Thursday 18 June 2020

பரோட்டாவின் வரலாறு

பரோட்டாவின் வரலாறு 
history-of-parotta
என்ன பரோட்டாவுக்கெல்லாம் வரலாறா என்று யாரும் சண்டைக்கு வரவேண்டாம். வித்தியாசமான பரோட்டா சுவைகளை போலவே வித்தியாசமான வரலாறும் பரோட்டாவுக்கு உண்டு.

இந்தியா , பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ்,மாலத்தீவுகள் நேபாளம், இந்தோனேசிய என பலநாட்டு மக்களை வசீகரித்து உணவு பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பரோட்டா சினிமா கதாநாயகன் போல பல அவதாரங்கள் எடுக்கும் வல்லமை கொண்டது


ஆலூ பரோட்டா, கொத்துப் பரோட்டா, மெலிதான வீச்சுப் பரோட்டா, எண்ணெயில் பொரித்த விருதுநகர் பரோட்டா, அளவில் பெரிய மலபார் பரோட்டா, சிலோன் பரோட்டா, சில்லி பரோட்டா, முட்டைப் பரோட்டா, காலிஃப்ளவர் பரோட்டா என்று பல விதமான பெயர்களில் பல்வேறு சுவைகளில் உருவாகும் புரோட்டாவின் தாயகம் இலங்கை என்று சிலர் சொன்னாலும் அது இந்திய துணைக் கண்டத்தில் இருந்த இப்போதைய பெஷாவர் தான் புரோட்டாவின் தாய்மண் என்று பல வரலாற்று ஆசிரியர்கள் புரோட்டா மேல் அடித்து சத்தியம் பண்ணாத குறையாக சொல்கிறார்கள்.

ஆரம்பத்தில் கோதுமை மாவில் நிறைய நெய் விட்டு செய்யப்பட்ட புரோட்டா இரண்டாவது உலகப்போரில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது மைதாவுக்கு மாறியது. அதோடு நெய்யையும் விட்டுவிட்டு எண்ணெய் ஊற்றி தயாரிக்கபட்டது.

எளிய மக்களின் உணவாக கருதப் படும் பரோட்டா ஜீரணமாக வெகுநேரம் பிடிப்பதால் உழைக்கும் வர்க்கத்தின் மக்கள் பரோட்டாவை விரும்பி உண்டனர்.அதிலும் சால்னா குருமா இருந்தால் சொல்ல வேண்டியதில்லை.


No comments:

Post a Comment