Monday, 19 October 2020

சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பயன்கள்.:

சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பயன்கள்.:

கிழங்கு வகைகளில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு அதிக ருசி கொண்டது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் கிழங்கு வகையாகவும் உள்ளது.

நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை  இயற்கை நோய் எதிர் பொருட்களாகும். சர்க்கரை வள்ளிக்கிழங்கானது கொழுப்பினை மிகக் குறைந்த அளவில் கொண்டதாக உள்ளது. இதனால் ஒபேசிட்டி  பிரச்சினை உள்ளவர்கள் உட்பட எவரும் எடுத்துக் கொள்ளலாம். 

சர்க்கரைவள்ளி கிழங்கானது நார்ச்சத்து அதிகம் கொண்டதால், உடலில் கொழுப்பானது சேர்க்கப்படுவது தடுக்கப்படுகின்றது, இதனால் நீங்கள் கொஞ்சமும் கவலை இல்லாமல் சர்க்கரை வள்ளிக் கிழங்கினை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் இது ரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதாகவும் உள்ளது. இதனால் உடல் நலம் சரியில்லாதவர்கள் கட்டாயம்  சர்க்கரை வள்ளிக் கிழங்கினை எடுத்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகின்றது.

மேலும் கரு உண்டாகி இருப்பவர்கள் நிச்சயம் இதனை எடுத்துக் கொண்டால், கருவளர்ச்சி சிறப்பாக இருக்கும். கரு உண்டான முதல் 4 மாதங்களில்  மருத்துவர்களே சர்க்கரை வள்ளிக் கிழங்கினை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றனர். மேலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கானது மூச்சு சம்பந்தப்பட்ட  பிரச்சினைகளை சரி செய்வதாக உள்ளது.

நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு  அவசியமான தாது உப்புக்களும் உள்ளது.

No comments:

Post a Comment