Saturday, 24 October 2020

புதன்_சந்திரன்_இணைவு

#புதன்_சந்திரன்_இணைவு 

இத்தகைய சேர்க்கை பெற்றவர்கள் வியாபார தந்திரங்கள் தெரிந்து இருக்கும். குறுகியகால வியாபாரத்தினால் இலாபம் உண்டு. தாய் புத்திசாதுர்யம் மிக்கவராக இருப்பார். ஜாதகர் கலகலப்பானவராகவும் வெகுளிதனம் மிக்கவரும் ஆவார். அரசியல் ஆர்வம் மிக்கவரும் கூட...

பெற்றோருக்கும் ஜாதகருக்கும் கருத்து வேறுபாடு. இரட்டை மனநிலை, உறுதியான முடிவு எடுக்க முடியாத நிலையை தருகிறது. அதிகமாக சிந்திக்கும் போது தலைவலி வருவது, நினைப்பது ஒன்றும் பேசுவது ஒன்றாகவும் இருக்கும். 

இத்தகை சேர்க்கை பெரும் சந்திரன் அமாவாசையை நெருங்கியோ அமாவாசையை அண்மித்து ஒளிதன்மை குறைந்து பாபராகவே இருப்பார். இத்தகைய சேர்க்கையுடன் 6,8 சம்பந்தப்பட்டு லக்னம் மற்றும் அதன் அதிபதி வலு இழந்து இருக்குமானால். சம்பந்தப்பட்ட தசா புத்தி காலங்களில் புத்தி சுயாதீனம் உண்டாகலாம். 

அதிகமாக சிந்தித்து குழம்பிக் கொள்ள வேண்டாம்

No comments:

Post a Comment