மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு உதவிய ஸ்ரீ கிருஷ்ணர், அந்த மகா யுத்தத்திற்கு பிறகு மரணத்தை தழுவினார். அவரின் மரணத்தை பற்றி பல வாக்குவாதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. தன்னுடைய 125வது வயதில் ஸ்ரீ கிருஷ்ணர் இறந்தார் என சிலர் நம்புகின்றனர். அவரின் வாழ்க்கையை பற்றி ஆராய்ச்சி செய்த இன்னும் சிலரோ, அதனடிப்படையில், அவர் 88 வயதில் இறந்தார் எனவும் கூறுகின்றனர். இந்த வாக்குவதாங்களுக்கு இடையே அவருடைய மரணத்தை பற்றி நம் சமுதாயத்தில் பல கதைகள் உலா வருகின்றன. இருப்பினும் சமயஞ்சார்ந்த நூல்களின் படி, கிருஷ்ண அவதாரம் முடிந்தது பற்றி ஒரே கதை மட்டுமே உள்ளது. ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் முடிந்தது பற்றிய உண்மையான கதையை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்... துவாரகைக்கு விஸ்வாமித்ரரின் வருகை விஸ்வாமித்ர முனிவர், கன்வா மற்றும் நாரதர் ஆகிய மூவரும் ஒரு முறை துவாரகைக்கு வருகை தந்தார்கள். அப்போது சில இளைஞர்கள் ஒரு பையனுக்கு பெண் வேடமிட்டு இருந்தனர். ரிஷிகளிடம் சென்ற அவர்கள், அந்த பெண் கர்ப்பமாக இருப்பதாகவும், அவளுக்கு பிறக்க போவது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா எனவும் கேட்டனர். முனிவரின் சாபம் அந்த இளைஞர்களின் கேலி நாடகத்தை அந்த ரிஷிகள் விரும்பவில்லை. அதனால் அந்த பெண்ணுக்கு பிறக்க போவது எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் குலத்தையே அழித்து விடும் என சபித்தனர். கர்ப்பிணி பெண் தோற்றத்தை பெற வேண்டி, அந்த சிறுவன் தன் வயிற்றில் ஒரு இரும்புத் துண்டை மறைத்து வைத்திருந்தான். இதை கேள்விப்பட்ட பலராமன் அந்த இரும்பு துண்டை பொடியாக்கினான். அதனை சமுத்திரத்தில் தூக்கி எரியவும் செய்தான். மிஞ்சியிருந்த ஒரு சிறு இரும்புத் துண்டையும் தூக்கி எறிந்தான். போர் முடிந்த 36 வருடங்கள் கழித்து போர் முடிந்த 36 வருடங்கள் கழித்து, வ்ரிஷ்னிகள் அனைவரும் சுற்றுலா சென்றனர். அனைவரும் மதுபானம் பருகினர். பாரத போரில் எதிர் எதிரணிகளில் இருந்த க்ரிதவர்மா மற்றும் சத்தியாகி ஆகிய இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. வெகு விரைவில் இந்த சண்டையில் அனைவரும் கலந்து கொண்டனர். கடற்கரைகளில் வளர்ந்து இருந்த கடல் செடிகளின் திடமான தண்டுகளை எடுத்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். இதில் அனைவரும் இறந்தனர். இரும்புத்துண்டு பொடியில் இருந்து முளைத்த கடல் செடிகள் கிருஷ்ணரின் மகனான சத்யாகி மற்றும் க்ரிதவர்மா ஆகிய இருவரும் இறந்தனர். கிருஷ்ணர், பாலராமன், தருகா மற்றும் அவரின் தேர் மட்டுமே மீதமிருந்தது. கடலுக்குள் வீசப்பட்ட இரும்புத்துண்டு பொடியில் இருந்து முளைத்தது தான் அந்த கடல் செடிகள். தன் நிலை மறந்த நிலையில் யோகாவில் ஈடுபட்ட பலராமன் தன் உடலை அழித்தான். மிகப்பெரிய வெள்ளை பாம்பாக உருவெடுத்த அவன் கடலுக்குள் விழுந்தான். விஷ்ணு பகவானின் படுக்கையாக கருதப்பட்ட சேஷநாகத்தின் அவதாரமாக அவன் கருதப்பட்டான். மனம் உடைந்து போன கிருஷ்ணர் மனம் உடைந்த கிருஷ்ணர் ஒரு மரத்திற்கு அடியில் அமர்ந்திருந்தார். அவரை கடந்து சென்ற ஒரு வேடன், அவரை மான் என தவறாக நினைத்து விட்டான். கிருஷ்ணர் மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டிருந்தார். அந்த இரும்புத் துண்டில் இருந்து செய்யப்பட்ட அம்பை அந்த வேடன் கிருஷ்ணர் மீது எய்தான். தன் ஆன்மாவில் நுழைந்த அந்த அம்பு கிருஷ்ணரின் உயிரை பறித்தது. அவர் உடலை விட்டு ஆன்மாவும் பிரிந்தது. கிருஷ்ணரின் கடைசி ஆசை அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாண்டவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது கிருஷ்ணரின் ஆசை என்பதால், துவாரகைக்கு வந்தான் அர்ஜுனன். கிருஷ்ணரின் தந்தையான வாசுதேவன் யோகா மெல்லாம் தன் உடலை பிரிந்தார். அவருடைய கடைசி காரியத்திற்கு தங்களின் கணவன்களின் உடலோடு அவர்களும் கலந்து கொண்டனர். குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஹஸ்தினாபுரத்திற்கு சென்ற அர்ஜுனன் அனைத்து பெண்களையும் குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து கொண்டு ஹஸ்தினாபுரத்திற்கு புறப்பட்டான் அர்ஜுனன். அவர்கள் சென்றவுடன் துவாரகையை கடல் விழுங்கியது. போகும் வழியில் ஒரே ஒரு ஆண் துணையுடன் பல பெண்கள் வருவதை கவனித்த கொள்ளையர்கள் அவர்களை தாக்கி, பெண்களையும் செல்வங்களையும் எடுத்துச் சென்றனர். அர்ஜுனனின் அனைத்து வில் வித்தைகளும் அஸ்திர அறிவுகளும் தோற்று போயின. வெறுத்துப் போன அர்ஜுனன் யுதிஷ்டரிடம் சென்று நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினான். வருத்தத்தில் மூழ்கிய பாண்டவர்கள் பாண்டவர்களும் வருத்தத்தில் மூழ்கினர். திருதராஷ்டிரன், காந்தாரி, குந்தி மற்றிம் விடூரா ஆகியோர் காட்டிற்குள் சென்று வாழ்ந்து தவம் புரிய புறப்பட்டனர். தன்னிலை மறந்த நிலையில் புரிந்த தவத்தால் விடூரா தன் உடலை துறந்தான். மற்ற அனைவரும் வனத்தில் மூண்ட காட்டுத்தீயில் உயிரை விட்டனர்.
No comments:
Post a Comment