செம்பருத்திப்பூ
பூங்காக்களிலும், வீட்டுத்தோட்டங்களிலும், அழகிற்காக வளர்க்கப்படும் செடி செம்பருத்தி. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
👉செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்.
⭐முடி வளர்ச்சிக்கு -
பெண்களின் தலை முடி வளர்ச்சிக்கு இது பெரும் பங்கு வகிக்கிறது.
செம்பருத்தி பூவை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
சமபங்கு செம்பருத்தி சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி, பின்னர் ஆற வைத்து வடிகட்டி, அதை தினமும் தலையில் தேய்த்துவர முடி கருமையாக நீண்டு வளரும்.
⭐இதய நோய்களை குணப்படுத்தும்...
செம்பருத்தி பூவை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து தேநீர் போல குடித்துவர இரத்த அழுத்தம், இரத்தக் குழாய் அடைப்பு போன்றவை சீர்படும்.
⭐வாய் புண் குணமாகும்.
செம்பருத்தி பூவை அப்படியே பச்சையாக வாயில் போட்டு மென்று சாப்பிட்டுவர வாய் புண், வயிற்றுப்புண் இரண்டும் குணமாகும்.
⭐கருப்பை சம்மந்தப்பட்ட நோய்களை நீக்கும்...
செம்பருத்தி பூவை நெய்யில் வதக்கி சாப்பிட வெள்ளை படுதல் நிற்கும்.
No comments:
Post a Comment