Monday, 7 September 2020

உயிர் பயம்

உயிர் பயம் என்பது மோசமான வியாதி.நிறைய பேரை பார்த்திருக்கிறேன் நமக்கு ஏதாவது ஆகிடுமோன்னு கவலையிலேயே இருப்பாங்க...ஜாதகம் பார்க்க போகும்போது கூட சிலர் எடுத்த உடனே என் ஆயுள் எப்படி இருக்குன்னு சொல்லுங்க சார்...என்பார்கள்..அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை காலைல பத்து மணிக்கு செத்துருவீங்கன்னு ஜோசியர் சொல்லிட்டா இவர் என்ன பண்ணுவார்னு தெரில ..

உயிர் பயம் அதிகம் இருப்பவர்கள் ,ஜாதகத்தில் லக்னாதிபதி கெட்டு சனியும் பாவருடன் கூடி தசாநாதனும் அவர் நின்ற அதிபதியும் கெட்டிருந்து திசாநாதன் மாரகாதிபதியாக இருந்தாலோ மாரகஸ்தானத்தில் இருந்தாலோ ஆயுள் தோசம்.

இவர்கள் திருக்கடையூர் அபிராமி கோயில் செல்வது நல்லது அபிராமி முகத்தை சிறிது நேரம் பாருங்கள் உங்கள் கவலைகள் எல்லாம் தீரும் தன்னம்பிக்கை பிறக்கும் வாழ்க்கை மீது பிடிப்பு உண்டாகும்..உங்கள் பிறந்த நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள் .அபிராமி கருணை, கடல் போன்றது நிச்சயம் காப்பாள்..!!

No comments:

Post a Comment