Monday, 22 June 2020

பரீட்சித்து

பரீக்ஷித்தின் கதை - இலவசப் பதிவிறக்கம்

பரீக்ஷித் கதையும் மஹாபாரதத்தில் சொல்லப்படும் கதையாகும். இக்கதை மகாபாரத காலத்திற்குப் பிறகு நடந்த கதையாகும். பரீக்ஷித் அபிமன்யுவின் மகனும் அர்ஜுனனின் பேரனுமாவான்.

பரீக்ஷித் மன்னன், மத்சிய இளவரசி உத்தரைக்கும் அர்ஜுனன் மகன் அபிமன்யுவிற்கும் குருக்ஷேத்திரப்போர் முடிந்த பின்னர் பிறந்தவனாவான். கௌரவர்களால் அபிமன்யு கொடூரமாக கொலையுண்ட போது உத்திரையின் வயிற்றில் இருந்தவன் பரீக்ஷித். அசுவத்தாமன் பிரம்மாயுதத்தை ஏவி உத்தரையையும், அவள் கருவிலுள்ள குழந்தையையும் கொல்ல முற்படும்போது கிருஷ்ணன் காப்பாற்றுகிறான். கிருஷ்ணன் அபிமன்யுவின் மாமன் ஆவான். அர்ஜுனனின் மனைவியும், அபிமன்யுவின் தாயுமான சுபத்ரா கிருஷ்ணனின் தங்கையாவாள். பரீட்சித்து "விஷ்ணுரதன்" எனவும் அறியப்படுகிறான்.

No comments:

Post a Comment