Saturday, 22 August 2020

மாடிப்படி அமைக்க சிறந்த இடம் மற்றும் அமைக்கும் முறை

ஒரு இடத்திற்கு தலைவாசல் அமைப்பதில்
எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறோமோ அது போல்தான் ஒரு கட்டிடத்திற்கு படிக்கட்டு அமைக்கும்போது மிகவும் கவனமாக செயல்படவேண்டும்.
FILE

ஒரு இடத்தின் நல்ல செயல்பாடுகளுக்கும் தவறான செயல்பாடுகளுக்கும் ஒரு இடத்தில் அமைக்கப்படும் படிகட்டுகள் பெரும் பங்கு வகிக்கும்.

ஒரு இடதிற்கு உட்புறமாகவும் மற்றும் வெளிப்புறமாகவும் படிக்கட்டினை அமைக்கலாம் அவை வரக்கூடிய இடங்கள்.

ஒரு இடத்திற்கு உட்புறத்தில் படிக்கட்டு அமைக்க விரும்பினால் அதனை தெற்கு அல்லது மேற்கு பகுதி நடுவில் அமைப்பது சிறந்தது.

ஒரு இடத்திற்கு வெளிப்புறத்தில் படிக்கட்டு அமைக்க விரும்பினால் அதனை தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடமேற்கு முலையில் திறந்த வெளி படிக்கட்டு "கேண்டிலிவேர்" ( Cantilever) முறையில் மட்டுமே அமைக்க வேண்டும்

No comments:

Post a Comment