Saturday, 20 June 2020

தர்பை புல்


தர்பை புல் வீட்டில் இருந்தால் தீய சக்திகள் அண்டாது!

தர்பை எல்லா இடங்களிலிலும் வளராது. 
மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும்.
தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். 

எனவே கிரஹன காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க, தர்பையை பயன்படுத்துகிறோம். 

தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் துர்சக்திகளின் நடமாட்டம் இருக்காது

இந்த புல் வீட்டில் இருந்தால் தீய சக்திகள் அண்டாது!

தர்ப்பை புல், இறைவனுக்கும், ஜீவனுக்கும் தொடர்புடைய பாலமாக கருதப்படுகிறது.
 
தர்பை சுபத்தை, புனிதத்தன்மையை தருவது, எல்லா பாவங்களையும் போக்க வல்லது.
இந்த புல்லில் அதிகமான தாமிர சத்து உள்ளது. நமது உடலில், வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது.

 கிரகண காலத்தில்,  தர்பைக்கு வீரியம் அதிகமாகும், ஆகவே தான் கிரகண காலத்தில், உணவு பண்டங்களில் கிரஹண சக்தி தாக்காமல் இருக்க தர்பையை போடுவது வழக்கம்.

சூரிய கிரகணத்தின் போது உணவுப் பொருள்களிலும், குடிநீரிலும் சிறிது தர்பைப் புல்லைப் போட்டு வைத்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். 

மேலும், தர்பைப் புல்களின் காற்றுபட்ட இடங்களில் தொற்றுநோய் ஏற்படாமலிருக்கும் என்பதால், இதை கிராமத்து வீட்டு வாசல்களில் கொத்தாகக் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள்.

No comments:

Post a Comment