Thursday, 9 July 2020

கபசுரக் குடிநீர்: யார் எவ்வளவு பருகலாம்

கபசுரக் குடிநீர்: யார் எவ்வளவு பருகலாம்?



கொரோனா தொற்றின் பிரதான அறிகுறியான காய்ச்சல் மற்றும் சளியை சமாளிக்க அருந்தப்படும் சித்த மருத்துவ குடிநீரான கபசுரக் குடிநீர் பருகும் அளவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படியே பொது மக்கள் அதை அருந்தவேண்டும் என்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் கபசுரக்குடிநீரின் பயன்பாடு குறித்த விரிவான ஆய்வு நடைபெற்றுவருகிறது.

ஆரோக்கியமான குழந்தைகள், முதியவர்கள், இளம் வயதினர், கொரோனா நோயாளிகள் என ஒவ்வொருவருக்கும் கபசுரக்குடிநீரை பருகுவதற்கான அளவை மருத்துவர்கள் வகுத்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் மீனாகுமாரி விரிவாக பேசினார்.

அளவு:
கொரோனா நோயாளி:தினமும் 40 மில்லி மூன்று வேளை

மற்றவர்கள்:50 மில்லி 1 வேளை

5 வயது வரை 10மில்லி 1 வேளை

5-10 வயது வரை 20 மில்லி 1 வேளை

10-15 வயது 30 மில்லி 1 வேளை

மற்றவர்கள் 40-60மில்லி தினசரி 1 வேளை
பருகலாம்

No comments:

Post a Comment