந்தவர்கள் பெற்றிருக்கும் உடல் வலிமையை விட, இரவில் பிறந்தவர்கள் அதிகமாக கொண்டிருப்பார்களாம். அவர்களின் புத்திக்கூர்மையும் அதிகமாக இருக்குமாம். இதனால் இரவில் பிறந்தவர்களின் அறிவாற்றல் அதி புத்திசாலித்தனமாக செயல்படுகிறதாம்.
இரவில் பிறந்தவர்களுக்கு ‘கார்டிசோலின்’ என்கிற மன அழுத்தம் ஏற்படக்கூடிய ஹார்மோன் சுரப்பு குறைவாக இருக்குமாம். ஆனால் பகலில் பிறந்தவர்களுக்கு இது அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் இவர்களால் சில விஷயங்களில் நிதானமாக செயல்பட முடியாமல் போகிறது. ஆனால் அதுவே இரவில் பிறந்தவர்களுக்கு மிகவும் நிதானமாக இருக்கக்கூடிய தன்மையை அதிகரிக்க காரணமாக அமைந்துவிட்டது. இதனால் இவர்கள் சிந்திக்கக்கூடிய விதம் தெளிவாக இருக்கும்.
பகலில் பிறந்தவர்கள் நல்ல படிப்பாளிகளாகவும், சிறந்த ஊதியம் பெறுபவர்களாகவும் இருப்பார்கள். இரவில் பிறந்தவர்கள் பொது அறிவு மிக்கவர்களாகவும், சமயோஜித புத்தி உள்ளவர்களாகவும் இருப்பார்கள். பகலில் பிறந்தவர்கள் இரவில் பிறந்தவர்களை விட அதிக நேரம் உறங்குபவர்களாக இருப்பார்கள். இரவில் பிறந்தவர்களுக்கு பகல் நேரங்களில் உறங்குவது பிடித்த விஷயமாக இருக்குமாம். குறைந்த அளவு தூக்கம் கொண்டிருந்தாலும் இரவு நேரத்தில் பிறந்தவர்கள் விழிப்புணர்வுடன் இருப்பார்கள்.
இரவு நேரத்தில் பிறந்தவர்கள் இரவு எவ்வளவு நேரமானாலும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடிக்காமல் தூங்க செல்ல மாட்டார்கள். ஆனால் பகலில் பிறந்தவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை தாண்டி வேலை செய்வதற்கு விரும்புவதில்லை. பகலில் பிறந்தவர்கள் அதிகம் புத்தகம் படிப்பவர்கள். ஆனால் இரவில் பிறந்தவர்கள் மிகுந்த கற்பனை திறன் கொண்டவர்களாக, புதிய விஷயங்களை கற்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் இரவில் அதிகம் சிந்திப்பவர்களாக இருப்பதால் எதிர்காலம் குறித்த திட்டமிடல் மேலோங்கியிருக்கும். வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று அஜாக்கிரதையாக இருக்க மாட்டார்கள்.
இரவு நேரத்தில் பிறந்தவர்கள் அதிகம் சிந்திப்பவர்களாக இருப்பதால் இவர்களிடம் சில தீய பழக்கங்களும் இருக்கலாம். பகலில் பிறந்தவர்களை விட இரவில் பிறந்தவர்களுக்கு போதை குறித்த பழக்கங்கள் எளிதில் தொற்றிவிட கூடியதாக இருக்கும். எனவே இவர்கள் இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

No comments:

Post a Comment