Tuesday, 16 June 2020

வாயு தொல்லை பால்காயம்.

வாயு தொல்லை பால்காயம்.

நாட்டு மருந்து கடையில் பால் காயம் 50 கிராம் கேட்டு வாங்குங்கள்.

பால்காய த்தை ஒரிஜினல் பெருங்காயம் என்றும் கூறுவார்கள்.

பெரிய தட்டில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் வீட்டிலேயே காய வையுங்கள்.

மூன்று மிளகு அளவில் ஒரு உருண்டையை உருட்டினால் போதும்.

நிழலில் காய்ந்து ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் ஆனதும் எல்லா  உருண்டையையும் அஞ்சரைப் பெட்டியில் சேமித்து தினம் ஒரு உருண்டையை குழம்பில்  சேர்த்து வாருங்கள்.. கடுகு பாேட்தும் போடனும். இல்லைன்னா.. முழுசா ஒருவருக்கு சாப்பிடும் போது சென்று விடும். அர்ச்சனை அதிகமாகிவிடும்.

குழம்பு தூள் அரைக்கும் வரை..  பால்காய உருண்டையை தண்ணீரீல் ஊற வைத்து கரைந்ததும் குழம்பில் ஊற்றியும் பயன்படுத்தலாம். 

பால்காயம் மிகுந்த வாசனை கொண்டது.

பெருங்காய துாள் பயனற்றது. சிலருக்கு கெடுதலானது.
 இதில் என்னென்ன  உள்ளது என்பதை படியுங்கள். அதில் அரபிக் பிசின் மைதா.. பெருங்காயத்தின்  செயற்கை வாசனை இரசாயனம் இருக்கும் 

புதிய கட்டி பெருங்காயம் கூட இவ்வாறு செய்யலாம். அப்போதே பிய்த்து உருட்ட முடியும். உறுதியானால் சிரமம்.
பயன்கிடைக்க சற்று தாமதமாகும்.

தொண்டை அடைக்கிற போது குறைவாகவும்., 
சாப்பிட்டு அரைமணி கழித்து நிறைய தண்ணீர் குடிக்க சொல்ல வேண்டும்.

உடனே படுக்க கூடாது.

அமர்ந்திருந்து ஏப்பம் வந்த பிறகு தான் படுக்க வேண்டும்

இதை இப்படியே விட்டால்.. அந்த வாயு கீழே வராமல் மேலே வராமல் மூச்சு பிடிப்பாக முதுகிலோ., ..இதயத்தை நோக்கியோ சென்றால் பெரிய பாதிப்பாகும்.

இது ஒரு தீர்வு.

இதேப் போல பால்காயம் வாங்கி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி.. மிளகாய் மல்லி மிளகு மஞ்சள்  நச்சீரகம் சாதிக்காய் சோளம் இவைகளுடன் சிறு உருண்டைகளாக உருட்டிய பால்காயத்தையும்  சேர்த்து காயவைத்து ... அரைத்து
குழம்பு தூள் ஆக பயன்படுத்துங்கள். 

வாயு தொல்லைக்கும் வயிறு உப்புசம்.. யாவுக்கும் நிரந்தர தீர்வு




மிளகாய் மல்லி தானே  பால்காயத்தை அப்படியே போடலாம் என போட்டால்.. அரைக்கும் போது.. அறைவை காரன் எடுத்துவிடுவான். முழுசா போடமுடியாது.. இப்பவே தூளா உடைச்சி எடுத்துவர சொல்வான்.  

சிரமம் பார்க்காமல்.. வைத்தியம் பலிக்க சொன்னபடி செய்யுங்கள்.

பால்காயம் உடலுக்கும் நல்லது. பல வியாதிகளை தடுக்கும்.

இன்னொரு தீர்வு...
ஆறுமாதத்திற்கு ஒரு முறை குடற்புழு மாத்திரையையும் பேதி மாத்திரையையும் சாப்பிட்டு stomach wash செய்யனும்.

 ( இது எப்படின்னு தெரியுமா.? அதையும் சொல்லனுமா..? தேவை எனில் கேளுங்கள்.  உள் மூலம்., மூலம். மலக்குடல் அடைப்பு மலக்குடலை  stomach wash செய்யாதவர்களுக்கு.. அடைப்பு இருந்தாலும் வாயு சேர்ந்து சத்தமாகவே வரும் ஆக 6 மாதத்திற்கொருமுறை ஸ்டோமக் வாஷ் செய்வது அவசியம் .)

சில நாட்களுக்கு 
உருளைக் கிழங்கு
வாழைக்காய்
கொத்தவரங்காய்
போன்றவைகளை தவிர்த்து இதற்கு பதிலாக.. 

வாழைப்பூ
வாழைத்தண்டு
சேணைக்கிழங்கு
சேப்பங்கிழங்கு
கோவைக்காய் இவைகளை சாப்பாட்டில் சேருங்கள்.

எல்லா குழம்பு பொறியல்களில் பூண்டும் மிளகு தூளும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முக்கியமாக.. சாப்பிட்டு அரைமணி கழித்து தண்ணீர் குடியுங்கள்.

இரவில் படுக்கு முன் சிறிது நடந்து.. மூன்று முறையாவது ஏப்பம்  வந்ததும் படுங்கள்.

நேரம் தாண்டி சாப்பிட்டாலும் கேஸ் உருவாகும்.

சாப்பிடும் முன்.. மிக சிறய அளவில் ஒரு வாய் தண்ணீர் குடித்து பிறகு சாப்பிடுங்கள்.

மேலே சொன்னது நிரந்தர தீர்வு.

தற்காலிகமாக சத்தமில்லாமல்.. சைலண்டா.. வாயு வை வெளியேற்ற..(Medical shop )
மருந்து கடையில் GASEX  என்ற கேப்சூல் மாத்திரையை வாங்கி காலை ஒன்றும் ,  இரவு ஒன்றும்.,  சாப்பிடுவதற்கு 5 
 நிமிடம் முன் வாயில் போட்டு சிறிது தண்ணீருடன் முழுங்குங்கள்.

No comments:

Post a Comment