Tuesday, 16 June 2020

வெந்தயம்_என்கிற_மூலிகை...!!

#வெந்தயம்_என்கிற_மூலிகை...!!!

* வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும்.

* கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க இளம் தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

* வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.

* வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.

* வெந்தயம் மற்றும் கோதுமையை சம அளவு வறுத்து பொடியாக்கி பங்கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து காபி போல பருக, உடல் வெப்பம் நீங்குவதோடு உடல் தாது பெருகும்..

No comments:

Post a Comment