Tuesday, 16 June 2020

முகம் சிகப்பழகு பெறும்.

* பசும்பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை இரவில் ஊறப்போட்டு காலையில் மைய அரைத்து முகத்தில் தேய்த்து வர, முகம்  சிகப்பழகு பெறும்.
 
* எலுமிச்சம்பழச் சாறில் பாசிப்பயறு மாவு கலந்து முகத்தில் தடவி, ஒருமணி நேரம் கழித்துக் கழுவினால் முகம் நல்ல நிறம்  பெறும்.
 
* ஆப்பிள் பழத்தை நறுக்கித் தேனில் ஊற வைத்துச் சாப்பிட்டால், கண்கள் நல்ல அழகு பெறும்.
 
* உதட்டில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு சிறிதளவு பவுடரைத் தேய்த்துவிட்டுப் பின்னர் போட்டால் அதிக நேரம் லிப்ஸ்டிக்  அழியாமல் இருக்கும்.
 
* இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு, இரண்டு தேக்கரண்டி தயிர் இவற்றைக் கலந்து இரவில் முகத்தில் தேய்த்துவிட்டுப் பின்பு  நன்றாகக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால், பகலில் போட்ட மேக்கப் சுத்தமாக நீங்கி, முகம் இயல்பான நிலைக்கு  வந்துவிடும்.
 
* தினமும் சுத்தமான ஆமணக்கு எண்ணெயைப் புருவங்களில் தேத்தால் புருவமுடி கறுப்பாகவும் கவர்ச்சியாகவும் தோன்றும்.
 
* பால் ஏட்டில் சில துளிகள் எலுமிச்சம் பழச் சாறு கலந்து குழைத்து முகத்தில் தடவிக்கொண்டு, உலர்ந்ததும் கழுவ வேண்டும்.  சில நாட்கள் தொடர்ந்து இப்படிச் செய்தால் முகம் தக்காளி போல பளபளக்கும்.
 
* முகம் பளபளப்பாக குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதை பஞ்சில் தொட்டு முகத்தில் பூசி அரைமணிநேரம்  சென்றதும் முகத்தைக் கழுவி விடுங்கள். தினமும் இப்படிச் செய்தால் நாளடைவில் முகம் பளிச்சிடும்.

No comments:

Post a Comment