Wednesday, 3 June 2020

தெருக்குத்து வீடு

வீடு என்றிருந்தால் வாசல் ஒன்று இருக்கத்தானே செய்யும் . வாசல் இருந்தால் அது தெருவைப் பார்த்துதானே இருக்கும். ஆனால், இங்கே நாம் சொல்ல வருவது வீட்டு வாசலுக்கு எதிராக வீடு இல்லாமல், தெரு இருப்பது பற்றித்தான். உதாரணமாக மூன்று தெருக்கள் சேரும் இடத்தில் ஒரு வீட்டின் வாசலுக்கு எதிரில் வீடு இல்லாமல் தெரு இருக்கத்தான் செய்யும். அதை தெருத் தாக்கம் உள்ள வீடு என்றும் தெருக்குத்து வீடு என்றும் சொல்வார்கள். இப்படி தெருவை நேராகப் பார்த்தபடி வீடு இருப்பது பிரச்னை தருவதாகச்  சிலரும், நன்மை தருவதாகவும் சிலரும் சொல்கிறார்கள். 

''வாஸ்து சாஸ்திரம் ஒவ்வொரு வீட்டையும் ஒரு சிறு பூமி என வர்ணிக்கின்றது. பூமியை, நாம் பூமாதேவி என்று வழிபாடு செய்கின்றோம். இதற்குப் பெருமை சேர்ப்பது போல் பல குடும்பப் பெண்கள் தனக்கு வீடுதான் உலகம் என்றும், வீடுதான் சொர்க்கம் என்று சொல்லுவார்கள்.இந்த வார்த்தைகள் முற்றிலும் உண்மையானதாகும். இதனால்தான் இந்த சாஸ்திரத்தை, பெண் சாஸ்திரம் என்றே அழைக்கின்றனர்.

பூமிப்பந்து 
நாம் பூமியை பந்து எனவும் கூறுகின்றோம். அது ஒரு அச்சில் பிணைக்கப்பட்டது போல், பால்வெளி மண்டலத்தில் மற்ற கோள்களைப் போலவே நீள்வட்டப்பாதையில் பயணிக்கின்றது. தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றது என்பதைச் சிறிய வயதிலேயே  படித்துள்ளோம். 

பூமியானது 23 1/2(இருபத்திமூன்றரை)டிகிரி வடகிழக்கே சாய்ந்த நிலையில் சுற்றுகின்றது. பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் காந்தப்புயலின் சராசரி தாக்கமும் சூரியக்கதிர்களின் மாறுபட்ட கதிர் தாக்கங்களும் பூமியில் கட்டப்படும் கட்டடங்களில் நிலைத்தன்மையான வேகத்தைத் தரும். இவை கிரகங்களின் வான் சலனங்களையும் முறைப்படுத்துகின்றது.  


நமது முன்னோர்கள் இதை மிகவும் துல்லியமாக ஆராய்ந்தனர். 

இதன் அடிப்படையில்தான் 'காஸ்மிக்' கதிர்கள் வீட்டினுள் பரவும் முறையை உச்சம், நீசம் எனப் பெயரிட்டனர்.அந்த வகையில் காஸ்மிக் கதிர்கள் பலமாக வரும் பாதையை உச்சம் எனவும், அது பலவீனமாகும் பகுதியை நீசம் எனவும் பாகுபடுத்தினர். 
நவகிரகங்களின் பூமிச்சலனத்துக்குத் தக்கபடி பலன்களைக் கண்டறிந்தனர். வான் வழியே பயணிக்கும் கோள்களின் சலனங்களை, தாக்கங்களை, பூமியில் கட்டப்படும் கட்டடங்களால் முறைப்படுத்த முடியும் என்பதே அந்தக் கண்டுபிடிப்பு. 

தெருத்தாக்கம் 
இந்த வகையில் ஒன்றுதான் கட்டடங்களுக்கு ஏற்படும் தெருத்தாக்கம். தெருத்தாக்கம் என்பது தெருக்குத்தல், தெருநெருங்கல், சாலைக்குத்தல், வீதிக்குத்தல் எனப் பல பெயர்களால்  அழைக்கப்படுகின்றது. 

நம் வீட்டுக்கு வெளியே சாலை அல்லது வீதி இருக்கும். அந்த வீதிக்கு எதிர்திசையில் ஒரு சந்தோ, தெருவோ, பெரிய வீதியோ அல்லது சாலையோ வருமானால், அதற்குப் பெயர்தான் தெருத்தாக்கம்.  அது நம் வீட்டின் பாகத்துக்கு நேர் எந்தப் பகுதி வரை வருகின்றது என்று பார்க்கவேண்டும்.

இதற்கு எட்டு வகையான பெயர்கள் உண்டு. வடக்கு ஈசான்யம்,கிழக்கு ஈசான்யம், கிழக்கு அக்கினி, தெற்கு அக்கினி,தெற்கு நைருதி, மேற்கு நைருதி மேற்கு வாயுவியம், வடக்கு வாயுவியம் என இந்தத் திசைகளின் பெயரால் தெருக்குத்தல் அழைக்கப்படுகின்றது. 
இது மட்டுமின்றி கிழக்கு உச்சம், கிழக்கு நீசம் , வடக்கு உச்சம், வடக்கு நீசம், மேற்கு உச்சம்,மேற்கு நீசம்,தெற்கு உச்சம்,தெற்கு நீசம்,என மற்றும் பல பெயர்களினாலும் தெருக்குத்தல் அழைக்கப்படுகின்றது.

 தெருத் தாக்கங்கள் நேர் தாக்கங்கள் கொண்டவையாகவும், இருமனைத் தாக்கம் கொண்டவையாகவும் அமைவதால், தெருவின் தன்மைக்குத் தக்கபடி மனைக்குப் பலன்கள் கிடைக்கும்.

 * வீட்டின் கிழக்கு ஈசான்ய பாகத்தைத் தாக்கும் தெருத் தாக்கம், கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக்கூடியது. நன்மை தரும் தாக்கம் ஆகும். 

* கிழக்கு ஆக்கினேய பாகத்தைத் தாக்கும் தெருத் தாக்கம், விபத்தைத் தரக்கூடியது. வீண் விரயங்களைத் தரும். துன்பங்களை அதிகம் தரக்கூடியது. 

தெற்கு ஆக்கினேய பாகத்தைத் தாக்கும் தெருத் தாக்கம், பெண்களுக்கு நல்ல சௌகரியத்தையும், மகிழ்ச்சியையும் தரும். மாமனார் வழி உதவிகள் கிடைக்கும். 

* தெற்கு நைருதி பாகத்தைத் தாக்கும் தெருத் தாக்கம், பெண்களுக்குத் தீராத நோயைத் தருவதுடன் பொருளாதார விரயத்தையும் உண்டுபண்ணும். 

* மேற்கு நைருதி பாகத்தைத் தாக்கும் தெருத் தாக்கம், குடும்பத் தலைவனின் செயல்வேகத்தைத் தடைசெய்யும். அறுவைச் சிகிச்சை செய்யுமளவுக்கு நோய் தாக்கத்தைத் தரும். பொருளாதார நஷ்டம், வியாபாரத்தில் சரிவு, உத்யோகத்தில் குழப்பம், கௌரவம் கெடும் அளவு துன்பங்கள் தரும். 

* மேற்கு வாயுவிய பாகத்தைத் தாக்கும் தெருத் தாக்கம், வெளித் தொடர்புகள், வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் நட்பு வகையில் நல்ல ஆரோக்கியமான அணுகுமுறைகளைத் தரும். 

* வடக்கு வாயுவிய பாகத்தைத் தாக்கும் தெருத் தாக்கம் வரவு-செலவுகளில் நஷ்டத்தையும், சண்டை சச்சரவுகளையும், குடும்பத்துக்குள் ஒற்றுமையின்மையையும், சொத்துத் தகராறுகளையும், பெண்கள் மனதில் நிம்மதி குறையும்படியான தன்மைகளையும் தரும். விபத்துகளை உண்டுபண்ணும். 

* மொத்த மனைபாகத்தையும் தாக்கும் தெருத் தாக்கம், நன்மையே செய்யும். தீமைகள் தொடர வாய்ப்பில்லை. 


* இரு மனையைத் தாக்கும் தெருத் தாக்கம், ஒரு மனைக்கு நன்மை செய்தால், மற்றொரு மனைக்குத் தீமை செய்யும். இவை தாக்கும் அளவைப் பொருத்து பலன் கிடைக்கும்

No comments:

Post a Comment