Wednesday, 3 June 2020

மனையடி தகவலும் கோள்களும் பரிவார தெய்வம்களும்


மனையடி தகவலும் கோள்களும் பரிவார தெய்வம்களும்

மனையடி தகவலும் கோள்களும் பரிவார தெய்வம்களும்


கடந்த சில வருடம்களாக வாஸ்துவின் சட்டத்திற்கு உட்பட்டு வீடு கட்டவேண்டும் எல்லோரும் விரும்புவதை நாம் பழக்கத்தில் காண்கிறோம்.சிலர் வாஸ்து புத்தகம்களை கடைகளில் வாங்கி படித்து அதில் சொல்லி உள்ளது போல தன்னுடைய வீட்டை அமைக்கவேண்டும் என்று ஆவல் கொள்கிறாரக்ள்.மனையடியின் அடிப்படை விதிகளை புரிந்தும் அனுபவத்தில் உழன்ற நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று மனையில் வீடு அமைப்பது சில பிரச்சனைகளை மட்டும் தவிர்த்து தரும் என்றும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
மனையின் அடிப்படை விவரங்களை சொல்லும் ஒரு நூலை நாம் ஒரு புத்தக கண்காட்சியில் வாங்கினோம்.அதில் மனையின் தன்மையை அறியும் விதமும் மனை முகூர்த்தம் செய்யவேண்டிய விதமும் மனையில் கட்டிடம் எழுப்பவேண்டிய விதமும் நிறைவாக கிரகப்பிரவேசம் செய்யவேண்டிய நாள் நட்சத்திரம் திதி திங்கள் மற்றும் முகூர்த்தம் பற்றிய தகவல் இருந்தது ஆனால் மனையில் பிணம்கள் புதைக்கப்பட்டு இருந்து அதை மறைத்து மனைகளாக பிரித்து இருந்தால் அதை எவ்வாறு கண்டு கொள்வது என்றும் பாம்பு புற்று இருந்து அது அழித்து மனைகளாக பிரித்து இருந்தால் எவ்வாறு கண்டு கொள்வது என்பதை போல விசித்திர தகவல் எதுவும் இல்லை.
கடந்த வருடம் ஒரு நண்பர் தான் ஒரு மனையை வாங்கி வாஸ்து சட்டத்திற்கு உட்பட்டு அணைத்து விதத்திலும் கட்டிடம் எழுப்பியதாகவும் ஆனால் தனக்கு கடன் பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது என்றார்.அவருடைய சாதகத்தை பெற்று அதில் ஆய்வு செய்தால் அவர் கடக லக்கினம் மகம் நட்சத்திரம் சுக்ரன் ராகுவுடன் சேர்ந்து துலாத்தில் அமர்ந்து இருப்பதை கண்டு தங்களுக்கு தண்ணீர் மீது ஆவல் உண்டா என்றதும் வெகு நேரம் குளிப்பேன் என்றார்.கடகம் சிம்மம் லக்கினத்தில் பிறந்தவர்கள் ஆற்றின் கரையோரம் அல்லது தெருவின் முஞ்சந்தி அல்லது தெருவின் இறுதி பகுதி அல்லது வாய்க்காலின் அருகில் அல்லது நீர் தேக்க தொட்டி வீட்டின் அருகில் அமைய பெற்று இருப்பார்கள் என்று சோதிட நூல்கள் சொல்கிறது.மேலும் குபேர அம்சமான நீர் நம் வீட்டில் அடைப்பு இல்லாமல் வெளியேறினால் கடன்கள் உருவாகும் என்று மனையடி நூல்கள் சொல்கிறது என்றதும் அவர் தான் வாய்க்காலின் அருகே இருப்பதாகவும் தன் வீட்டில் எந்த வகையிலும் நீர் விரையம் ஆவது இல்லை என்றும் வடக்கு வாசலான அவரின் மனை என்றும் குளிர்ச்சியாக இருக்கும் என்றார்.இவரின் பதில்கள் எனக்கு சில குழப்பத்தை தர நாம் ஆசானிடம் கேட்டு அறிந்து கொள்ள அவரை அழைத்து சென்று சிவ நாடி பார்த்த பொழுது அவரின் மனை கிணற்றை முடி மறைத்து அமைக்கபட்ட மனை என்றும் ஒரு தோப்பின் அக்னி முலையில் இருந்த அந்த கிணறு பரிகாரம் செய்யாமல் மூடப்பட்டு உள்ளது என்றும் தகவல் வந்தது.
கிணற்றை முடி மனைகளாக பிரித்து தரப்பட்ட அந்த மனையில் அவர் வசிப்பது கிணற்றின் மேல அவர் குடும்பம் வசிப்பது என்றே சொல்லவேண்டும்.எல்லோருக்கும் இது போல விசித்திரமான மனைகள் அமைவது இல்லை இது போல அமைப்பை கவனிக்க நாம் சுக்ரன் தன்மையை வைத்து வீட்டையும் செவ்வாய் தன்மையை வைத்து மனையையும் சனி தன்மையை வைத்து மனையின் அடியில் உள்ள நீர் தன்மையும் கவனித்து பலன் அறிந்தும் மனையின் அருகில் உள்ள எல்லை தெய்வத்தை கவனித்தும் நாம் தேர்வு செய்வது நல்ல பலனை தரும் என்று அனுபவத்தில் புரிந்து கொள்ளமுடிந்தது.

ஒரு மனையை தேர்வு செய்ய முற்படும் பொழுதே அதில் உள்ள மண்ணை வைத்து அதாவது வாசனையை வைத்து இதில் வீடு கட்டலாம் கூடாது என்று சொல்ல முடியும் என்று நூல்கள் சொல்கிறது .
இத்தனை துல்லியமாக நம்மால் கவனிக்க முடியாது என்றாலும் சில விவரம்களை நாம் தெரிந்து வைத்து கொள்ளலாம் .
1.மனையின் எதிரில் ஒற்றை பனைமரம் ,கிணறு ,ஆலமரம் எருக்கன் செடி,இல்லாமல் இருக்க வேண்டும் .
2.கோவில் கோபுரத்தின் நிழல் அல்லது ஸ்தூபியின் நிழலோ மனை மீது விழ கூடாது.
3.மனையில் பாம்பு புற்று ஆமையின் ஓடு உடும்பின் சடலம் இருக்க கூடாது .
4.பெருமாள் கோவிலின் பின்புறம் ,சிவன் /கணபதி கோவில் முன் புறம் வீடு கட்ட கூடாது .
5. ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம்.
6.மனை இடத்தின் அமைப்பு தெருக்குத்து மற்றும் தெரு தாக்கம் இருக்க கூடாது ..
7. கட்டடம் கட்டும் போது தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் வேண்டும் .
8 . புற்று உள்ள இடம் ராகுவின் தோஷத்தை கொண்டது இதில் மனைகளை எழுப்பக்கூடாது என்றும் கத்தாழை செடிகள் உள்ள மனை சனியின் ஆசிகளை கொண்டதால் இங்கே கட்டிடம்கள் எழுப்பலாம் என்றும் நூல்கள் சொல்கிறது.
சோதிட நூல்களில் மனைகளுக்கு முகுர்த்தம் செய்ய சில தகவல்களை சொல்லப்பட்டு உள்ளது …
1.பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டு உள்ள வார சூன்யம் என்ற நாட்களில் மனை முகுர்த்தம் செய்ய கூடாது …
2.சூரியனின் காலற்ற நட்சரத்தில் செவ்வாயின் தலையற்ற நட்சரத்தில் குருவின் உடலற்ற நட்சரத்தில்— மனை முகுர்த்தம் செய்தால் வீடு கைமாறி அல்லது நின்று போகும் என்றும்
3.அஸ்வினி ரோகினி ஹஸ்தம் அனுஷம் திருவோணம் உத்திரட்டாதி பூசம் ரேவதி சதயம் நட்சரத்தில் முகுர்த்தம் செய்ய உத்தமம் என்று நூல்கள் சொல்கிறது ….
4 .அஸ்வினி புனர்பூசம் பூசம் ஹஸ்தம் ஸ்வாதி திருவோணம் போன்ற நட்சத்திரத்தில் மனைகளுக்கு கடன் பெற்று வீடுகளை கட்டினால் வீடு கைமாறும் என்றும்
5 .தனுசு லக்கின காலத்தில் ஆழ்குழாய் அல்லது கிணறு போன்ற செயல்களை மனைகளில் செய்யக்கூடாது என்றும் நூல்கள் சொல்கிறது.

இவ்வாறாக சோதிட தகவல்களை மனையடி தகவல்களை கற்றுணர்ந்து தொழிலில் பண்டிதர்கள் ஈடுபட்டாலும் சில முரண்பாடுகள் ஏற்பட்டு விடுவதை நாம் காண்கிறோம்.
ஒரு பொறியாளர் சில வரைபடத்துடன் என்னை சந்திக்க வந்தார் .தான் ஒரு கட்டிடம் எழுப்ப போவதாகவும் இதில் உள்ள படி செய்தால் சரியாக இருக்குமா ? என்று உங்கள் நண்பர் உங்களுடன் ஆலோசித்த பின் முடிவு செய்ய சொன்னார் என்று சொல்லி மனை வரைபடத்தை தந்தார்.
அவர் கொடுத்த வரைபடத்தை கவனித்த பொழுது மனையடி நூலின் சட்டத்திற்கு உட்பட்டு வரைந்து இருந்தார்.
நான் அவரிடம் இந்த மனை வடக்கும் மேற்கும் முகப்பில் உள்ளது என்பதால் வாசல் மேற்கில் வைத்து உள்ளீர்கள் ஆனால் சமையல் செய்யும் அக்னி மூலை அடுத்த வீட்டின் சுவர் உள்ளது இங்கே சமையல் கூடாது மேலும் வாயு முலை மட்டுமே நம்முடைய முன்னோர்களை நம் மனைக்குள் அழைத்து வரும் சக்தி கொண்டது இங்கே அவசியம் காற்று வரும் நுழைவாயில் வேண்டும் என்றேன்.
மேலும் நண்பர் மிதுன லக்கினம் சதய நட்சத்திரம் கும்பராசி என்பதால் நாகத்தின் அடையாளமான நிலக்கதவு தனித்து இருக்கவேண்டும் ஜன்னல் கூடாது என்றும் சனியின் ராசிகளை கொண்ட நபர் என்பதால் குபேர எல்லையான வடக்கில் மட்டும் குளியல் நீர் வெளியேறும் அமைப்பும் நீர்நிலைகள் மனையை விட்டு வெளியேறும் அமைப்பு தடுத்து நின்று செல்லும் படியாக
 அமைக்கவேண்டும் என்றேன்.
மனையடி நூலில் சனியின் சகோதரனாக கருதப்படும் குபேரனுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதுஒரு மனையில் இவரின் தன்மை எப்படி அமையபட்டு உள்ளதோ அது சார்ந்தே பொருட்செல்வம்க்கள் சேரும் என்றும் இவரின் துவக்கம் சனி தேவரின் ஆழ்துளை நீர் அல்லது கிணறு அமைப்பதில் இருந்து துவங்கும் என்று நூல்களில் சொல்லி உள்ளார்கள்.
சில வீடுகளில் கொல்லையில் கிணறுகளை மூடி பயன்படுத்தாமல் வைத்து இருப்பதையும் சிலர் அதை மூடிவிடுவதையும் நாம் பார்த்தது உண்டு அதை பற்றி அவர்களிடம் கேட்கும் பொழுது நீர் சுரப்பது இல்லை அதனால் மூடி விட்டோம் என்பர் சிலர் மின் பொருள் எந்திரம் வந்த பிறகு அதை நாங்கள் பயன்படுத்தி கிணற்றை மூடி விட்டோம் என்பார்கள்.
கிணற்றை பற்றிய விவரங்களை நாம் கவனிக்கும் பொழுது மிகவும் விசித்திர தகவல்கள் நமக்கு கிடைத்தது உண்டு.
கிணற்றை பற்றி மனையடி நூலில் நமக்கு சொல்லப்பட்டது
“கிழக்கில் கிணறு அமைத்தால் செல்வம் சேரும்
தென்கிழக்கில் கிணறு அமைத்தால் புத்திர சாபம் ஏற்படும்
தெற்கில் கிணறு அமைத்தால் களத்திர சாபம் உயிர் சேதம் தென்மேற்கில் கிணறு அமைத்தால் பொருள் இழப்பும் தரித்தரமும் மேற்கில் கிணறு அமைத்தால் தீமை கிடையாது சரீர சுகம்
வடமேற்கில் கிணறு அமைத்தால் புத்தி நாசம் அறிவு இல்லாமல் போகுதல் வடக்கில் கிணறு அமைத்தால் சிறப்போடு வாழ்தல் வடகிழக்கில் கிணறு அமைத்தால் ராஜயோகம் ஏற்பட்டு வாழ்தல்
“ என்று பொதுவான தகவலை மனையடி நூல்கள் தெரிவிக்கிறது.
இங்கே சில விவரங்களை நாம் அறிந்து கொள்ளவேண்டும் நிலத்தின் மேல்பகுதி செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்றும் சொல்லலாம் மனையின் உள்பகுதி சனியின் ஆதிக்கம் நிறைந்த பகுதி இங்கே ஊற்றாக சுரக்கும் நீர் குபேரனின் தன்மை நிறைந்த பகுதி சனி நன்மையாக உள்ள இடத்தில் மட்டுமே நீர் தன்மையான குபேரன் ஆசிகள் கொடுத்து அமைந்து இருப்பர்.சோதிட கலையை நன்கு கற்ற சீனர்கள் நீரில் உள்ள தவளை மீண் போன்றவற்றை தங்கள் வீட்டில் வளர்ப்பதாலோ அல்லது வரைபடமாக அல்லது உருவ சிலைகளாகவோ அமைத்து செல்வத்தின் வருமானம் பெறுக வழிசெய்து கொள்வார்கள்.
கிணற்றில் ஊற்று வராமல் வருவது என்பது ஒருவகை யோகமாகும் இன்று நம்மிடம் பலர் பேசும் பொழுது அருகில் அவரவர் ஆள்துளையிட்டு நீரை உறிஞ்சும் பொழுது யவர் அதிகமாக பூமியை துளையிடுகிறார்களோ அவர்களுக்கு நீர் நிறைவாக கிடைப்பதும் மற்றவர்களுக்கு நீர் சரிவர கிடைப்பது இல்லை என்பது அறிவியல் கூற்று என்கிறார்கள்.
இவர்கள் சொல்வது போல நாம் தொழில் செய்யும் இடத்தின் அருகே கிழக்கு பார்த்த மனையில் உள்ள ஒரு நபர் 1000 அடி துளையிட்டு நீர் வராமல் வெள்ளை புகையும் துகள்களும் மட்டுமே வந்தது இது போல மேற்கு பார்த்த மனையில் உள்ள மற்றவர்க்கு 32 ஆடியில் நீர் ஊற்று மிகுந்த நீருடன் வெளியானதை நாமும் மற்றவர்களும் பார்த்தோம்.
எவருக்கு சனியும் சுக்ரனும் நல்ல நிலையில் அமையப்பெற்றவர்களோ அவர்களுக்கு நீரினால் இன்பமும் அதேவேளையில் இந்த கோள்கள் சுபமாக அமையாத பொழுது பெண்களாலும் நீராலும் இவர்களுக்கு மனஉளைச்சலும் விரயமும் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
இது போல சில பெண்கள் மனவேதனை தாங்காமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வது அல்லது பிறர் கிணற்றில் தள்ளி கொலை செய்வது அல்லது கிணற்றில் மற்ற உயிரினங்கள் தவறி விழுந்து இறப்பது போன்ற செயல்கள் ஏற்படுமாயின் அதாவது உயிர்பலிகள் ஏற்படும் பொழுது சனிதேவரின் மார்முக சக்திகளான தீய தேவதைகள் கிணற்றில் அமர்ந்து கொள்ளும் இப்படி அமர்ந்து கொண்ட தீய சக்திகள் குலதெய்வ வழிபாட்டை செய்யவிடாமல் குலத்தை கெடுத்து மனையை ராகு குடிகொள்ளும் சர்ப்ப மனைகளாக திரித்து பாழ்ப்படுத்திவிடும்.
கணிக்கர்கள் மட்டுமே இவ்வகையான சாபங்களை பிரசன்னத்தில் அறிந்து கிணற்றை சுத்தம் செய்தும் அல்லது மூடியும் குலத்தை காக்க வழிசெய்வார்கள்.
மனையடியில் இது ஒரு பார்வை என்றால் மற்றது நம்முடைய பிறப்பில் கோள்கள் அமைந்த அமைப்பு எனலாம்.
மேஷமும் ரிஷபமும் வடக்கின் அதிபதியான குருவின் தன்மையை கொண்டது என்றும் மிதுனம் வடகிழக்கின் அதிபதியான புதனின் தன்மையை கொண்டது என்றும் கடகம் சிம்மம் கிழக்கின் அதிபதியான
சுக்ரனின் தன்மையை கொண்டது என்றும் கன்னி தென்கிழக்கின் அதிபதியான சந்திரனின் தன்மையை கொண்டது என்றும் துலாம் விருச்சகம் தெற்கின் அதிபதியான செவ்வாய் தன்மையை கொண்டது என்றும் தனுசு தென்மேற்கின் அதிபதியான ராகுவின் தன்மையை கொண்டது என்றும் மகரம் கும்பம் மேற்கின் அதிபதியான சனியின் தன்மையை கொண்டது என்றும் மீனம் வடமேற்கு அதிபதியான கேதுவின் தன்மையை கொண்டது என்றும்” மனையடி நூல்கள் கோள்களுக்கு திக்குகளையும் திசைகளையும் பிரித்து மீனம் முதல் கன்னிவரை சூரியபாகம்(மேஷம் -கன்னி வரை ) என்றும் கன்னிமுதல் மீனம் வரை சந்திரபாகம்(துலாம் -மீனம் ) என்று வகுக்கிறது.

இங்கே ஒரு விவரம் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் நம் பிறந்த லக்கினம் ராசிகள் நமக்கு அமைந்த கோள்கள் அமர்ந்த ராசிகள் நம்முடைய வீட்டில் செயல்படும் என்று புரிந்து கொள்ளவேண்டும்.
வாஸ்து நூல்களில் சொல்ல பட்ட சில செய்திகளை கடைபிடித்து நாம் சில மாற்றம்களை நம் வீட்டில் செய்தாலும் ,
முடிவாக நம்முடைய பிறவி லக்ன ராசி படிதான் நம்முடைய வீடு அமையும் .
நான் கவனித்த வரையில் ஊர் எல்லை அல்லது தெருவின் முக்கு அல்லது 3 சந்துகள் சேரும் இடம் அல்லது தெருகுத்து என்று சொல்லப்படும் காற்று அடித்து பிரியும் இடம் .இப்படி உள்ள இடம்களில் கடகம் சிம்மம் கன்னி ராசி அல்லது லக்ன நபர்கள் வசிகிறார்கள்
சில சிம்மராசி நபர்கள் மாரியம்மன் கோவிலின் அருகில் /எதிரில் வசிகிறார்கள் சிலருக்கு எதிர்புறம் காளிமனைகள் அல்லது வயதானவர்கள் மட்டும் உள்ள வீடுகள் அமைந்து உள்ளதை காண்கிறேன்.கன்னிராசி நபர்களோ வித்தியாசமான வீடு அமைப்புகளை/ உள் அறைகளை அமைத்து வசிக்கிறார்கள்.

இவைகள் சில உதாரணம் தான்
இது போல ஒருவரின் இல்லத்தில் நுழைந்து விட்டால் அவர்கள் ராசிப்படி தான் வீடு அமைந்து இருக்கும் என்பதனை கவனித்தால் புரியும்.
நாம் சிறு வயதில் பொன்மலை பகுதில் வாடகை வீட்டில் இருந்த பொழுது எங்களுக்கு அடிக்கடி உடல் நிலை சரி இல்லாமல் போகும் ,
அதன் பின் நாங்கள் சொந்தமாக வீடு கட்டி அதில் வாழும் பொழுது இந்த பிரச்சனை இல்லை பிறகு சில காலம் கழித்து கோவில் அருகே கலசத்தை விட உயரத்தில் இருக்கும் அடுக்கு மாடி குடி இருப்பில் இருந்த பொழுது மறுபடியும் உடல் நிலை தொல்லைகள்
இருந்தது அதன் பின் வேறு ஒரு புதிய மனையில் வீடு கட்டி குடி புகுந்து பிறகு தான் மனையடியையும் கோள்களையும் பற்றிய சில விவரம்கள் புரிய துவங்கியது .
மனம் பெற்ற மனிதனுக்கு சுகமாக வாழ்வதே மனம் விரும்புகிறது அதிலும் படுக்கை சுகமே ஆன்ம சுகம் உறக்கமே சொர்க்கம்
ஒரு மனிதனிடம் எத்தனை சுகம்கள் தரும் பொருட்கள் இருந்தாலும் உறக்கம் தரும் சுகத்திற்கு இணை ஆகாது என்று தான் சொல்ல வேண்டும் .
எத்தனை அழகான வீடு நாம் கட்டினாலும் நாம் அங்கு இன்பமாக உறங்கினால் தான் அந்த வீடு நமக்கு வசப்படும் பலர் உறக்கம் வரவில்லை என்று மருந்து அல்லது போதை பழக்ககத்திற்கு அடிமைகளாகக் ஆகிறார்கள்.

புதிய இடம் மாற்றம் அல்லது புதுமனை புகுவிழா முடிந்த பின் நாம் நண்பர்களிடம் கேட்பது புதிய வீட்டில் உறக்கம் நன்றாக வருகிறதா ?
காரணம் மனையில் உள்ள சகல தோஷமும் நாம் படுக்கும் அறையில் வெளிப்படும்.உடல் நிலை சரி இல்லாமல் துக்கம் வராமல் படுத்து இருப்பது என்பது நம்முடைய மனம் சார்ந்த பிரச்சனை என்பதுடன் நாம் மனையில் உள்ள சனியின் பாதிப்பும் தான் என்று புரிந்து கொள்ளவேண்டும்.சோதிடத்தில் 12 ஆம் இடத்தை மோட்ச இடம் என்பார்கள் இதற்கு மற்ற ஒரு பெயரும் உண்டு அது போகம் மற்றும் படுக்கை சுகம். போகம் என்பது உடலுறவு மற்றும் உணவு உண்பது என்பதாகும்.உணவு போகம் சுக்ரனின் அம்சபாகமாகும்.சனியும் சுக்ரனும் நம்முடைய சாதகத்தில் நட்பாக அமையும் பட்சத்தில் படுக்கை சுகமே அலாதியாக கிடைக்கும்.
மனையில் பிரச்சனைகள் உள்ளது என்றால் முதலில் அங்கே எவரையும் உறங்க அனுமதிக்காது என்று யூகித்து விடலாம்.மேலும் மனையில் ஓட்டம் அதனால் உறக்கம் தடைபடும் என்று அருளாளர்களும் மருளாளிகளும் சொல்லும் தகவல் அந்த எல்லையில் உள்ள வாய்க்காலை தடுத்தோ அடைதோ மனைகளுக்கு பயன்படுத்தப்படும் பொழுது உண்டாகும் தோஷம் 

No comments:

Post a Comment