Thursday, 9 July 2020

இட்லி

இட்லி

உலகிலேயே தரம் வாய்ந்த உணவுகளில் முதன்மையாக இருப்பது இட்லி. இட்லியை புளிக்க வைப்பதால் தோன்றும் நல்ல நுண்ணுயிர்கள் உடலுக்கு பல நன்மைகளை செய்கின்றது. கனிமச்சத்துக்களை இலகுவாக உடல் உறிஞ்சிக் கொள்ள அவை ஏதுவாக இருக்கின்றன. அது மட்டுமன்றி ஆவியில் வேக வைப்பதால் அதன் சத்துக்கள் முழுதாக அழிவதில்லை. இதில் மூளைத்திறனுக்கு தேவையான வைட்டமின் B சத்து் உள்ளது. அதனோடு கால்சியம், இரும்புசத்து போன்ற பல கனிமச்சத்துக்கள் உள்ளன

இப்படியான இட்லியோடும் நாம் சேர்த்து உண்ணும் சட்னிகள், மற்றும் சாம்பார் போன்றவை முழுமையான கனிமச்சத்துக்களை நமது உடலுக்கு தருகின்றது.

ஆனால் குளிர்சாதன பெட்டி என்ற ஒன்று வந்த பிறகு இவ்வளவு நன்மை தரும் இட்லியையும், சாம்பாரையும் உடலுக்கு எதிர் விளைவுகளை தரக் கூடிய அளவுக்கு மாற்றி விட்டோம்.

மின்சாரத்தையும், நேரத்தையும் சேமிக்க போய் உடலுக்கு கேடுகளை செய்து வருகிறோம். இதனால் உடலுக்கு தேவையான கனிமச்சத்துக்கள் கிடைக்காமல் போவதோடு வாதம், பித்தம் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறோம்.

இன்னும் ஒரு படி மேல் போய் கடையில் விற்கும் இட்லி மாவை வாங்கி இட்லி, தோசை செய்து உண்டு வருகிறோம். இதன் விளைவுகள் நோய்கள் மட்டுமே.

முன்னோர்கள் பின்பற்றிய அதே முறையை நாம் பின்பற்றுவோமேயானால் உடல் ஆரோக்கியம் என்றும் சிறப்பாகவே இருக்கும்.

உடலுக்கு நன்மை செய்தால் உடல் நமக்கு நன்மையையே செய்யும் என்பதை மனதில் கொண்டு ஆரோக்கியமாக வாழ முயல்வோம்.

No comments:

Post a Comment