Sunday, 23 August 2020

நீராகாரம் அல்லது பழஞ்சோறு

நீராகாரம் அல்லது பழஞ்சோறு  

நீராகாரம் அல்லது பழஞ்சோறுஎன்பது இன்றும் கூட நம் கிராமங்களில் பாவனையில் உள்ள ஒரு எளிய, சிறப்பான உணவு ஆகும். உழைக்கும் மக்கள் உடல் சூடு தனிய இதனையே உண்கிறார்கள்.  இந்த உணவை American Nutrition Association ஆய்வு படுத்தி அதில் உள்ள பல நன்மைகளை கண்டறிந்துள்ளனர்.

பொதுவாக குளிர்சாதன பெட்டியில் வைத்து உண்ணும் உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும். ஆனால் மிஞ்சிய சோற்றில் நீரை ஊற்றி வைத்து விட்டு காலையில் அதனை உண்ணும் பொழுது அது ஆரோக்கியத்துக்கு மிக நன்மையை தரும். ஏனெனில் இதில் lactic acid bacteria எனும் நுண்ணுயிர்கள் ஏராளமாக உருவாகின்றன. இது உணவின் ஊட்டச்சத்துக்களை அதிகரிப்பதோடு வயிற்று புண் உட்பட வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களையும் குணமாக்குகிறது.

இதில் இருக்கும் நார்சத்து காரணமாக மலச்சிக்கல் நீங்கும்.

மூளையை வளமாக்கும் வைட்டமின் பி6, நரம்பு மட்டும் ரத்த அணுக்களை ஆரோக்கியப்படுத்தும் வைட்டமின் பி12 போன்ற கனிமச்சத்துக்கள் இதில் உள்ளன.

உடல் சூட்டை தணிப்பதோடு, நோய் எதிர்ப்புசக்தியையும் மேம்படுத்துகிறது.
வைட்டமின் E சத்தும் கிடைப்பதால் தோல் வனப்பையும் பேணுகிறது.

நீராகாரம் செய்ய புழுங்கல் அரிசிகள் அல்லது கை குத்தல் அரிசிகள் மிகச் சிறந்தது. அதனோடு துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய இஞ்சி, வெங்காயம், கல் உப்பு மற்றும் லெமன் சாறு கலந்து பிசைந்து உண்ணும் பொழுது முழு ஆரோக்கியமான காலை உணவாக இது அமையும்.

சோறு மிஞ்சவில்லை என்றால் மாலை நேரத்தில் கொஞ்சமாக அரிசியை சமைத்து நன்றாக ஆற வைத்து இரவில் நீர் ஊற்றி வைக்கலாம். இதற்கு மண்பானை  மிக நல்லது.

எளிய உணவின் மூலம் நிறைந்த பயனை பெற்று ஆரோக்கியம் பேண இதனை பதிவிடுகிறேன். முயற்சி செய்யுங்கள்.

No comments:

Post a Comment