Monday 3 August 2020

சரியாக சுவாசித்தாலே கொரோனா வைரஸ் இறந்துவிடுமாம்… மருந்தியலுக்காக நோபல் பரிசு பெற்ற அறிஞர் விளக்கம்

சுவாசித்தல் என்பது உயிரினங்கள் வாழ்வதற்கு மிக மிக அடிப்படையான ஒன்று. நாம் முறையாக சுவாசித்தாலே நிறைய நோய்கள் சரியாகும் என்று நம்முடைய முன்னோர்களான சித்தர்கள் நமக்கு சொல்லியிருக்கிறார்கள். அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இந்த கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வருகின்ற இந்த வேளையில், நாம் முறையாகச் சுவாசித்தாலே
கொரோனா வைரஸ் இறந்துவிடும் என்று 1998 ஆம் ஆண்டு மருந்தியலுக்காக நோபல் பரிசுபெற்ற லூயிஸ். ஜே. இக்னாரோ தெரிவித்திருக்கிறார்.

நாம் மூக்கு வழியாக சுவாசிக்கும் போது நைட்ரிக் ஆக்சைடு நேரடியாக நம்முடைய நுரையீரலை அடைகிறது. இது நுரையீரலில் உள்ள கொரோனா வைரஸ் பெருக்கத்தைத் தடுக்க வழிவகுக்கிறது.

நாவல் கொரோனா வைரஸ் நம் உடலில் பல்கிப் பெருகுவதைத் தடுப்பதற்காக, இணையத்தில் ஏராளமான செய்திகளும், செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை ஆகியவை குறித்தும் ஏராளமான விஷயங்கள்உலவுகின்றன.

COVID-19 நோய் தாக்கத்திலிருந்து தங்களைத் தாங்களே, அதிக நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலில் உருவாக்கிக் கொள்ள ஒருவர் செய்ய வேண்டிய சில வாழ்க்கை முறை மாற்றங்களையும் பலரும் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். அதில் சில சரியானதாகவும் இருக்கும். சில தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன.

இதுகுறித்து அறிஞர்களிடையே நடைபெற்ற உரையாடலில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு நபர் மூக்கு வழியாக முறையாக சுவாசித்து, வாய் வழியாகவும் முறையாக சுவாசத்தை வெளியேற்றுகிற பொழுது, அது அவர்களின் உடலுக்கு அதிக நன்மை பயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1998 ஆம் ஆண்டில் உடலியல் மற்றும் மருந்தியல் துறை விஞ்ஞானியான, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற லூயிஸ் ஜே. இக்னாரோ, நாசி துவாரங்கள் நைட்ரிக் ஆக்சைடு எனப்படும் வாயுவை அதிகமாக உற்பத்தி செய்வதால், இந்த சுவாச முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வு மூலம் நிரூபித்திருக்கிறார். இந்த மூலக்கூறானது, நுரையீரல் வழியாக இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது.

ஒருவர் மூக்கு வழியாக சுவாசிக்கும்பொழுது, நைட்ரிக் ஆக்சைடு நேரடியாக அவர்களின் நுரையீரலை சென்று அடைகிறது. இது நுரையீரலில் உள்ள கொரோனா வைரஸ் தன்னைத் தானே நகலெடுத்து, உடல் முழுவதும் பரவுவதைத் தடுக்க வழிவகுக்கிறது. மேலும், இது இரத்தத்தில் அதிக ஆக்ஸிஜன் செறிவை ஏற்படுத்தி, நமக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

மனித உடல் தொடர்ந்து நைட்ரிக் ஆக்சைடை உருவாக்குகிறது. இது எண்டோடெலியம் உருவாக உதவுகிறது. நம் உடலில் உள்ள தமனிகள் மற்றும் நரம்புகளில், குறிப்பாக நுரையீரலில் ஏற்படுகின்ற.
உயர் இரத்த அழுத்த சிக்கல்களைத் தடுக்க உதவும் தமனிகளின் தசையை மென்மையாக்க எண்டோடெலியம் உதவுகிறது. இது மற்ற உறுப்புகளிலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. தவிர, சாதாரணமாக தமனிகளில் இரத்த உறைவைத் தடுக்கவும் நைட்ரிக் ஆக்சைடு உதவுகிறது. அதனால் நாம் முறையாக நாசித் துவாரங்களின் வழியே சுவாசிக்கின்ற பொழுது, அதிலிந்து வெளிப்படும் நைட்ரிக் அமிலம் கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து, அவற்றைக் கொல்லச் செய்யும் ஆற்றல் கொண்டிருக்கிறது என்கிறார் லூயிஸ். அதனால் முறையாக சுவாசிப்போம். கொரோனாவை வெல்வோம்.


No comments:

Post a Comment