அஸ்தினாபுரத்தில் தருமன் எவ்விதக் குறையும் இன்றி அரச பரிபாலனம் செய்து வந்தான் கண்ணனால் கருவிலேயே காப்பாற்றப் பட்ட அபிமன்யுவின் மனைி உத்தரையின் கர்ப்பம் நல்ல முறையில் வளர்ந்து அவள் பத்தாம் மாதத்தில் ஒரு அழகிய ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள் பகவான் விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டதால் அக்குழந்தைக்கு விஷ்ணு ராதன் என்னும் பெயர் சூட்டப்பட்டது இன்னொரு கதையும் உண்டு கருவில் இறந்த குழந்தையை கிருஷ்ணர் நீர் தெளித்து உயிர்ப்பித்ததாகவும் கருவிலேயே தன்னை உயிர்ப்பித்தவர் இவர்தானா என்று பரீட்சித்துப்பார்த்ததால் பரீட்சித்து என்னும் பெயர் வந்ததாகவும் கூறுவார்கள்
குருக்ஷேத்திரப் போரால் மனம் வருந்தி தீர்த்த யாத்திரை மேற்கொண்ட விதுரர் அஸ்தினாபுரம் திரும்பினார். விதுரருக்கு யாதவ குலமே கண்ணன் உட்பட அழிந்தது தெரிந்திருந்தது/ ஆனால் அவர் யாரிடமும் அது குறித்துப் பேசவில்லை துவாரகைக்கு கண்ணனைத் தேடிச் சென்ற அர்ச்சுனன்திரும்பி வந்தபோதுதான் பாண்டவர்களுக்குச் சேதி தெரிந்தது இதன் நடுவே திருத ராஷ்டிரரும் காந்தாரியும் துறவு மேற்கொண்டு யாரிடமும் சொல்லாது சென்று விட்டனர் இவற்றைஎல்லாம் கண்ட தருமர் தன் பேரன் பரீட்சித்துவுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்துஅஸ்தினாபுரத்துக்கு மன்னனாக்கினார் அதன் பின் பாண்டவர்கள் துறவுகோலம் பூண்டு த்ரௌபதியுடன் வடக்கு நோக்கிச் சென்றனர்/ ஒவ்வொருவராக மரணம் எய்தி பூவுலகைப் பிரிந்தனர்
பரீட்சித்து விராட மன்னனின் மகள் இராவதியை மணந்துஅவர்களுக்கு ஜனமேஜயன் முதலான நான்கு மக்கள் பிறந்தனர் . பரீட்சித்து செவ்வனே அரச பரிபாலனம் செய்து வந்தார் குடி மக்கள் நலமாக வாழ்ந்தனர். பரீட்சித்துவின் வாழ்க்கையிலும் விதி விளையாடி அவர் மனதில் ஒரு வேண்டாத கோபத்தை ஏற்படுத்தி ஒரு மோசமான சாபத்தைப் பெற்றுத்தந்தது
அடர்ந்த காட்டுக்குள் வேட்டையாடி தன் பரிவாரங்களைப் பிரிந்து வெகுதூரம் வந்திருந்தார் பரீட்சித்து பசியாலும் தாகத்தாலும் சோர்ந்து போன ராஜா தூரத்தே ஒரு ஆசிரமம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்தார் அந்த ஆசிரமத்தில் ஆங்கிரஸ் என்னும் முனிவரும் அவர் மகன் சிருங்கியும் வசித்து வந்தார்கள் பரீட்சித்து சென்ற சமயம் ஆசிரம வளாகத்தில் எவருமே தென்படவில்லை. வாசலில் நின்றபடியே பசிக்கும் தாகத்துக்கும் ஏதாவது கிடைக்குமா என்று குரல் கொடுத்தார் யாரும் பதில் தரவில்லை. உள்ளே நுழைந்த ராஜா அறையின் நடுவே ஒரு முனிவர் நிஷ்டையில் இருப்பதைக் கண்டார் இவருடைய குரலுக்கு பதில் சொல்லாமல் இருந்ததைக் கண்ட பரீட்சித்துவுக்கு கோபம் வந்தது மீண்டும் மீண்டும் குரல் கொடுத்தும் எந்த பதிலும் வராததால் மிகவும் சினங்கொண்ட ராஜா வெளியே ஒரு செத்த பாம்பு இருப்பதைக் கண்டார் கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அந்த செத்த பாம்பை முனிவரின் கழுத்தில் மாலையாகப் போட்டுவிட்டுச் சென்றார்
மன்னன் பரீட்சித்து சென்ற சிறிது நேரத்தில் முனிவரின் மகன் சிருங்கி அங்கு வந்து தந்தை முனிவரின் கழுத்தில் மாலையாக செத்த பாம்பு இருப்பது கண்டு மிகவும் கோபம் அடைந்தார் தன் தவ வலிமையால் இதைச் செய்தவர் பரீட்சித்து மஹாராஜாதான் என்று அறிந்து அவருக்குச் சரியான தண்டனை தர வேண்டும் என்று எண்ணி இன்னும் ஏழுநாட்களில் தட்சகன் எனும் பாம்பரசன் தீண்டி பரீட்சித்து மரிக்கச் சாபமிட்டார்
தியானத்திலிருந்து மீண்ட ஆங்கிர்ஸ் முனிவர் தன் மகனின் செயலுக்கு வருந்தினார் என்றாலும் இட்ட சாபம் விதியின் செயல் என்று இருந்துவிட்டார்
அரண்மனை திரும்பிய பரீட்சித்து மன்னர் தனது செயலுக்கு வருந்தினார் முனிவரின் மகனது சாபம் பற்றியும் தெரிந்துகொண்ட பரீட்சித்து தனது மகன் ஜனமேஜயனுக்கு முடிசூட்டி தன் சாவை எதிர் நோக்கத் தயாரானார் மரணம் தவிர்க்க முடியாதது என்று தெரிந்து கொண்ட பரீட்சித்துபோகும் வழிக்குப் புண்ணியம் தேடும் முயற்சியாக கடைசி ஏழுநாட்களில் சுகர் முனிவர் சொல்லப் பகவானின் லீலைகளை பாகவதம் கேட்டுத் தெரிந்து கொண்டார் இந்த பாகவதப் புராணத்தைக் கேட்கும் பாக்கியம் கிடைத்ததால் பகவானின் தியானத்தில் ஆழ்ந்த பரீட்சித்து தட்சகன் தீண்டும் வேதனையைக் கூட அறியாமல் முக்தி அடைந்தார்
.
.
.