Friday, 10 July 2020

கரும்பத்து கரும்படை

கரும்பத்து கரும்படை :

கரும்பத்து கரும்படை தொடை இடுக்கு அக்குள் பகுதிகள் பெண்களுக்கு இடுப்பில் பாவாடை கட்டும் தடம் கன்னம் கண்களுக்குக்கீழ் போன்ற பகுதிகளில் ஏற்படும். சிலர் சுயமாக மருந்துகடைகளில் கிடைக்கும் ஸ்டீரோயிட் கலந்த கீரிம்களை வாங்கி உபயோகிப்பார்கள். தற்காலிமாக அரிப்பும் மாறினாலும் கரும்படை மாறாது.  இதற்கு எளிதான மருந்து இது. சிரமம் பாராமல் செய்து உபயோகித்தால் பூரண குணம் கிடைக்கும்.

கருமையான படை நீங்கி நலம் பெற

சீமை அகத்திப் பூ ........... இருபது கிராம்
மருதாணி இலைகள் அரைத்த விழுது ....ஒரு தேக்கரண்டி
பூண்டு .. இரண்டு பற்கள் .நறுக்கியது
மஞ்சள் தூள் ..... கால் தேக்கரண்டி
செக்கு நல்லெண்ணெய் ........... நூறு மில்லி

செக்கு நல்லெண்ணையை சூடேற்றி அதில் ஒவ்வொரு பொருளாகப் போட்டுக் கொதி வந்தபின் அடுத்த பொருளைப் போட்டு மிதமான சூட்டில் நன்கு தைலமாகக் காய்ச்சி இறக்கி வடி கட்டி ஆறவைத்து பாட்டிலில் சேமிக்கவும்

இந்த தைலத்தை பாதிப்பு உள்ள இடங்களில் இரவில் பூசி மறுநாள் காலை சீகைக்காய் கொண்டு கழுவி வர அனைத்து இடங்களிலும் உள்ள கருமபத்து கரும்படை குணமாகும்.

No comments:

Post a Comment