Saturday, 24 October 2020

கேது_புதன்_இணைவு

#கேது_புதன்_இணைவு

கிரகங்களில் மோட்சகாரகன் கேதுவும் புத்திக்காரகன் புதனும் இணைந்து ஒரு ராசியில் இருக்கும் ஜாதகர் ஆன்மீக தேடல்களில் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஞானம் அதிகம் இருக்கும். அத்தகைய ஜாதகர் #ஸ்ரீமன்_நாராயணன் மீது அளவு கடந்த பக்தி கொண்டவராக இருப்பார்.

அத்துடன், உறவுகள் வழியே தாய்மாமன் காரனான புதன் உடன் உள்ள கேது உறவை பலவீனபடுத்துவார். மாமனார் இடையே ஆன உறவு பாதித்து விடுகின்றது. ஆன்மீகம் தவிர்ந்த மற்ற அனைத்து புதன் காரகங்களிலும் ஈடுபாடு குறைந்து விடுகின்றது. கலை ஆர்வம் இருக்கும். 
இறை ஞானத்தால் பல விடயங்களை  கற்பதும் இத்தகைய ஜாதகர்களே.

அத்துடன் முன்னோர்கள் பற்றி தேடல் பூர்வீகத்தை விருப்புவது, சித்த மருத்துவம் பற்றி தேடல் இவர்களிடம் இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை. கணித மாமேதைகளாகவும் இருப்பார்கள். 

ஆரம்பகல்வி குளறுபடியாக இருக்கும். திடீரென ஒரு நாள் கல்வியில் பெரும் ஞானம் படைத்தவரகளாக மாறுவதும் இவர்களே. 

No comments:

Post a Comment