கடம்ப மரம்
தமிழரின் முதற்பெரும் கடவுளாகக் கருதப்படும் முருகனோடு பொதுவாகத் தொடர்புபடுத்தப்படும் கடம்ப மரம் பற்றிய குறிப்புகள் 27 சங்க இலக்கியப் பாடல்களில் மட்டுமின்றி, சங்கம் மருவிய பக்தி கால இலக்கியங்களிலும் நிறைய உள்ளன.
முருகனுக்கும், திருமாலுக்கும் உரிய மரங்கள் என சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. கலித்தொகை, திருமுருகாற்றுப்படை போன்ற சங்க தமிழ் இலக்கியங்கள் கடம்ப மரம் குறித்து பேசுகிறது.
1977-ம் ஆண்டு இந்திய அரசால், அஞ்சல் தலையில் பொறிக்கப்பட்ட பெருமையுடைய மரமாகும்.
முற்காலத்தில் ஆன்மிகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கடம்ப மரங்களின் சோலையாகத் தான் மதுரை இருந்தது.
இந்தக் காரணத்தினாலேயே மதுரைக்கு கடம்பவனம் என்ற பெயரும் உண்டு. மதுரை மீனாட்சி அம்மனுக்கு கடம்பவனவாசினி மற்றும் கடம்பவனபூவை என்ற திருப்பெயர்கள் உண்டு என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முருகனை கந்தா, கடம்பா என்று அழைப்பதன் மூலமும், கடம்ப மாலையை இனி விட நீ வர வேணும் என அருணகிரிநாதர் முருகனை வேண்டுவதிலிருந்தும் மரத்தின் தெய்வத் தன்மையை அறியலாம்.
கண்ணன் மாயோனுக்கு கடம்ப மலர்கள் மிகவும் பிடிக்கும் என கூறப்பட்டிருக்கிறது.
கடம்ப பூக்கள் மஞ்சள் நிறத்தில் வட்டமாக இருக்கும்.
பூக்கள் அருமையான நறுமணம் கொண்டவை. அத்தர் தயாரிப்பில் பெரிதும் பங்கு வகிக்கிறது.
மரத்தின் வேர், பட்டை, இலை, காய், கனி, விதை அனைத்துமே மருத்துவ குணம் மிகுந்தவை. சிறுநீரகக் கோளாறுகளைப் போக்குகிறது.
சிறுநீர் பிரச்னைகள்,
இரத்த சோகை,
தோல் நோய்கள் ஆகியவற்றை போக்க உதவுகின்றன.
மரத்தின் இலைச் சாறு வாய்ப்புண்ணை குணப்படுத்துவதோடு, தொண்டை அழற்சியையும் போக்கி, வயிற்றுப் பிரச்னையை தீர்ப்பதுடன், ஜீரண மண்டல உறுப்புகள் சீராக செயல்பட உதவும்.
இதனுடன் சிறிது சர்க்கரை மற்றும் சீரகத்தை சேர்த்துக் கொடுத்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
மரத்தின் பட்டையைத் தண்ணீரில் போட்டு காய்ச்சி அந்தத் தண்ணீரைக் குடித்தால் காய்ச்சல் குணமாகும்.
விதையை அரைத்து நீரித்து கலந்து விஷம் குடித்தவர்களுக்குக் கொடுத்தால் விஷம் முறிந்து விடும்.
இலைகளை சிறிது சூடு செய்து காயங்கள், புண்கள் மேல் வைத்து கட்டினால் வலி குறைவதோடு புண்களும் ஆறும்.
மரப்பட்டையின் கஷாயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்.
இவ்வளவு நன்மைகள் நிறைந்த மரங்கள் அழிக்கப்பட்டுதான் மதுரை நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோவிலில் மரம் தல விருட்சமாக இருக்கிறது.
மதுரை மாவட்டத்தில் கிராமங்களில் ஆங்காங்கே காணப்படுகிறது.
பிற மாவட்டங்களிலும் தல விருட்சமாக இருக்கிறது.
சங்க இலக்கியத்தில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ள கடம்ப மரங்கள் அடர்ந்த கடம்பவனத்தை மீள்உருவாக்கம் செய்ய வேண்டும் என்ற ஒரு முயற்சி மதுரை தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை புட்டுத்தோப்பு சொக்கநாதர் கோவிலில் ‘கடம்ப மரம் அறிவோம்’ மண்ணின் மரங்கள் குறித்த விழிப்புணர்வு தேவை அதை போல் இந்த மண்ணின் பூர்வ குடிகள் பற்றிய விழிப்புணர்வும் தேவை.
No comments:
Post a Comment