Saturday, 20 June 2020

மாப்பிள்ளை சம்பாவின் மருத்துவ குணங்கள்



மாப்பிள்ளை சம்பாவின் மருத்துவ குணங்கள்

“மாப்பிள்ளை சம்பா” அரிசியை பொதுவாக ஆண்கள் திருமணத்திற்கு உண்பது வேண்டும் என முன்னோர் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாது புரதம், நார்சத்து மற்றும் உப்பு சத்துக்கள் நிறைந்தது மாப்பிள்ளை சம்பா. இவற்றை நீரிழிவு நோயாளிகளும் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. நரம்புகளுக்கு வலுவூட்டும்.

மாப்பிள்ளை சம்பா நீராகாரம்

மாப்பிள்ளை சம்பா அரிசி-¼ கிண்ணம், மோர்-கொஞ்சம், சின்னவெங்காயம்-5, உப்பு-தேவையான அளவு.

பாரம்பரியமிக்க மாப்பிள்ளை சம்பா அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து பின் அதனுடன் இரு கப் நீர்விட்டு சிறுதீயில் வேகவைக்கவும். நன்கு வெந்துபோன சாதத்தை எடுத்து ஆறவிட்டு பின் கொஞ்சம் நீர்விட்டு மூடிவைக்கவும். இரவில் இதுபோல் செய்து கொள்ளவும். காலையில் எழுந்து சோற்று பானையில் மேலும் நீர்விட்டு நன்கு கரைத்து, மோர், உப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து பருகவும். காலை வெறும் வயிற்றில் இந்த நீராகாரம் அருந்த பல வியாதிகள் கட்டுப்படும். உடல் பலப்படும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இரும்பு சத்தும், துத்தநாக சத்தும் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை உட்கொள்ளும் போது உடலில் உள்ள அதிகபடியான கொழுப்புகள், குறைந்த இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும்.

இதில் உள்ள அதிகபடியான நார்சத்துகள் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கின்றது. இயற்கை விவசாய முறையில் தற்போது பாரம்பரிய தன்மை மாறாத மாப்பிள்ளை சம்பா அரிசி விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.(நமது முகில் இயற்கை உழவர்கள் அங்காடியில் நமது வேளாண் பண்ணையில் இயற்கை முறையில் விளைவிக்க பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ) எனவே ஆரோக்கியத்திற்கும், உடல் பலத்திற்கும் உதவும் மாப்பிள்ளைசம்பா அரிசியை உணவில் பயன்படுத்தி ஆரோக்கியமாய் வாழ்வோம்

               ☘சிகப்பரிசி உணவுகள்🍀

○சிவப்பு அரிசி சர்க்கரைப் பொங்கல்
○சிவப்பு அரிசி பகளாபாத்
○சிவப்பு அரிசி இனிப்புப் புட்டு
○சிவப்பு அரிசி காரப் புட்டு
○சிவப்பு அரிசி தோசை
○சிவப்பு அரிசி பழப் பணியாரம்
○சிவப்பு அரிசி காரப் பணியாரம்
○சிவப்பு அரிசி பாயசம்
○சிவப்பு அரிசி ஆப்பம்
○சிவப்பு அரிசி பொங்கல்
○சிவப்பு அரிசி அடை
○சிவப்பு அரிசி ஊத்தப்பம்
○*சிவப்பரிசி தேங்காய்ப் பால்           கஞ்சி*
○சிவப்பு அரிசி கொழுக்கட்டை (யாழ்ப்பாண கொழுக்கட்டை)
○சிவப்பு அரிசி பால் கொழுக்கட்டை
○சிவப்பு அரிசி - தேங்காய்ப் பால் அல்வா (தொதல்)
○சிவப்பு அரிசி வடகம்

No comments:

Post a Comment