Tuesday 4 August 2020

பார்லி அரிசி – மருத்துவ பயன்கள்!

பார்லி அரிசி – மருத்துவ பயன்கள்!

பார்லி என்கிற பொருளே உங்களில் பலருக்கு நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் உடம்பு சரியில்லாத போது கஞ்சி வைத்துக் கொடுக்கவாவது உபயோகத்தில் இருந்த பார்லி, இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால், அப்படி மறந்து ஒதுக்க முடியாத அளவுக்கு மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு பொருள் பார்லி

பார்லி அரிசியில் பல வகையான சத்துப் பொருள்களும், சர்க்கரையும் அடங்கியுள்ளது.
ஊட்டச்சத்து மிகுந்த பார்லி உடல் வலிமைக்குப் பெரிதும் உதவுகிறது.
 
பார்லி அரிசியின் மாவுப் பகுதியில் நீரில் கரையக் கூடியதும், பிசுபிசுப்புத் தன்மை உடையதுமான “டெக்ஸ்ட்ரின்” என்னும் சத்துப் பொருளும், சர்க்கரையும் அடங்கியுள்ளன.

கஞ்சி தயார் செய்ய பார்லி அரிசியைக் கொதிக்க வைக்கும் போது இந்தச் சத்துக்கள் கரைந்து ஊட்டச்சத்தாக மாறிவிடுகின்றன. பார்லி அரிசி ஒரு அவுன்ஸ் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சுங்கள்.

தண்ணீர் பாதியாகச் சுண்டியவுடன் அந்தக் கஞ்சியுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறும், சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட்டால் நோயின் காரணமாக ஏற்பட்ட பலவீனத்தைத் தரும். உடல் உறுப்புகளில் ஏற்பட்ட அழற்சியையும் குணமாக்கும்.

கெட்ட கொலஸ்ட்ராலைப்(எல்.டி.எல்) போக்கி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்வதில் பார்லி அரிசி சிறந்து விளங்குகிறது. பார்லியில் உள்ள பீட்டோ குளுக்கான் என்ற நார்ச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது.

பார்லியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. பார்லியில் உள்ள வைட்டமின் பி, நரம்புகளைப் பலப்படுத்தும். தினமும் ஒரு வேளை பார்லி அரிசிக்கஞ்சி அருந்தினால் கொலஸ்ட்ரால் கணிசமாகக் குறையும்.

 
இதய நோயாளிகளுக்கு பார்லி அற்பு தமான ஒரு உணவு. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால், இது இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்தில் ப்ரோபியானிக் என்கிற அமிலம் இருக்கிறது. அது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. அதனால்தான் இதய நோயாளிகளுக்கு பார்லி நல்லது.

பார்லியில் பீட்டா க்ளூக்கோன் அதிகம். அதுவும் கொலஸ்ட்ராலை குறைக்கவல்லது. இந்த பீட்டா க்ளூக்கோனானது, பித்த நீருடன் சேர்ந்து, கொழுப்பை மலத்தின் வழியே வெளியேற்றி விடும். உடலிலுள்ள நச்சு நீரை வெளியேற்ற வல்லதால், எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பார்லி சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

நம் உடலிலுள்ள நிணநீர் சுரப்பிகள்தான், உடலின் நீர்ச்சத்துப் பராமரிப்புக்குக் காரணம். அது அடைக்கப்பட்டால் உடலில் தண்ணீர் தேங்கிவிடும். பெரும்பாலும் காய்ச்சல் நேரத்தில் இந்த நிணநீர் சுரப்பிகள் அடைபடுவதால், தேங்கிய நீர்ச்சத்தை வெளியேற்ற பார்லி கொடுக்கப்படுகிறது.

கோதுமையிலும், ஓட்ஸிலும் நார்ச்சத்து இருந்த போதிலும் தயாரிக்கும் பொழுது அவைகளிடத்திலிருக்கும் நார்ச்சத்து ஓரளவு குறைந்து போகின்றன. ஆனால் பார்லியில் பீட்டோ குளுக்கான் என்ற நார்ச்சத்து எந்த வகையான தயாரிப்பு முறையிலும் அழிவதில்லை. இதுதான் பார்லியின் சிறப்புக் காரணம். இது உடம்பில் இருக்கிற சர்க்கரையின் அளவைக் குறைக்கும். பார்லியில் இருக்கும் நார்ச்சத்து சக்திமிக்கது.

பார்லி சூப்

என்னென்ன தேவை?

பார்லி – 1 டேபிள்ஸ்பூன், பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் – கால் கிலோ,
பூண்டு (விரும்பினால்) – 5 பல்,
மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப,
கொழுப்பு நீக்கிய பால் – சிறிது.
எப்படிச் செய்வது?

பார்லியை 3 டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அரை வேக்காடு வெந்ததும், நீளநீளமாக நறுக்கிய காய்கறிகள், பூண்டு சேர்க்கவும். காய்கறிகள் ரொம்பவும் குழைவாக வேகாமல் பார்த்துக் கொள்ளவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, பால் விட்டுப் பரிமாறவும்.

சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் பார்லியும் ஒன்று. டயட் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்பிணிப் பெண்கள் என அனைவரும் பார்லியை தினமும் கூட சாப்பிடலாம்.

பார்லி உட்கொள்வதால், உடற்சக்தி அதிகரிக்கிறது, இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொழுப்பை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும், இது சிருநீரத்தின் செயலாற்றலை ஊக்குவித்து செரிமான கோளாறுகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.

பார்லியை உட்கொள்வதால், உடற்சக்தி மேம்படுகிறது. மேலும், இது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தவிர்த்து, உடல்பருமன் அதிகரிக்காமலும் பாதுகாக்க உதவுகிறது...

இதய நலன்
பார்லியில் இருக்கும் தாவர ஊட்டச்சத்துகள் இயற்கையகாவே புற்றுநோய்யை எதிர்க்கும் தன்மை கொண்டதாகும். இது மார்பக மற்றும் ஹார்மோன் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும், இது இதய கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும் வெகுவாக பயனளிக்கிறது.

பெருந்தமனி தடிப்பு
பார்லியில் இருக்கும் நியாஸின் உடலில் கொலஸ்ட்ரால் அளவை ஒட்டுமொத்தமாக குறைத்து இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

இரத்த கொழுப்பு அளவு
பார்லியில் நார்ச்சத்தும் பெருமளவு இருக்கிறது. இது இரத்த கொழுப்பை குறைக்கவும், செரிமானத்தை ஊக்குவிக்கவும் செய்கிறது. இதனால் உடல் எடைக் குறையவும் பார்லி பயன் தருகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி
பார்லியில் இருக்கும் வைட்டமின் சி சத்து உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வலுவூட்டுகிறது. இதனால், சளி, காய்ச்சல் போன்றவை அவ்வளவாக அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

இரும்புச்சத்து
இதிலிருக்கும் இரும்புச்சத்து இரத்தத்தின் அடர்த்தியை சீராக்குகிறது. இதனால் இரத்த சோகை, மயக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும் பார்லி சிறுநீரகத்தின் செயலாற்றல் மேம்படவும் பயனளிக்கிறது.

பித்தப்பை கற்கள்
அன்றாட உணவில் பார்லியை சேர்த்துக் கொள்வது பித்தப்பை கற்கள் உண்டாகாமல் உடல்நலத்தை பாதுகாக்கிறது. இதிலிருக்கும் எளிமையாக கரையும் தன்மையுடைய புரதம், பித்தப்பை கற்கள் அபாயத்தை வெகுவாக குறைக்க செய்கிறது.

எலும்பு தேய்மானம்
பார்லியில் இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்றவை எலும்பிகளின் வலிமையை உறுதியாக்குகின்றன. முக்கியமாக இதிலிருக்கும் பாஸ்பரஸ் எலும்பு மற்றும் பல் சார்ந்த கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.

No comments:

Post a Comment