Tuesday, 14 July 2020

அகத்தியர் சுண்டைக்காய்

#சுண்டைக்காய்

கொரனா மாதிரி கிருமிகளின் எதிர்ப்பு மருந்தாக சுண்டைக்காய் இருக்கிறது என்கிறார் அகத்தியர் பெருமான் தனது வைத்திய நிகண்டு நூலில்....

நெஞ்சின் கபம் போம்
நிறை இருமி நோயும் போம்
விஞ்சு வாதத்தின் விளைவு போம்
வஞ்சியரே வாய் கசபிக்கும் மாமலையில் விளையும் சுண்டைக் காயை சுவைப்பதர்கே
                       -   அகத்தியர்

அட அட நெஞ்சில் எந்த கபச் சளியும்
நீக்கும்.  எந்த கிருமியுனாலும் வரும் நோய்களும் போய்விடும். வாதசுரம் வலியும் போக்கும்  அப்புறம் என்ன இந்த அறிகுறி அனைத்தும் கொண்ட கொரனா வைரஸ் மட்டும் தப்பி விடுமா

அன்பர்களே பத்து சுண்டைக் காயை 
அல்லது சுண்ட வத்தலை கலப்படமில்லாத பசு நெய்யில் அல்லது கலப்படமில்லா தேங்காய் எண்ணெயில் அல்லது கலப்படமில்லாத நல்லெண்ணெயில்  வறுத்து  
மெது மெதுவாக 
ஒன்று ஒன்றாக
 சுவைத்து  சுவைத்து சுவைத்து
 மூன்று நாள் சாப்பிட்டு வரவும்.

 பின் இருநாள் இடைவெளி விட்டு மீண்டும் சாப்பிட மேலே சொன்ன நோய்கள் குணமாகிறது.

வாதச் கபச் சளி இருமல் வலி  சுரம் நீக்குகிறது 
காச பணமா வீட்டுலே உணவே மருந்து  கொரனாவுக்கு மருந்தாக இல்லையனால் கூட அந்த கொரனாவுக்கு தீவிர எதிர்ப்பாக இருக்கலாம் அல்லவா இந்த சுண்டைக்காய்.

 சுண்டைகாயின் மகத்துவம் தெரியாமல் படித்திவிட்டு போகாதீர்கள்.

என்னுடைய  நண்பர் டாக்டர் ஒருவருக்கும் கட்டுக்கடங்காத கபச்சளியை இரண்டே நாளில் கட்டுப் படுத்தியிருக்கிறது. நான் ஒரு தடவை அவருக்கு சொல்லி.   குடும்பங்கள் எல்லாரும் சுண்டக்காய் கூட்டு அல்லது சுண்டக்காய் வத்தல் கொழம்பாவது வைத்து சாப்பிடுங்க வாரத்தில் மூன்று நாட்கள் எப்போதும்....

(1)சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

(2)சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

(3)பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.

(4)சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

(5)சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.

(6)சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

(7)சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

(8)சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.

(9)சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

(10)சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.

No comments:

Post a Comment