Sunday, 16 August 2020

சிரஞ்சீவி அஸ்வத்தாமன் மீது துரியோதனனுக்கு வந்த சந்தேகம் - அழிந்த கவுரவர்கள்

நமக்கு யார் மீதாவது சந்தேகம் வந்தால் அதை தீர்க்க வேண்டும் அப்போதுதான் நமக்கு நிம்மதி ஏற்படும். . சந்தேகம், சந்தோஷத்தின் எதிரி. அது மிகப்பெரிய நோய். இதற்கு மகாபாரதத்திலேயே உதாரணம் உள்ளது. அஸ்வத்தாமன் மீது துரியோதனன் பட்ட சந்தேகம் போரில் கவுரவர்கள் அழிந்து போகும் நிலை ஏற்பட்டு விட்டது. பாண்டவர்கள் கவுரவர்கள் இடையே ஏற்பட்ட பங்காளி சண்டையில் சற்றும் தொடர்பில்லாத பலரும் மரணமடைந்தனர். துரோகமும் வஞ்சகமும் சூழ்ச்சியும் மகாபாரத்தில் பல கிளை கதைகளை உருவாக்கியுள்ளது. அதுசரி சந்தேகம் எப்படி துரியோதனனைச் சேர்ந்த கவுரவர்களின் வாழ்க்கையில் சாவுமணி அடித்தது என்று பார்க்கலாம்.


கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் யுத்தம் நடக்கப் போவது உறுதியாகிவிட்டது. இதை நன்கு அறிந்த கிருஷ்ண பரமாத்மா, துரியோதனிடம் சமாதான துாது சென்றான். யுத்தம் வந்தால், கவுரவர்கள் பக்கம், பீஷ்மர், துரோணர், அவர் மகன் அஸ்வத்தாமன், கர்ணன் என பல மாபெரும் வீரர்கள் சண்டையிடுவார்கள் என கிருஷ்ண பரமாத்மாவுக்கு தெரியும்.

அதிலும், அஸ்வத்தாமன் சாகா வரம் பெற்றவன். சீரஞ்சீவியான அவன், துரியோதனன் பக்கம் சேனாதிபதியாக களம் இறங்கினால், பாண்டவர்களால் எப்படி வெற்றி பெற முடியும் என, பரமாத்மா ஆலோசித்தான்.

குரு பெயர்ச்சி 2019-20: திருவாதிரை நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள் - பரிகாரங்கள்


அஸ்வத்தாமனை அழைத்த கண்ணன்
அஸ்தினாபுரத்துக்கு சென்ற பரமாத்மா, திருதராஷ்டிரன், துரியோதனன், கர்ணன், பீஷ்மர், என பலரையும் சந்தித்து வணக்கம் தெரிவித்தான்.

அஸ்வத்தாமனை பார்த்த கண்ணன், அவனை தனியாக அழைத்தான், இதை துரியோதனன் பார்த்துக் கொண்டிருந்தான்.


அஸ்வத்தமன் கிருஷ்ணன்
அஸ்வத்தாமனிடம் நலம் விசாரித்த கிருஷ்ணன், தன் விரலில் இருந்த மோதிரத்தை நழுவ விட்டான். அது பூமியில் விழுந்தது. அதை குனிந்து எடுத்தான் அஸ்வத்தாமன். கிருஷ்ணனிடம் மோதிரத்தை தர போன அஸ்வத்தாமனிடம், வானத்தை காட்டி கிருஷ்ணன் பேசினான். அதை துரியோதனன் பார்ப்பான் என்று கிருஷ்ணருக்கு தெரியும். அஸ்வத்தமானும் வானத்தை பார்த்தான் பின்னர் கிருஷ்ணனின் விரலில் அந்த மோதிரத்தை அணிவித்தான் அஸ்வத்தாமன்.



சந்தேகத்தால் அழிந்த துரியோதனன்
இதை பார்த்த துரியோதனன், 'நான் கவுரவர்கள் பக்கம் இருந்நதாலும், பாண்டவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவேன். இது இந்த பூமி மற்றும் வானத்தின் மீது சத்தியம்' என, கிருஷ்ணனிடம், அஸ்வத்தாமன் கூறியதாக, துரியோதனன் கருதினான். இந்த சந்தேகத்தால், அவனை கடைசிவரை சேனாதிபதியாக, துரியோதனன் நியமிக்கவில்லை. கிருஷ்ணர் எதிர்பார்த்ததும் அதைத்தான்.


துரோணர்
குருஷேத்திர போரின் ஐந்தாம் நாளில் குரு துரோணர் பாண்டவ படைகளை நிர்மூலம் செய்துகொண்டிருந்தபோது ,அசுவத்தாமா எனும் இவரது மகன் உயிரோடிருந்தபோதே இறந்ததாக பொருள்படும்படி "அசுவத்தாமா ஹத:" என்று சொல்லி பின்னர் கடைசியில் "குஞ்ஜர" எனும் வார்த்தையைச் சேர்த்தார் தர்மர். கடைசி வார்த்தை காதில் விழாதபடி கிருஷ்ணர் பாஞ்சசன்யத்தை முழக்க, மகன் இறந்ததாக நினைத்து மனமொடிந்த துரோணர் வில்லை கீழே போட்டுவிட்டார். இதனால் தர்மனும் சத்தியத்திலிருந்து தவறினான்.
துரோணரின் மரணத்திற்கு காரணம்

அந்த சமயத்தில் பீமன், துரோணரை பார்த்து "பிராமணராகிய நீங்கள் குலத்தொழிலை விட்டு போர் புரிய வந்ததால் அரசர்களின் அழிவுக்குக் காரணமாகிவிட்டீர்கள். நீங்கள் இந்தப் பாப வாழ்க்கையில் ஈடுபட நேர்ந்தது சாபக்கேடு" என்று துரோணரைக் குற்றம் சாட்டினான். ஆயுதங்கள் இல்லாத துரோணரை திரௌபதியின் சகோதரர் திரிஷ்டத்யும்னனாக பிறப்பெடுத்த ஏகலைவனால் கொல்லப்பட்டார். போருக்குப் பின்னர், துரோணர் மகன் அசுவத்தாமாவால், திரிஷ்டத்யும்னன் கொல்லப்பட்டார்.


கிருஷ்ணர் வதம்
இதற்கும் ஒரு பிளாஸ்பேக் உள்ளது. கிருஷ்ணரும், ருக்மணியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அந்த சமயத்தில் ஜராசந்தனுடன் சேர்ந்து சிசுபாலன் மற்றும் ஏகலைவன் கிருஷ்ணரை எதிர்த்து சண்டையிட்டனர். அதில் சிசுபாலனும் ஏகலைவனும் கொல்லப்பட்டனர் இவர்கள் பின்னாளில் கௌரவப்படைகளுடன் சேர்ந்து பாண்டவர்களுக்கு எதிராக சண்டையிடுவார்கள் என்று தெரிந்துகொண்டதால், கிருஷ்ணர் அவர்களை கொன்றதாக துரோண பர்வத்தில் கூறப்பட்டிருக்கிறது.


துரோணரை கொன்ற திரிஷ்டத்யும்னன்
எது எப்படி இருந்தாலும் ஏகலைவன் சிறந்த வில்வித்தை வீரனாகவும், அதேசமயம் குருபக்தி, மற்றும் அவனுடைய நேர்மையாலும் அவனுக்கு கிருஷ்ணர் உனக்கு துரோணர் செய்த துரோகத்திற்கு பலனாக நீ மறுபிறப்பெடுத்து திரிஷ்டத்யும்னனாக பிறப்பெடுப்பாய் உன் கையாலே துரோணர் கொல்லப்படுவார் என்ற வரத்தையும் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதென்ன துரோணர் செய்த துரோகம் என்று கேட்கிறீர்களா?. அதற்கும் ஒரு பிளாஷ்பேக் உள்ளது.


குருதட்சணை
வேடர் குலத்தில் பிறந்த ஏகலைவனுக்கு தனது அப்பாவை போல வில்வித்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை, அஸ்தினாபுரத்தில் துரோணாச்சாரியரிடம் ஆசையாக கேட்டுப்போனார்கள். ஆனால் அவரோ சத்ரியர்களுக்கு மட்டுமே வில்வித்தை கற்றுக்கொடுப்பேன் என்று கூறி விரட்டியத்தார். ஆனாலும் மனம் தளராமல் வில்வித்தையை கற்று தேர்ந்தான் ஏகலைவன். அர்ஜூனனை விட சிறந்த வில்லாலன் ஏகலைவன் என்பதை அறிந்து அவரது கட்டை விரலையே குரு தட்சணையாக கேட்டார். அதை கேட்டு சற்றும் யோசிக்காமல் குரு தட்சணை கொடுத்தவர் ஏகலைவன். குருவாகவே இல்லாமல் குரு தட்சணையை ஏமாற்றி வாங்கிக் கொண்டார் துரோணாச்சாரியர். இது ஏகலைவனுக்கு செய்த துரோகம்தானே. அந்த துரோகத்திற்குத்தான் மரணத்தை பரிசளித்தான் திரௌபதியின் சகோதரர் திரிஷ்டத்யும்னனாக பிறந்த ஏகலைவன்.


பாண்டவர்களுக்கு ஆதரவு
17ம் நாள் யுத்தத்தில், துரியோதனன் பீமனால் தாக்கப்பட்டு, கால்கள் தொடைகள் உடைந்து, யுத்தகளத்தில் இருந்தான், அப்போது, அவனை அஸ்வத்தாமன் சந்தித்தான். 'நான் சிரஞ்சீவி வரம் பெற்றவன்; என்னை சேனாதிபதியாக நியமித்திருந்தால், யுத்தத்தின் முடிவு மாறியிருக்கும்' என்றான் அஸ்வத்தாமன்.

அதற்கு துரியோதனன், 'நீதான், பாண்டவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என கிருஷ்ணனிடம் சத்தியம் செய்து கொடுத்தாயே' என, கேட்டான்.


சந்தேகத்தால் வந்த தோல்வி
'யார் சத்தியம் செய்தது' என, கேட்ட அஸ்வத்தாமனிடம், கிருஷ்ணன் துாது வந்த போது நடந்த சம்பவத்தை தெரிவித்தான் துரியோதனன். இதை கேட்ட அஸ்வத்தமான் விரக்தியில் சிரித்தான். 'கிருஷ்ணனின் விரலில் இருந்த மோதிரம் கீழே விழுந்தது. அதை தான் எடுத்து கொடுத்தேன். சத்தியம் எதுவும் செய்யவில்லை. என் மீது சந்தேகப்பட்டு, உன் தோல்வியை தேடி கொண்டாய். அப்போதே இது பற்றி என்னிடம் கேட்டிருந்தால், நடந்தது தெரிந்திருக்கும். இதுவும், அந்த கிருஷ்ணனின் விளையாட்டுதான்' என்றான் அஸ்வத்தாமன். சந்தேகம் ஏற்பட்டால், அது பற்றி சம்பந்தபட்டவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் துரியோதனன் போல், தோல்வியை தழுவ வேண்டியது தான்.


No comments:

Post a Comment