Wednesday, 3 June 2020

வீதி சூலை

வீடு என்பது மனிதர்கள் அனைவரும் வசிப்பதற்கு மிகவும் அவசியமாகும். இந்த வீடுகள் பெரும்பாலும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தான் பெரும்பான்மையானவர்களுக்கு அமைகிறது. அதிலும் வீட்டை சுற்றி சாலைகள், தெருக்கள் போன்றவை இருப்பது ஆச்சர்யமொன்றும் இல்லை. ஆனால் இந்த சாலைகள், வீதிகள் அல்லது தெருக்கள் போன்றவையின் தொடக்கமானதோ அல்லது முடிவோ நம் வீட்டின் தலைவாயிலுக்கு நேரெதிரே இருந்தால் அது “தெருக்குத்து” என்றழைக்கப்படுகிறது. அதனால் ஏற்படும் வாஸ்து குறைபாடு பற்றியும் அதை போக்குவதற்கான பரிகாரம் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வீதி சூலை மற்றும் தெருக்குத்து தோஷங்கள் பல வகைகளாக இருக்கின்றன.இந்த தெருக்குத்து என்றால் என்பதை மேலே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கிழக்கு மற்றும் தெற்கு திசைகளில் தலை வாயில்கள் கொண்ட வீட்டின் தலைவாயிலுக்கு நேரெதிரே வீதி அல்லது தெருவின் தொடக்கமோ அல்லது முடிவோ இருந்து ஏற்படும் தெருக்குத்து தோஷத்தால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு தொடக்க காலத்தில் எந்த ஒரு பிரச்சனைகள் இருக்காது என்றாலும் காலப்போக்கில் பொருளாதார நெருக்கடிகள், துயரங்கள் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் தலைவாயில்கள் கொண்ட வீட்டின் தலைவாயில்களுக்கு நேரெதிரே வீதி அல்லது தெருவின் தொடக்கமோ அல்லது முடிவோ இருந்து ஏற்படும் தெருக்குத்து தோஷத்தால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நிலையில்லாத வாழ்க்கை, சில நாட்கள் இன்பம், சில நாட்கள் துன்பம் என ஏற்ற இறக்கமான பலன்களே ஏற்படும்.

- Advertisement -

பொதுவாக எந்த திசையில் வீடு இருந்து, அந்த வீட்டின் தலைவாயில்களின் நேரெதிரே தெருவோ அல்லது வீதியின் தடக்கமோ முடிவோ இருப்பதால் ஏற்படும் வீதி சூலை மற்றும் தெருக்குத்து தோஷத்தால் வீட்டில் வசிக்கும் எதிர்கால சந்ததியினரின் வாழ்வில் பல இன்னல்கள் உண்டாகும். குடும்ப பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையே அதிகம் இருக்கும்.

பலரும் தாங்கள் வசிக்கும் சொந்த மற்றும் வாடகை வீடுகளில் இத்தகைய தெருக்குத்து தோஷம் இருக்கவே செய்கிறது. இந்த தோஷத்தை நீக்குவதற்கு ஒரு செப்பு தகட்டில் மந்திரக்கப்பட்டு வரையப்பட்ட சுதர்சன யந்திரத்தை பிரேம் போட்டு தெருவை பார்த்தவாறு இருக்கும் உங்கள் வீட்டின் தலைவாயிலுக்கு மேல் மாட்டிவைப்பதால் தெருக்குத்து தோஷத்தை போக்கும்.

No comments:

Post a Comment